Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – நெசவாளியின் விருப்பம்

விளைவை யோசிக்காமல் செய்த செயல் மரணத்தை ஏற்படுத்தி விட்டது எனவே எப்போதும் விளைவை யோசித்து நீங்கள் செயல் படுங்கள்

ஹிதோபதேச கதைகள் – நெசவாளியின் விருப்பம் PR043 06

நெசவாளியின் விருப்பம்

காட்சி-1

நெசவாளி, மனைவி, நண்பன்,வனதேவதை, VOICEOVER..

VOICEOVER: முன்னொரு காலத்திலே ஒரு நெசவாளி ஒருவன் கிராமத்திலே வசித்து வந்தான்… நல்ல அழகிய வேலைப்பாடுகள் உடைய பட்டுத்துணிகளை நெய்து கொடுப்பதில்… கை தேர்ந்த கலைஞன்… நல்ல கடும் உழைப்பாளி… திறமைசாலியாக இருந்தும்… அவன் ஏழ்மையில் இருந்தான்… எப்படியோ அவன் நிர்வாகம் செய்து குடும்பத்துக்கு உணவளித்து வந்தான்..

VOICEOVER: ஒவ்வொரு நாளும் அருகிலிருந்த காட்டிற்கு சென்று… மரக்கிளைகளை வெட்டி விறகாக்கிக் கொண்டு வருவான்… அவன் விறகுகளை கொண்டு வந்து கொடுத்து… மனைவியை சமைக்கச் சொல்வான்…

VOICEOVER: ஒரு நாள் விறகுக்காக மரம் வெட்ட போன போது… ஒரு இனிமையான குரல் ஒன்று கேட்டது… மரத்தின் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு குரல்…

வனதேவதை: தயவு செய்து என்னை வெட்டாதே…

VOICEOVER: ஏதோ குரல் கேட்பது போல் இருக்கிறதே… என்னை சுற்றி ஏதோ நடக்கிறது… ம்.. எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்… குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடித்தாகவேண்டும்… தொடர்ந்து பார்ப்போம்…

Advertisement

வனதேவதை: தயவு செய்து என்னை வெட்டாதே… என் மேல் கருணைகாட்டக் கூடாதா…

நெசவாளி யாரது… எங்கே மறைந்திருக்கிறாய்… என் முன்னே வா.. வந்து நேரில் பேசு…

வனதேவதை நானொரு வன தேவதை… இதை வெட்டி வீழ்த்தினால்… நான் வசிக்க வீடு இல்லாதவளாகி விடுவேன்… எனது இந்த வீட்டை… நீங்கள் வெட்டாமல் விட்டு விட்டால்… உங்களுக்கு ஒரு வரம் தருவேன்…

நெசவாளி உண்மையாகவா சொல்கிறாய்…

வனதேவதை ஆமாம் உறுதியாக சொல்கிறேன்… நீ விரும்பியதை நான் தருவேன்…

நெசவாளி அப்படி என்றால் சரி… இந்த மரத்தை நான் வெட்டவில்லை.. ஆனால் இந்த வரம் பற்றி என்னுடைய மனைவியுடன் நான் ஆலோசிக்க வேண்டும்… நான் வீட்டுக்கு சென்று அவளுடைய விருப்பத்தையும் கேட்டு… பிறகு சொல்கிறேன்… ம்..

வனதேவதை என் வீட்டை வெட்டாமல் இருந்ததற்கு மிக்க நன்றி… உங்களுடைய விருப்பம் போல் செய்யுங்கள்… உங்களுக்காக இங்கேயே காத்திருப்பேன்…

நெசவாளி நன்றி… இப்போதே நான் வீட்டிற்கு சென்று உடனே வருகிறேன்…

Advertisement

மனைவி: நம்முடைய கடின உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கின்றது… நாம் வன தேவதையிடம் பெறப்போகும் வரத்தைப் பற்றி நன்கு யோசிக்க வேண்டும்…

நெசவாளி ஆமாம்.. அதனால் தான் உன்னைக் கலந்து ஆலோசிக்க வந்துள்ளேன்… சொல்… வனதேவதையிடம் என்ன வேண்டும் என்று கேட்கட்டும்…

மனைவி: இந்த வன தேவதையிடம்… செழிப்பான இந்த ராஜ்ஜியத்தை ஆளும் அரச பதவியை கேளுங்கள்… நாம் செல்வம் மிகுந்த வாழ்க்கையை சந்தோஷத்துடன் எப்போதும் வாழலாம்…

நெசவாளி இது சரியான யோசனை… நான் உடனே வனதேவதையிடம் போய்… உன்னுடைய விருப்பத்தை சொல்லி… வரத்தைப் பெற்று வருகிறேன்…

VOICEOVER: உடனே நெசவாளி… காட்டை நோக்கி சென்றான்… வழியில் அவன் நண்பன் வருவதைக் கண்டான்… அவன் ஒரு முடிதிருத்துபவன்…

நண்பன்: நண்பரே… எங்கே விரைந்து செல்கிறாய்…

நெசவாளி என் அருமை நண்பரே… நடந்தது என்னவென்றால்…

VOICEOVER: வன தேவதை வரம் அளித்ததையும், தன் மனைவியின் ஆலோசனையையும், நெசவாளி தெரிவித்தான்… இதைக் கேட்ட அவனது நண்பன்…

Advertisement

நண்பன் நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்காதே… நீ அரசனாகிவிட்டால் மக்களை ஆட்சி செய்யும் கவலையில் மூழ்கிப் போவாய்… எல்லா வருடங்களும் போர் செய்வதிலும்… மக்களைக் காப்பதிலும் செலவிட நேரிடும்… கவனமாக நான் சொல்வதை நீ கேள்… வன தேவதையிடம் மற்றொரு தலையையும், ஒருஜோடி கைகளையும்,கேட்டுப் பெறுவாய்…

நண்பன் ஒரே நேரத்தில் உன்னுடைய உபரியான கண்களால் வேலைப் பாடுள்ள சேலைகளை… உருவாக்கி, இரண்டு தறிகளை… ஒரே நேரத்தில் நான்கு கைகளால்… வேலை செய்து.. இரண்டு மடங்கு பட்டுத்துணியை.. நெய்து சம்பாதிக்க முடியும்… இப்போது சம்பாதிப்பதை விட இருமடங்கு சம்பாதித்து வேண்டுமட்டும் உண்டு… எதிர்காலத்துக்கும் சேமிக்கலாம்… என்ன சொல்கிறாய்…

நெசவாளி இது தான் புத்திசாலித்தனமான யோசனை அருமை நண்பரே… நான் விரைந்து வனதேவதையிடம் சென்று.. வரத்தைப் பெறுவேன்… நன்றி நண்பரே.. மிக்க நன்றி…

நண்பன் முட்டாள் நெசவாளியே… நான் சொன்னதை விட வேறு சிந்தித்துப் பார்க்க முடியவில்லையா உனக்கு… ஹ..ஹ.. பார்க்கலாம்.. எப்படி இரண்டு தலைகள், நான்கு கைகளுடன் தோற்றமளிக்கிறாய் என்று… நிச்சயம் கேலிக் கூத்தாகத்தான் இருக்கும்..

ஹ.. ஹ.. ஹ…

VOICEOVER: இவ்வாறு சொன்னவுடன்… நெசவாளி விரைவாக காட்டை அடைந்தான்… மரத்தை நெருங்கிய அவன்… சத்தமாக…

நெசவாளி ஓ… வனதேவதையே.. என் விருப்பத்தை சொல்ல வந்திருக்கின்றேன்…

வனதேவதை உன்னுடைய விருப்பத்தைச் சொல்… உடனே நான் நிறைவேற்றுகிறேன்…

Advertisement

நெசவாளி வன தேவதையே… எனக்கு உபரியாக ஒரு தலையையும்… இரண்டு கைகளையும் தருவாய்…

VOICEOVER: உடனே நெசவாளி விரும்பிய படியே… அவனுக்கு இரண்டு தலைகளும், நான்கு கைகளும் உண்டாயிற்று… அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டானது.. அவன் கிராமத்தை அடைந்தான்…

VOICEOVER: இந்த நல்ல செய்தியை மனைவியிடம் சொல்லவேண்டும் என்று விரும்பினான்… வழியில் கிராமத்து மக்கள் அவனைக் கண்டார்கள்.. அவர்கள் அதிர்ச்சியுடன் பயந்தபடி.. விநோதமான அவனை ஏறெடுத்துப் பார்த்தார்கள்…

VOICEOVER: அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்.. வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார்கள்… மக்கள் அவனை குழந்தைகளைப் பிடித்து தின்னும் ஆட்கொல்லி என்று கருதத் தொடங்கினர்… எனவே அவன் உயிர் போகும் வரை கல்லாலும், கட்டையாலும், தாக்கத் தொடங்கினர்…

VOICEOVER: முட்டாள் தனமான அவனது விருப்பமே… அவன் உயிரை இழக்கக் காரணமானது..

VOICEOVER: குழந்தைகளே… முட்டாள் தனமான நெசவாளியின் கதியைப் பார்த்தீர்களா.. விளைவை யோசிக்காமல் செய்த செயல்.. மரணத்தை ஏற்படுத்தி விட்டது… எனவே எப்போதும் விளைவை யோசித்து நீங்கள்.. செயல் படுங்கள்.. புரிகிறதா…

Continue Reading
Advertisement