Mythological Stories - Tamil
ஸ்ரீ கிருஷ்ணர் – கிருஷ்ணரும், பழம்விற்கும் பெண்மணியும்
ருஷ்ணன் தனது சிறு வயதில் குறும்புகள் செய்தாலும்… அவனது அழகிய முகமும், கள்ளமறியாத கண்களும்… இனிய புன்முறுவலும், தாய் யசோதையை கட்டி அணைக்கச் செய்துவிட்டது

கிருஷ்ணரும், பழம்விற்கும் பெண்மணியும்
காட்சி-1
கிருஷ்ணன், யசோதை, VOICEOVER..
VOICEOVER: கிருஷ்ணன் அவனது சிறுவயதில் துறுதுறுவென்று இருப்பதுடன்… சிறுவர்களில் அதிக குறும்பு செய்பவனாக திகழ்ந்தான்…
VOICEOVER: ஒரு நாள் யசோதை மிகவும் சந்தோஷமாக இருந்தாள்… அன்று கிருஷ்ணனின் பிறந்தநாள்…
யசோதை: கிருஷ்ணா…
கிருஷ்ணன்: ஹ…ஹ…ஹ…
யசோதை: அன்பு மகனே இன்று உனக்கு பிறந்த நாள்… நீ போய் ஒரு கன்று பசுவை ஓட்டி வா… அதை நீ வணங்க வேண்டும்…
VOICEOVER: கிருஷ்ணன் மிகவும் சந்தோஷப் பட்டான்.. உடனே அவன் அன்னத்தைப் போல வெள்ளைப் பசு ஒன்றை… தேர்ந்தெடுத்தான்… கிருஷ்ணன் அதை கட்டி இழுத்து வர முயன்ற போது… கைகளுக்கு அகப்படாமல் அங்கும் இங்கும் ஓடியது… பெரு முயற்சிக்கு பின்னால்… அது அவன் கைகளில் சிக்கியது… அதை முற்றத்திற்கு கொண்டு வர… அவன் முயன்றான்…
VOICEOVER: அப்போது அவன் அங்கே ஒரு உறியில் பானையைக் கண்டான்… அதன் உள்ளே சுவையான வெண்ணை இருப்பதையும் உணர்ந்து கொண்டான்… ஆனால் எப்படி வெண்ணையை எடுப்பது… உயரத்தில் உறியில் தொங்கிய பானையை அடைய… ஏணிகளோ படிகளோ தென்பட வில்லை…. என்ன செய்வது… கடினமாக யோசித்தப் பிறகு…
கிருஷ்ணன்: இந்த கன்றின் முதுகில் ஏறினால் வெண்ணையை சுவைப்பது நிச்சயம்…
VOICEOVER: மெல்ல முயற்சி செய்து… கன்றின் மீதேறி நின்று கொண்டான்… பானையை அவனால் தொட்டு விட முடிந்தது… வெண்ணையை எடுத்த உடனேயே கன்று குட்டி தாவி ஓடி விட்டது… கிருஷ்ணனின் கை வெண்ணை பானையை துழாவிய போது… கன்று ஓடத் துவங்கியதால் அவன் உறியிலேயே தொங்கிய படி ஊசலாடினான்…
கிருஷ்ணன்: அம்மா… அம்மா… அம்மா… ஆ… ஆ…
கிருஷ்ணன்: அம்மா என்னை இறக்கி விடுங்கள்
VOICEOVER: அம்மா…உறியில் கிருஷ்ணன் தொங்கி இருப்பதைக் கண்ட யசோதை… நடந்த நிகழ்ச்சிகளை யூகித்துக் கொண்டாள்…
கிருஷ்ணன்: அம்மா… அம்மா…
யசோதை: ஹ… ஹ… அப்படியே இரு… நான் உன்னை தொடக்கூட மாட்டேன்…
VOICEOVER: உன்னுடைய குறும்புகளுக்கு இதுவே தண்டனையாக அமையட்டும்… நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்…
கிருஷ்ணன் கண்ணீர் விடுவதை யாரால் சகித்துக் கொள்ள முடியும்… தாய் யசோதை மெல்ல கீழே இறக்கி விட்டாள்…
VOICEOVER: கிருஷ்ணன் தனது சிறு வயதில் குறும்புகள் செய்தாலும்… அவனது அழகிய முகமும், கள்ளமறியாத கண்களும்… இனிய புன்முறுவலும், தாய் யசோதையை கட்டி அணைக்கச் செய்துவிட்டது…