Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – குரங்குகளும், மணியும்

வீரம் அவளுக்கு பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது… எனவே எவற்றைஎல்லாம் காதால் கேட்டீர்களோ… அவற்றை உண்மை என நம்பக் கூடாது… தீர ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்

குரங்குகளும், மணியும்

காட்சி-01 அரசன், மூதாட்டி, இளைஞன், அறிவிப்போன், VOICEOVER..

VOICEOVER: முன்னொரு காலத்திலே… ஒரு திருடன் கிராமம் ஒன்றில் வசித்து வந்தான்… ஒரு நாள் அவன் அங்குள்ள கோயிலுக்குள் சென்று… அங்கிருந்த தங்க நகைகளையும், ஒரு வெள்ளி மணியையும் திருடிக் கொண்டு சென்றான்…

VOICEOVER: ஒரு மலைப் பாதையை ஏறிக் கடந்து… அவனது வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது… அவன் காட்டுப் பாதை வழியே கடந்து சென்ற போது… வெள்ளி மணியின் ஓசை ஒரு புலியின் காதுக்கு எட்டியது… மணியோசை கவனத்தை ஈர்த்தபோது… அங்கே திருடன் வந்து கொண்டிருப்பதை கண்ட புலி… அவனை தாக்கிக் கொன்றது… மணி அவன் கைகளில் இருந்து தரையில் விழுந்தது…

VOICEOVER: சிறிது நேரம் கழித்து அவ்வழியே வந்த குரங்குகளின் கூட்டம்… அந்த திருடனின் கையிலிருந்த ஆபரணங்களை எடுத்துக் கொண்டது… அங்கிருந்த குரங்குகள்… மணியை தூக்கிப் போட்டு விளையாடியது… மணியோசை மற்ற குரங்குகளையும் கவர்ந்து இழுக்கவே… ஒவ்வொரு நாளும் இந்த மணி விளையாட்டு தொடர்ந்து நடந்தது…

VOICEOVER: மலை உச்சியில் இந்த மணியொலி ஒலிக்க… அது மலையின் அருகில் இருந்த கிராம மக்களின் காதுகளில் ஒலித்தது… அவர்கள் மணியோசைக்கு மிகவும் பயப்படத் தொடங்கினார்கள்.. இந்த வினோதமான நிகழ்ச்சியை அவர்கள் அனைவரும் கூடி விவாதித்தார்கள்..

VOICEOVER: ஒரு தீரமுள்ள இளைஞன் ஒருவன்… தனக்குள் வீரத்தை வரவழைத்துக் கொண்டு… மலை உச்சிக்கே சென்று பார்த்திடப் புறப்பட்டான்… மலை உச்சியை அடைந்ததும்.. அங்கே திருடன் ஒருவன் உடல் இறந்து கிடப்பது கண்டு… அவன் யாரென்று அறிந்து கொண்டான்…

VOICEOVER: ஆனால் மணியோசையும், அது எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றியும் விவரம் தெரியாமல்… முழித்து நின்ற இளைஞன்… பயத்தினால் மலையை விட்டு இறங்கி ஓடிகிராமத்தை அடைந்தான்… கிராமத்தாரிடம்…

Advertisement

இளைஞன்: கெட்ட எண்ணம் கொண்ட ஒரு திருடனின் சவத்தைமலை உச்சியில் காட்டுக்குள் கண்டேன்… அவனுடைய கெட்ட ஆவியே… இந்த ஒலியை எழுப்புகின்றது என்று நினைக்கின்றேன்.. காட்டுக்குள் வருபவர்களை அந்த கெட்ட ஆவி கொன்று விடும்… அந்த மணியோசை அடுத்த மரணத்திற்காகத்தான் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்…

VOICEOVER: அவனுடைய வார்த்தைகள் கிராம மக்களை மிகவும் பயமுறுத்தியது… மக்கள் மலை உச்சிக்கு செல்ல பயந்தனர்…

மக்களின் பயத்தை அறிந்த அரசன்… ஒரு அறிவிப்பை செய்தான்…

அறிவிப்போன்: உங்களில் யார் ஒருவர்… மலை உச்சியிலிருந்து… அந்த தீய சக்தியை விரட்டுகின்றார்களோ… அவர்களுக்கு நமது அரசர்… கைநிறைய சன்மானங்கள் தருவார்…

மூதாட்டி: மலைக்காட்டின் உச்சியில் தீய ஆவியின் இருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன்… இந்த மணியோசையை யார் எழுப்புகின்றார்கள் என்று கண்டுபிடிப்போம்…

VOICEOVER: நள்ளிரவில் மூதாட்டி மலை உச்சியை அடைந்தாள்… அங்கே இறந்து போன திருடனின் உடலைக் கண்டாள்.. சில விலைமதிப்புள்ள பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டாள்… புலி ஒன்றின் கால் தடத்தையும், திருடனின் சவத்தையும் கண்ட மூதாட்டி நடந்த கதையை யூகித்தாள்…

VOICEOVER: அப்போது அங்கே… வெள்ளி மணியை குரங்குகள் தூக்கிப் போட்டு விளையாடுவதைக் கண்டாள் மூதாட்டி… இதைப் பார்த்த மூதாட்டி… மணியோசை கேட்கும் விதத்தினை புரிந்து கொண்டாள்… உடனே கிராமத்திற்கு திரும்பிய மூதாட்டி… நேராக அரசனைச் சென்று பார்த்தாள்… அரசனிடம்…

மூதாட்டி: அரசே… நீ வாழ்க… என்னால் அந்த மழை உச்சியில் திரியும் தீய ஆவி சக்திகளை விரட்ட முடியும்… அதற்கு சாட்சியாக அந்த மணியை மீட்டுக் கொண்டு வருவேன் அரசே…

Advertisement

அரசன்: நீங்கள் இதை செய்தீர்கள் என்றால்… நான் உங்களுக்கு நன்றி உடையவனாய் இருப்பேன்… உங்களுக்கு எனது ஆட்களின் உதவி ஏதாவது தேவையா…

மூதாட்டி தேவையில்லை அரசே… கொஞ்சம் பழங்களும் பருப்பு வகைகளும் போதும்… சில சடங்குகள் செய்வதற்கு நான் மட்டும் தனியாகவே சென்று வருகிறேன் அரசே… நிச்சயம் தீய ஆவி சக்திகளை விரட்டிடுவேன் அரசே…

அரசன்: நல்லது… நீ இந்தக் காரியத்தை செய்து முடித்தால்… நான் நிச்சயம் உனக்கு சன்மானங்கள் தருவேன்… கைநிறைய பொற்காசுகளை அள்ளித்தருவேன்… ம்…

மூதாட்டி நன்றி அரசே… நன்றி… நான் விரைவில் வருகிறேன்…

VOICEOVER: மூதாட்டி மெல்ல நடந்து மலை உச்சியில் உள்ள காட்டினை அடைந்தாள்… மரங்களின் அடியில் ஓர் இடத்தில்… பழங்களையும், பருப்பு வகைகளையும், பரப்பி வைத்தாள்… குரங்குகளின் வருகையை தூர இருந்த படி… மூதாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்…

VOICEOVER: பழங்களைப் பார்த்த குரங்குகள்… அவற்றை ஆவலோடு எடுத்து உண்டது… பழங்களையும் பருப்புகளையும் ருசி பார்த்தபடி இருக்கும் வேளையில், மூதாட்டி வெள்ளி மணியை எடுத்து… பழங்கள் கொண்டு வந்த பைக்குள் போட்டுக் கொண்டாள்… காட்டை விட்டு கிராமத்திற்குள் வந்து சேர்ந்தாள்… நேராக அரசனிடம் சென்றாள்… அரசனிடம்…

மூதாட்டி அரசே….இதோ… மணி… இது தான் தீய ஆவிகள் உபயோகித்தது… இனி அவை ஒரு போதும் காட்டின் பக்கம் வராது…

அரசன்: ஆஹா… கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது… நான் உறுதி அளித்தது போலவே… இதோ எனது பரிசுத் தொகை…

Advertisement

VOICEOVER: கிராம மக்கள் ஒவ்வொருவரும்… மூதாட்டியின் வீரத்தை மெச்சினர்… அன்று முதல் எந்த ஒரு ஒலியும் கேட்கவில்லை… அதனால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்…

பார்த்தீர்களா குழந்தைகளே… மூதாட்டி எவ்வளவு வீரமானவள் என்று… அவளது வீரம் அவளுக்கு பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது… எனவே எவற்றைஎல்லாம் காதால் கேட்டீர்களோ… அவற்றை உண்மை என நம்பக் கூடாது… தீர ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்

Continue Reading
Advertisement