Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – கூண்டுச் சிங்கம்

ஒரு வார்த்தை கொடுத்தீர்களானால்… கொடுத்த வாக்கைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்

கூண்டுச் சிங்கம்

காட்சி-01 சிங்கம், பிராமணன், மரம், சாலை, முயல்,

VOICEOVER… ஒரு முறை குரூரமான குணம் கொண்ட சிங்கம் ஒன்று… வேடர்களின் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது… கூண்டிலிருந்து அது தன்னை விடுவித்துக் கொள்ள பெரும் முயற்சி செய்தது… ஆனால் அத்தனையும் வீணாகிப் போனது…

அதன் கொடிய குணத்தை அறிந்த காட்டு மிருகங்கள் எதுவும் விடுவிக்க முன் வர வில்லை…

காலம் கடந்தது… ஒரு ஏழை பிராமணன் அந்த கூண்டின் வழியே வந்து சேர்ந்தார்… சிங்கமும் தன்னை விடுவிக்குமாறு பிராமணனிடம் கேட்டது…

சிங்கம்: ஐயா… நான் தவறுதலாக கூண்டுக்குள் சிக்கிக் கொண்டேன்.. தயவு செய்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன்… ஐயா நான் உங்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்…

பிராமணன்: உன்னை விடுவிக்க நான் என்ன முட்டாளா… உன்னை வெளியே விட்டால் உடனே என்னை தின்றுவிட மாட்டாயா

சிங்கம்: இல்லை… என் உயிரைக் காத்த உங்களை ஒரு போதும் கொல்ல மாட்டேன்… இந்த விடுதலைக்கு கைமாறாக… என்னிடமுள்ள நவரத்தின கல்லை… தங்களுக்கு பரிசாகத் தருவேன் ஐயா… ம்..

Advertisement

VOICEOVER… சிங்கத்தின் பேச்சைக்கேட்ட அந்த பிராமணனின் உள்ளம்… பேராசையால் துள்ளியது…

உடனே கூண்டிலிருந்து சிங்கத்தை விடுவித்தார்…

குரூர எண்ணம் கொண்ட சிங்கம் பிராமணரை நெருங்கியது…

சிங்கம்: வாருங்கள் போகலாம்… என் குகைக்கே வந்து பரிசினை ஏற்றுக் கொள்ளுங்கள்…

பிராமணன்: இல்லை இல்லை… எனக்கு பரிசு ஒன்றும் தேவையில்லை… நீ உன் குகைக்கு செல்… குடும்பத்தினர்கள் உன்னைத் தேடுவார்கள்…

சிங்கம்: பிராமணரே சற்று நில்லுங்கள்.. இரண்டு நாட்களாக கூண்டுக்குள் கடும் பசியுடன் கிடந்தேன்… இப்போது என்முன் இரையாக நிற்கும் உங்களை விட்டு விடுவதற்கு… நான் ஒன்றும் முட்டாளில்லை…

பிராமணன்: ஏ.. சிங்கமே உனக்கென்ன புத்தி மழுங்கி விட்டதா… உன் உயிரைக் காப்பாற்றியவன் நான்… என்னைக் கொள்வது… எந்த விதத்திலும் நியாயமே இல்லை… எவரை வேண்டுமானாலும் நீ கேட்டுப்பார்… நீ செய்வது அநியாயம் தான்…

சிங்கம் ம்… நியாயமாவது… அநியாயமாவது… மற்ற உயிரைக் கொன்று தின்பது எனக்குப் பழக்கம் தான்… இதில் நியாயம் அநியாயம் எதுவுமே கிடையாது… நீர் வேண்டுமானால் கேட்டுப் பார்… எவரேனும் இது அநியாயம் என்று சொல்லிவிட்டால்… உம்மை விட்டு விடுகின்றேன்… இல்லை என்றால் இன்று என் மதிய உணவு…. நீர்தான்… ..

Advertisement

மரம்: எனக்கென்னவோ சிங்கம் சொல்வது தான்நியாயம் என்று தோன்றுகின்றது… ஏனென்றால் என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்… மனிதர்களாகிய நீங்கள் சுவாசிக்கக் காற்றுத் தருகிறேன்… வெயிலுக்கு நிற்க இதமான நிழல் தருகிறேன்… நாடெங்கும் மழை பொழிய உறுதுணையாக இருக்கின்றேன்… ஆயினும் உங்கள் தேவைக்காக நீங்கள் எங்களை வெட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்… ஆறறிவு கொண்ட மனிதர்கள் நீங்கள் இவ்வளவு சுயநலமாய் இருக்கும் போது… ஐந்தறிவே கொண்ட இந்த சிங்கம் சுயநலமாய் இருப்பதில் தவறொன்றும் இல்லையே…

சாலை பிராமணரே சிங்கம் சொல்வது ஒன்றும் அநியாயமாக இல்லை… இப்போது நீங்கள் சொல்வது தான் அநியாயமாக இருக்கிறது…

நீங்கள் வீட்டுக்கு செல்ல நான் எவ்வளவு உதவியாக இருக்கிறேன்… ஆயினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்… என் மேல் குப்பையை கொட்டுகின்றீர்கள்… எச்சிலை துப்புகின்றீர்கள்… நீங்கள் செய்வதெல்லாம் நியாயமென்றால்… சிங்கம் செய்வதும் நியாயம் தானே பிராமணரே…

முயல்: நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான்… ஆனால் எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை… நீங்கள் ஒன்று செய்கிறீர்களா… என்னை அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்… அங்கு சென்றால் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க எனக்கு உதவியாய் இருக்கும்… என்று நினைக்கிறேன்… என்ன பிராமணரே நாம் போகலாமா…

சிங்கம் : என்னோடு வா… நானே கூட்டிச் செல்கிறேன்…

VOICEOVER… முயல் அந்த கூண்டின் அருகில் சென்று உற்று பார்த்து விட்டு… பின்பு சொன்னது…

முயல்: கூண்டு இத்தனை சிறியதாக இருக்கிறது… இத்தனை பெரிய சிங்கம் இந்த சிறு கூண்டினுள்… மாட்டிக் கொண்டதா… ம்.. என்னால் நம்ப முடியவில்லையே…

சிங்கம் ஏய் முட்டாள் முயலே… உன்னால் நம்ப முடியவில்லையா… இதோ பார்…

Advertisement

VOICEOVER… சிங்கம் தாவி குதித்து… கூண்டுக்குள் அமர்ந்து காட்சி தந்தது… இது தான் சமயம் என்று… முயல் கூண்டின் தாழ்ப்பாளைப் போட்டு பூட்டியது… சிங்கம் மீண்டும் கூண்டுக்குள் சிறை பிடிக்கப் பட்டது… உடனே முயல் கேட்டது…

முயல்: என்ன ஓய்… பிராமணரே… நீங்கள் காப்பாற்றும் முன் சிங்கம் இப்படித்தானே இருந்தது…

பிராமணன்: ஆமாம்…

முயல்: வாருங்கள் பிராமணரே… நாம் வீட்டிற்கு போகலாம்… இந்த நன்றி கெட்ட சிங்கம் கூண்டுக்குள்ளேயே கிடக்கட்டும்… இதை விடுவித்தது தான் நீங்கள் செய்த பெரும் தவறு… வாருங்கள் போகலாம்…

பிராமணன்: நன்றி முயலே.. மிக்க நன்றி… நீ செய்த இந்த பெரும் உதவியை என் உயிருள்ள வரையில் நான் மறக்க மாட்டேன்… மறக்கவே மாட்டேன்…

VOICEOVER… பிராமணரும் முயலும், தங்கள் தங்கள் வழியில் சென்றனர்… அநியாயமான சிங்கத்திற்கு… கூண்டே நிரந்தரமானது…

VOICEOVER… குழந்தைகளே… சிங்கத்திற்கு நிகழ்ந்தது என்ன என்று பார்த்தீர்களா… அது தன் வார்த்தையை காப்பாற்றி இருந்தால்… இந்நேரம் விடுதலை பெற்றிருக்கும்… எனவே ஒரு வார்த்தை கொடுத்தீர்களானால்… கொடுத்த வாக்கைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்.. . என்ன குழந்தைகளே புரிகிறதா…

 

Advertisement
Continue Reading
Advertisement