Connect with us

Moral Stories - Tamil

ஹிதோபதேச கதைகள் – புலியும் தங்கவளையலும்

ஒரு போதும் பேராசைக்கு அடிமையாக வேண்டாம்… இருப்பதைக் கொண்டு களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

ஹிதோபதேச கதைகள் – புலியும் தங்கவளையலும் PR043 05

புலியும் தங்கவளையலும்

காட்சி-01 புலி, மனிதன், VOICEOVER

VOICEOVER: முன்னொரு காலத்தில் ஒரு அடர்ந்த காடு ஒன்று பல்வேறு விதமான மிருகங்களுக்கும் வசிப்பிடமாக இருந்து வந்தது… அதன் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள்… வேறு கிராமங்களுக்கு இந்த காட்டுப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டி வந்தது..

VOICEOVER: ஒரு நாள் ஒரு வணிகன் ஒருவன்… அந்த காட்டு வழியே நடந்து சென்றான்… அவன் அவனது கையில் தங்கக் காப்பு ஒன்றை மாட்டி இருந்தான்… வழியில் நன்கு உயர்ந்து வளர்ந்திருந்த புற்களினிடையே… ஒரு புலி மறைந்திருந்தது… இதனை அந்த வியாபாரி கவனிக்கவில்லை…

VOICEOVER: தன் அருகில் நெருங்கி வந்த வியாபாரி மேல்… குபீர் என்று பாய்ந்து… அவனை கொன்று கீழே தள்ளியது புலி… அவனது சதைகளை கடித்து தின்று மகிழ்ந்த புலி… அவன் கையிலிருந்த தங்கக் காப்பை என்ன செய்வதென்று தெரியாமல்… அதை தன்னுடனேயே எடுத்துச் சென்றது…

VOICEOVER: இந்த சம்பவம் நடந்து பல வருடங்களுக்குப் பிறகு… புலி வயதானதாகவும், பலவீனமாகவும் ஆகத் தொடங்கியது… தனக்கான இரையை துரத்திச் சென்று உண்ணும் வலிமை இல்லாமல் போனது.. எனவே உணவுக்காக சிந்திக்கத் தொடங்கியது…

VOICEOVER: மனிதர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்… இதனை நான் சோதித்துப் பார்க்க வேண்டும்…

VOICEOVER: இந்த காடு வழியாக செல்லும் வழிப்போக்கர்களை… தங்கக் காப்பைக் காட்டி அவர்களைக் கவர்ந்து கொல்ல வேண்டும்…

Advertisement

VOICEOVER: இப்படித்தான் இனிமேல் இரையை உண்டு இனிவரும் காலங்களைக் கடத்தப் போகின்றேன்… ம்…

VOICEOVER: தங்கக் காப்பை கையில் எடுத்துக் கொண்டு… காட்டுவழிப் பாதையில் புலி காத்திருந்தது… நெடுநேரம் ஆகியும் ஒருவரும் அந்த வழியில் தென்படவில்லை…

VOICEOVER: வெகுநேரம் கழித்து.. கோபால் என்ற ஒரு ஏழைமனிதன் அந்த வழியாக நடந்து சென்றான்… அவ்வாறு நடந்து செல்கையில், உயர்ந்த புற்களுக்குநடுவில் இருந்து ஒரு குரலைக் கேட்டான்…

புலி: என்னருமை மனிதனே… சிறிது நேரம் நின்று நான் சொல்வதை கேட்பாயா…

VOICEOVER: கோபால் சுற்றும் முற்றும் பார்த்தான்… அங்கு வளர்ந்த புதர்களிலோ, மரங்களிலோ.. யாரும் தென்படவில்லை… சட்டென்று கண்ணைக் கூசும் ஒளி ஒன்று… புற்களின் நடுவில் தென்பட்டது… அங்கிருந்து ஒரு புலி வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் கோபால்… அதன் கையில் ஒரு தங்க வளையம் தென்பட்டது… உடனே கோபால் பயத்துடன் பின் வாங்கினான்…

புலி: என்னருமை நண்பனே… என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்… அருகில் வந்து இந்த தங்க வளையத்தைப் பெற்றுக் கொள்வீர்…

மனிதன்: நான் முட்டாள் என்று நீ நினைத்தாயா… நீயோ கொடிய மிருகம்… நான் எப்படி உன் அருகில் வந்து… என் உயிரை இழப்பேன்…

புலி: நண்பா நீ சொல்வது உண்மைதான்… புலிகள் கொடூர குணம் படைத்தவை என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்… ஆனால் என் நிலைமையைப் பாருங்கள்… இப்போது நான் வயதாகி… எனது கை நகங்களும் கூர்மை இல்லாது போய் விட்டது… நான் பல மனிதர்களையும், மிருகங்களையும், என் ஆயுட்காலத்தில் கொன்று இருக்கிறேன்… இப்போது நான் செய்த பாவங்களுக்காக… மனம் வருந்தி எனது கொடிய குணத்தை விட்டு விட்டேன்… எனது பாவங்களுக்கு பரிகாரம் தேடி… இந்த தங்கக் காப்பை யாராவது ஒரு மனிதனுக்குத் தந்து விட விரும்புகிறேன்…

Advertisement

மனிதன்: புலி தனது கொடிய குணத்தை விட்டொழித்து விட்டதால்.. இதனருகில் நெருங்குவது ஒன்றும்… அபாயமானதில்லை… மேலும் நானோ ஏழை… இந்த தங்க வளையல்… எனக்குப் பெரும் பணத்தைக் கொடுக்கும்… அதன் மூலம் நான் சந்தோஷமாக வாழ்வேன்… ம்…

VOICEOVER: பேராசையில் மூழ்கிய கோபாலுக்கு… சிந்தித்து செயல் படும் திறன் இல்லாமல் போனது… அவன் புலியை நெருங்கினான்.. தந்திரமான புலி கோபால் அருகில் வரும் வரை காத்திருந்து… அவன் மேல் பாய்ந்து கொன்று… அன்றைய விருந்தை தின்று முடித்தது…

புலி: இந்த மனிதர்களே முட்டாள் தனம் உள்ளவர்கள்.. ஒரு சிறு தங்கக் காப்பைக் கண்டதுமே… சிந்தித்து செயல் படும் திறனை இழந்து விடுகிறார்கள்… இதனை இந்த மனிதன் நிரூபித்து விட்டான்… இனிமேல் இதே தந்திரத்தை உபயோகித்து… இந்த வழிப் போக்கர்களை… கொல்வேன்…

ஹா.. ஹா… ஹா…

VOICEOVER: இப்படியாக புலி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்தது.. என்னருமைக் குழந்தைகளே… ஒரு போதும் பேராசைக்கு அடிமையாக வேண்டாம்… இருப்பதைக் கொண்டு களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்… புரிகின்றதா குழந்தைகளே…

Continue Reading
Advertisement