Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – திருடனின் தியாகம்

முட்டாள் தனமான நண்பனை பெறுவதை விட… அறிவுள்ள பகைவனே மேல்… எனவே கவனத்துடன் நண்பர்களை தேர்ந்தெடுங்கள்

ஹிதோபதேச கதைகள் – திருடனின் தியாகம் PR043 04

திருடனின் தியாகம்

காட்சி-1

நண்பர்கள் மூவர், திருடன், கொள்ளையர் தலைவன், அடியாள், VOICEOVER…

VOICEOVER: முன்னொரு முறை நெடுந்தூரத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்றில்… மூன்று நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்… அவர்கள் மூவருமே ஒருவரை ஒருவர் விரும்பியதால்… எப்போதுமே ஒன்றாக காணப்பட்டார்கள்… VOICEOVER: ஒருநாள் காலையில் மூவரும் ஒன்றாக கூடிப் பேசி.. நெடுந்தொலைவில் உள்ள ஓரிடத்திற்கு சென்று… பெருஞ்செல்வத்தை சம்பாரித்து திரும்பவேண்டும்… என்ற முடிவை எடுத்தார்கள்…

நண்பன் 1: என் அருமை நண்பர்களே… தொலைவில் உள்ள இந்த ராஜ்ஜியத்தின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதிகளில்… விலை மதிப்பற்ற இரத்தினங்கள் உள்ளன… நாம் மூவரும் ஒன்றாக சென்று… அவற்றைக் கொண்டு வந்து… வளமாக வாழ்க்கை நடத்தலாம்…

நண்பன் 2: இது உண்மையானால் நாம் உடனே சென்று நமது நல்ல நேரத்தை.. தேடிக் கண்டுபிடிப்போம்…

நண்பன் 3: ஆமாம்… உடனே நாம் புறப்படுவோம்…

VOICEOVER: உடனே அந்த மூன்று நண்பர்களும்… அவர்கள் வசித்த ராஜ்ஜியத்தின் வடக்குபாகத்தை நோக்கி பயணத்தை துவங்கினார்கள்…

Advertisement

VOICEOVER: மூவரும் தைரியமாக பயணம் செய்து… மலைப் பகுதியில் உள்ள குகையை அடைந்தார்கள்… குகைக்குள்ளே தேடிய பிறகு… ஒரு பெட்டி நிறைய இரத்தினங்களைக் கண்டு எடுத்தார்கள்…

VOICEOVER: ஆளுக்கொரு பெரிய இரத்தினத்தை எடுத்துக் கொண்டு மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தனர்… அவர்கள் திரும்ப பயணம் செய்யத் தொடங்கிய போது…

நண்பன் 1: நண்பர்களே… நாம் ஒவ்வொருவரும்… ஒரு இரத்தினக் கல்லை வைத்திருக்கின்றோம்… ஆனால் வீடு திரும்ப பயமாக இருக்கின்றது…

நண்பன் 2: ஏன் அவ்வாறு சொல்கிறாய் நண்பனே…

நண்பன் 1: நாம் நதியைக் கடந்து வனத்தின் வழியாக இங்கு வந்திருக்கின்றோம்… பல கொடிய மிருகங்களும், கொள்ளையர்களும் வசிக்கும் காடு அது… நாம் அதிர்ஷ்ட சாலிகள்.. நாம் இங்கு வரும் போது… இவற்றில் எதையும் எதிர் கொள்ள வில்லை… ஆனால் திரும்பும் இந்த நேரத்தில்… கொள்ளையர்கள் எதிர் பட்டால்… நம்முடைய இரத்தினங்களை… கொண்டு செல்வது நிச்சயம்…

நண்பன் 2: எனக்கொரு நல்ல யோசனை தோன்றுகிறது… நாம் இந்த கற்களை பழங்களுக்கு இடையில் வைத்து உண்போம்… கொள்ளையர்கள் நம்மை எதிர் கொண்டு தாக்கினால்… ஏதும் கையில் கிடைக்காது அல்லவா…

நண்பன் 3: ஆமாம்… இது சரியான யோசனைதான்… VOICEOVER எனவே மூன்று நண்பர்களும்… இரத்தினத்தை சிறு துண்டுகளாக்கி… பழங்களின் உள்ளே வைத்தனர்… இதை மறைந்திருந்து கேட்ட திருடன்… அவர்கள் மூவரும் பழத்தை உண்பதைப் பார்த்தான்…

திருடன்: நான் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வேன்… இரவில் அவர்கள் ஓய்வெடுக்கின்ற போது… அவர்களது வயிற்றை அறுத்து இரத்தினங்களை எடுத்துக் கொள்வேன்…

Advertisement

VOICEOVER: உடனே அந்த திருடன் மூன்று நண்பர்களையும் சந்தித்தான்…

திருடன்: வழிப்போக்கர்களே நானும் ஒரு பயணிதான்…ஆனால் இந்த வனத்தினுள் தனியாக பயணம் செய்ய பயமாக இருக்கிறது… நானும் உங்களோடு பயணம் செய்து நகரத்தை அடையலாமா…

நண்பன் 1: ஏன் கூடாது… நீங்கள் எங்களுடன் சேர்ந்தால்… நம் எண்ணிக்கை கூடும்… அப்போது நாம் கொடிய மிருகத்தையோ கொள்ளையர்களையோ எதிர் கொண்டால்… அவர்களை எதிர்க்க உதவும்… வாருங்கள் போகலாம்.. .

VOICEOVER: உடனே அந்த நால்வரும் நடந்து சென்று… அடர்ந்த காட்டுப் பகுதியை அடைந்தார்கள்… திருடன் தனது திட்டம் நிறைவேறப் போகின்றதை மனதிற்குள் சந்தோஷமாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில்… சட்டென்ற சில குரல் ஒலிகள் அவர்களைச் சுற்றிலும் கேட்டது…

VOICEOVER: நால்வரும் பயங்கரமான கொள்ளையர்களால் சூழப்பட்டார்கள்… அவர்களது தலைவன் முகாமிட்டிருந்த இடத்திற்கு.. நால்வரையும் கொண்டு சென்றார்கள்…

VOICEOVER: அங்கு மேலும் சில கொள்ளையர்கள் இருந்தார்கள்.. அவர்களின் தலைவன் கேட்டான்…

கொள்ளையர் தலைவன்: இந்த ராஜ்ஜியத்தின் வடபகுதியிலுள்ள மலைக்கு சென்று வந்தீர்களா நீங்கள்..

நால்வரும் ஆமாம்…

Advertisement

கொள்ளையர் தலைவன்ஏதாவது… இரத்தினங்களைக் கண்டெடுத்தீர்களா..

நால்வரும் இல்லை…

கொள்ளையர் தலைவன்தேடிப் பாருங்கள் அவர்களிடம்…

அடியாள்: ஒன்றும் தென்பட வில்லை தலைவா…

கொள்ளையர் தலைவன்நீங்கள் போகலாம்…

நில்லுங்கள்… போகாதீர்கள்… இந்த நால்வரையும் தூணில் கட்டித் தொங்க விடுங்கள்… நாளை காலை இவர்களின் வயிற்றை அறுத்து… ஏதாவது இரத்தினத்தை விழுங்கியிருக்கிறார்களா என அறியலாம்…

அடியாள்: அப்படியே ஆகட்டும் தலைவரே…

VOICEOVER: நால்வரையும் மரக்கம்பத்தில் கட்டி தொங்கவிட்டார்கள்… திருடன் சிந்திக்கத் தொடங்கினான்…

Advertisement

திருடன்: நாளைக் காலையில் இந்த கொள்ளையர்கள் வயிற்றினை கிழித்து நால்வரையும் கொல்வது உறுதி… என்ன பாவப்பட்ட வாழ்க்கையை நடத்துகின்றேன்… ஒரு நல்ல செயலை செய்துவிட்டு தான் நான் மரணமடைய வேண்டும்… நாளை காலையில் எனது திட்டத்தை நிறைவேற்றி இந்த மூன்று நண்பர்களையும் காப்பாற்றுவேன்…

கொள்ளையர் தலைவன்அவர்கள் வயிற்றினை அறுத்து இரத்தினங்கள் உள்ளதா என தேடிப் பாருங்கள்…

அடியாள்: சரி தலைவா…

திருடன்: மேன்மையானவரே… நாங்கள் இரத்தினத்தை விழுங்க வில்லை என்று சொன்னால்… நீங்கள் நம்ப மாட்டீர்கள்… இவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்… என் கண்முன் அவர்கள் இறப்பதை நான் காண சகிக்க மாட்டேன்… எனவே தாங்கள் முதலில் என்னுடைய வயிற்றை கிழித்துப் பாருங்கள்.. ஆனால் எனக்கு ஒரு உறுதியை நீங்கள் செய்து தரவேண்டும்… என் வயிற்றில் இரத்தினங்கள் ஏதும் கிடைக்க வில்லை என்றால்… அவர்களை விடுதலை செய்ய வேண்டும்…

நால்வரும் சத்தியம் செய்கின்றேன்.. அவருடைய வயிற்றை கிழித்துப் பாருங்கள்…

ஆ… ஆ… ஆ..

VOICEOVER: திருடனின் வயிற்றில் இரத்தினங்கள் இருக்கின்றதா என்று பார்க்க.. கொள்ளையர்கள் அவனை தனியே அழைத்துச் சென்றனர்…

அடியாள்: மேன்மையானவரே…. இங்கு இரத்தினம் ஒன்றும் இல்லையே தலைவா…

Advertisement

கொள்ளையர் தலைவன்இவன் பொய் சொல்லவில்லை… இவன் நம்மாளே கொல்லப் படுவோம் என்றாலும் கூட உண்மையை பேசினான்… எனவே இவர்களும் உண்மையைப் பேசுபவர்களே… ஒன்றும் அறியாத இளைஞர்களை… கொல்ல விரும்ப வில்லை… நீங்கள் போகலாம்…

நால்வரும் மிக்க நன்றி மேன்மை பொருந்தியவரே…

VOICEOVER: கொள்ளையர்களின் தலைவன்… அந்த மூவரையும் விடுதலை செய்யும் படி ஆணையிட்டான்… அந்த மூன்று நண்பர்களும்… தங்களது நல்ல காலத்தை எண்ணி… தங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்து.. தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு, ஒன்றுமறியாத அந்த நண்பருக்கு… நன்றி சொன்னார்கள்… அவன் ஒரு திருடன் என்ற விவரத்தை அறியாமலே…

VOICEOVER: ஒரு திருடன் எவ்வாறு மூன்று நண்பர்களுக்கு… உதவினான் பார்த்தீர்களா… எனவே முட்டாள் தனமான நண்பனை பெறுவதை விட… அறிவுள்ள பகைவனே மேல்… எனவே கவனத்துடன் நண்பர்களை தேர்ந்தெடுங்கள்… வாருங்கள் அடுத்தக் கதைக்கு செல்வோம்..

Continue Reading
Advertisement