Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – தந்திர நரிகள்

ஒரு நல்ல நண்பனை அடைவது தான் கடினம்… இழப்பது மிகவும் எளிது… அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்கக் கூடாது

தந்திர நரிகள்

காட்சி-1 சிங்கம், நரிகள், காளை, VOICEOVER

VOICEOVER: முன்பு ஒரு முறை ஒரு கிராமத்தில் ஒருபலமுள்ள பெரிய காளைமாடு வசித்து வந்தது… ஒரு முறை அது அந்த கிராமத்தை விட்டு வெளியேறி… அருகில் உள்ள காட்டுக்குள் சென்று விட்டது…

VOICEOVER: காட்டை சுற்றி வந்த காளை… வீடு திரும்ப எண்ணம் கொண்டு… திரும்பி வர முயற்சி செய்தது… பாதை மாறிப் போனதால்.. வழிதெரியாமல் காட்டிற்குள்ளேயே தங்கிவிட்டது…

VOICEOVER: ஒரு நாள் காட்டிற்குள் திரிந்து வந்த போது… அங்கு நன்கு வளர்ந்த பசுமையான புற்களும், இழை தழைகளுடன் கூடிய செடிகளும்… ஒரு குட்டையை சுற்றி அமைந்திருப்பதைக் கண்டது… அவற்றை மகிழ்ச்சியுடன் உண்டு… தனது வயிற்றுப் பசியை ஆற்றியது… வயிறு நிறைந்த சந்தோஷத்தில்… உற்சாகமாக தலையை நிமிர்த்தி கர்ஜித்தது…

VOICEOVER: அதே நேரத்தில் காட்டரசனான சிங்கம்… நீரருந்த குட்டை அருகே வந்தது… காளையின் கர்ஜனை காடெங்கும் எதிரொலிக்கவே… சிங்கம் நடுக்கத்துடன் சிந்தித்தது…

சிங்கம்: ஏதோ ஒரு புதியதும் பெரியதுமான ஜந்து.. இங்கு எங்கோ மறைந்துள்ளது… அது நிச்சயம் மிகுந்த பலமுள்ளது என்று, அதன் குரலிலேயே தெரிகின்றது… அது என் முன் வருவதற்குள்ளாக… நான் இவ்விடத்திலிருந்து சென்று விட வேண்டும்…

VOICEOVER: பயந்து நடுங்கிய சிங்கம்… நீரருந்தாமல்.. அங்கிருந்து ஓடியது… அவ்வாறு பயந்து ஓடிய சிங்கத்தை… இரண்டு நரிகள் பார்த்தன… சிங்கம் எதனையோ கண்டு மிரண்டு ஓடுவதை… அவை புரிந்து கொண்டன…

Advertisement

நரி 1: நமது மன்னர் எதையோ பார்த்து பயந்து விட்டார் போலிருக்கிறது… தன்னுடைய தாகத்தை தணித்துக் கொள்ளாமல்… நீர் நிலையில் இருந்து திரும்பியதை நான் பார்த்தேன்…

நரி 2: ஆமாம்… ரொம்ப சரி… நமக்கு நல்ல வாய்ப்பு… நமது அறிவார்ந்த செயல் மூலம்… சிங்கத்தைக் கவருவதற்கு… அறிய சந்தர்ப்பம்… நாம் இதன் மூலம்… அமைச்சராகவும் முடியும்…

நரி 1: நீ சொல்வது… சரியே… நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்… ம்.. நீ பொறுத்திருந்து பார்…

VOICEOVER: இவ்வாறு இரண்டு நரிகளும் பேசிக்கொண்டு சிங்கத்தை சந்திக்கச் சென்றன…

சிங்கத்தின் குகை வாயிலை அவை அடைந்த போது… குகை வாயிலில் மேல் மூச்சு வாங்கியபடி பயத்தோடு, அங்கும் இங்கும் பார்த்தபடி… சிங்கம் அமர்ந்திருந்தது… நரிகள் இரண்டும்…

நரி 1: எமது அரசரே… தங்களை ஒரு கேள்வி கேட்க… அடியேனுக்கு தயவு செய்து அனுமதிக்க வேண்டும்…

சிங்கம்: ஆமாம் நரியே.. கேள்… என்னிடத்தில் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றாய்…

நரி 1: எங்கள் அரசரே… நீங்கள் பலமும் வீரமும் பொருந்திய அரசர்… ஆனால் சற்று நேரத்திற்கு முன்பாக… அந்த குட்டையிலிருந்து சிறிது நீரைக்கூட அருந்தாமல் ஓடி வந்தீர்களே… நீங்கள் யாருக்காக அப்படி பயந்து நடுங்கி ஓடி வந்தீர்கள்… என்ன நான் நினைப்பது தவறா…

Advertisement

சிங்கம்: ஆமாம் நரியே… நீ நினைத்தபடி பயந்து ஓடி வந்தவன் தான்…. நான் அந்த குட்டையில் நீர் குடித்த போது… பெருத்த பயங்கரமான சத்தத்தைக் கேட்டேன்… என் வாழ் நாளில்அப்படி ஒரு சத்தத்தைக் நான் கேட்டதேஇல்லை… மிகவும் பெரியதும், வலிமை உள்ள மிருகம் ஒன்று காட்டில் வந்திருப்பதாக நம்புகிறேன்… ம்..

நரி 1: ஒ… அந்த பயமுறுத்தும் குரலை நான் கூட கேட்டேன் அரசே… அது ஒரு காளை மாட்டின் குரல்தான்… கவலைப் படாதீர்கள்… அதை உங்களை சந்திக்க நான் தங்களிடம் அழைத்து வருகிறேன்.…

சிங்கம்: சரி நரியே… சென்று அந்த காளையுடன்… திரும்பி வாருங்கள்…

நரி 2: அப்படியே ஆகட்டும் அரசே….

VOICEOVER: இரண்டு நரிகளும் காளையை காட்டினுள் சென்று… தேடிப் பிடித்தன… சிங்கத்தின் குகைக்கு காளையை அழைத்துக் கொண்டு போய்… அரசருக்கு அறிமுகம்செய்தன…

இந்த சந்திப்புக்குப் பிறகு… சிங்கமும் காளையும் நெருங்கிய நண்பர்கள் ஆயின…

VOICEOVER: சிங்கத்தின் உற்ற தோழனாக காளை விளங்குவதைக் கண்டு… பொறாமை கொண்டன நரிகள்… ஒரு தந்திரம் செய்தன… சூழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுத்து… சிங்கத்திடம்…

நரி 1 அரசே… நான் உங்களைப் பணியும் சேவகன்… தங்களை மற்றொருவர் தாக்குவதை சிந்தித்து கூட பார்க்க முடியாதவன்… நீங்கள் அந்த காளையை வெகுவாக நம்புகின்றீர்கள்… ஆனால் அதுவோ நீங்கள் இல்லாத சமயங்களில் உங்களை மிகவும் கேவலப் படுத்திப் பேசுகின்றது…… அது இந்த காட்டுக்கு அரசனாக முயல்கின்றது… என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்… இதனை அதன் வாய் மொழியாலேயே அறிந்த நான் உங்களிடம் சொல்வதற்காகவே வந்தேன்..

Advertisement

சிங்கம் நரியே நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்…

நரி 2: அரசே… காளை தன் சுயரூபத்தை உங்களிடம் காட்டவில்லை… உங்களை எச்சரிப்பது என் கடமை எனவே சொன்னேன்… மற்றவை உங்கள் இஷ்டம்..

சிங்கம் மிக்க நன்றி.. தங்களது செய்திகளை எப்படியாவது சரி பார்க்க வேண்டும்… அவை உண்மையா என்று…

நரி 1 அரசே மீண்டும் ஒரு முறை… சந்திக்கும் போது… தனது தலையை தாழ்த்திக் கொம்புகளால் முட்டித் தள்ள முயற்சி செய்யும் காளையைக் கண்டு… உங்களைக் கொல்ல வருவதை நீங்கள் உணர்வீர்கள்…

VOICEOVER நரிகளின் தந்திரமான பேச்சில் மதி மயங்கிய சிங்கம் அவற்றை உண்மை என்று நம்பியது…

VOICEOVER நரிகள் இரண்டும் காளையை தனியே சந்தித்து…

நரி 1: எனது அருமை நண்பனே… நான் நமது காட்டரசனின் தாழ்மையுள்ள வேலைக்காரன்… உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்… நீ சிங்கத்தின்நெருங்கிய நல்ல நண்பன்… ஆலோசகன் கூட… எனது எஜமானனைப் பற்றி… உன்னிடம் எச்சரிக்கவே இங்கு வந்தேன்… உன்னைக் கொன்று தின்ன காத்திருக்கின்றார்… உன்னுடைய நம்பிக்கையைப் பெறவே உன்னுடைய நண்பனாக நடிக்கின்றார்… ஜாக்கிரதை…

காளை தள்ளிப் போங்கள் பொய்யர்களே… எனது நண்பன் ஒருபோதும் இதுபோன்ற இழி செயலை செய்யமாட்டான்…

Advertisement

நரி 2: தன் வாயைப் பிழந்த படி.. குரூரமாக உன்னை நோக்கி நிற்பதிலிருந்து… நீ அறிந்து கொள்வாய்… உன் மேல் பாய்ந்து விட தயாராக உள்ளது சிங்கம்.. நீ மிகவும் போராடித் தான் உன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும்… இப்போதே நீ ஆயத்தமாக இரு காளையே…

VOICEOVER: நரிகளின் இந்த தூண்டுதலான வார்த்தைகளைக் கேட்ட காளை… வெகுண்டு சிங்கத்தின் குகையை நோக்கிப் பாய்ந்து வந்தது… குறுக்கு வழியில் சிங்கத்தின் குகையை அடைந்த நரிகள்… காளை தாக்க வருவதாக சேதி சொன்னது…

VOICEOVER: சிங்கத்தின் குகையை நெருங்கிய காளை… சிங்கம் வாய் பிழந்த படி தயாராக நிற்பதைக் கண்டு… நரிகள் சொன்ன வார்த்தைகளை உண்மை என்று நம்பி… பழிக்கு பழி வாங்க துடித்தபடி… ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கின…

VOICEOVER: சிங்கத்துக்கும் காளைக்கும் இடையே… வன்முறையான சண்டை நடந்தது… காளை செத்துக் கீழே விழுந்தது… இப்படியாக நரிகள் தந்திரத்தால்… இரண்டு நண்பர்களின் நட்பை… முறித்தன… நரிகள் தனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த காளையிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதாக நம்பியது… கடைசியில் நரிகள் தாங்கள் விரும்பியதை அடைந்தன…

VOICEOVER: சிங்கம் இரண்டு நரிகளுக்கும் முக்கிய அமைச்சர் பதவியை அளித்தது… சிங்கம் தான் இழந்த இழப்பை ஒரு போதும் உணர வில்லை..

VOICEOVER: என் அருமைக் குழந்தைகளே… ஒரு நல்ல நண்பனை அடைவது தான் கடினம்… இழப்பது மிகவும் எளிது… அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்கக் கூடாது.. என்ன புரிகிறதா..

Continue Reading
Advertisement