Moral Stories - Tamil
Akbar And Birbal – Nothing Is Permanent – அக்பர் பீர்பால் கதைகள் – எதுவும் நிரந்தரமல்ல
ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க… இன்னிக்கு சாப்பிட ஏதும்
கிடைக்கலியா

எதுவும் நிரந்தரமல்ல
காட்சி-01
அக்பர், சாதுக்கள் 3பேர்
சாது1: என்ன இன்னிக்கு கோயில்ல நல்ல சாப்பாடா?
சாது 2: அதை ஏன் கேக்குற… நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு இப்ப நடக்க முடியாம கூட கஷ்டப் படறேன்..
சாது 1: ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க… இன்னிக்கு சாப்பிட ஏதும் கிடைக்கலியா..
சாது 3: கிடைச்சது.. கிடைச்சது…
சாது 1: அப்புறம் ஏன் சோகமா இருக்க…
சாது 3: இல்ல எத்தனை நாளைக்கு தான் இப்படியே வாழ்க்கையை ஓட்டறது… அதை யோசிச்சாதான் கஷ்டமா இருக்கு…
சாது 1: அட விடுப்பா… அதை மேல இருக்கறவன் பாத்துக்குவான்… நீ ஏன் கவலைப்படற…
அக்பர்: பார்த்துக் கொள்கிறேன்… பார்த்துக் கொள்கிறேன்… இதே வழக்கமாக போய் விட்டது… தினமும் இங்கு வந்து விடுகிறார்கள்…
இது அரண்மனையா… இல்லை ஏதேனும் சத்திரம் சாவடியா… இதை எப்படியாவது நிறுத்தியாக வேண்டும்…
சாது 2: இந்த அரண்மனையை சுற்றி யாரும் உட்காரக் கூடாது… அப்படி மீறி உட்கார்ந்தால்… கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்…
சாது 1: ஐயய்யோ… என்னய்யா இது மன்னர் இப்படி சொல்லிட்டாரு… இனிமே நாம எங்க போறது… என்ன பண்றது…
சாது 1: கவலைப்படாத… கவலைப்படாத… நாம நம்ம அமைச்சர் பீர்பால்கிட்ட போவோம்… அவருதான் இதுக்கு ஒரு நல்ல முடிவை சொல்லுவாரு… ம்… எதுவும் நிரந்தரமல்ல
காட்சி-02
பீர்பால், சாதுக்கள் 3பேர்
சாது 1: மன்னர் திடீர்னு இப்படி ஒரு சட்டம் போட்டுட்டாரு… எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை… நீங்க தான் இதுக்கு ஒரு நல்ல முடிவை சொல்லணும்…
சாது 2: நாங்க உங்களை தான் மலைபோல நம்பி இருக்கோம்….
பீர்பால்: சரி சரி… நீங்கள் போய் வாருங்கள்… நான் பார்த்துக் கொள்கிறேன்… மூவரும்: நன்றி ஐயா… எதுவும் நிரந்தரமல்ல காட்சி-03 பீர்பால், அக்பர்,வீரர்கள், சாதுக்கள் வீரன் 1: சாமி… இங்க எல்லாம் உக்கார கூடாது… கிளம்புங்க… கிளம்புங்க…
மன்னர் உங்கமேல எல்லாம் கைவைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு… அதனால தான் நான் சும்மா இருக்கேன்.. அப்புறம் மன்னர் வந்தாரு… அவ்ளோதான்… கிளம்பு.. கிளம்பு…
வீரன் 2: டேய் நீ வாடா… அவரு சொன்னா கேக்க மாட்டாரு… மன்னரே வரட்டும் வா…யோவ் சாமி… இன்னைக்கு உனக்கு பூஜை தான்யா…பூஜைதான்…
வீரன் 1: மன்னா.. நாங்க எவ்வளவு சொல்லியும் இவரு செல்ல மறுக்கறார் மன்னா…
அக்பர்: என்னய்யா… திமிரா உனக்கு… அங்கேயே இரு… இதோ வருகிறேன்…
அக்பர்: ஏய் யார் நீ…இங்கு உட்கார உனக்கு யார் அனுமதி கொடுத்தது…
நீ ஒய்யாரமாக ஓய்வெடுக்க இது ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல… இது எனக்கு சொந்தமான அரண்மனை…
பீர்பால்: மன்னா.. இது உங்கள் அரண்மனையா…
அக்பர்: ஆம்… இது என்னுடைய அரண்மனைதான்…
பீர்பால்: உங்களுக்கு முன்பு…
அக்பர்: என் தந்தை மன்னர் ஹுமாயூன் உடையது…
பீர்பால்: அவருக்கு முன்பு…
அக்பர்: என் தாத்தா சக்கரவர்த்தி பாபருடையது…
பீர்பால்: அவருக்கு முன்பு…
அக்பர்: லோடி மன்னர் இப்ராஹிம் லோடி உடையது… அவரை போரில் வீழ்த்திய என் தாத்தா… இந்த அரண்மனையைக் கைப்பற்றினார்… பீர்பால்: ம்… உங்களுக்கு முன் இத்தனை பேர் இங்கே தங்கி இருக்கும் போது… இதை எப்படி நீங்கள் உங்கள் அரண்மனை என்று கூற முடியும்…
அக்பர்: என்ன கூறுகிறீர்…
பீர்பால்: மன்னா இந்த உலகமே… ஒரு தர்ம சத்திரம் தான்… நாம் வாழப்போகும் இந்த சிறிய காலத்திற்குள்… எதற்கு மன்னா இந்த வேற்றுமை… இது உன்னுடையது… இது என்னுடையது… என்ற போட்டி பொறாமையெல்லாம்… எதற்கு மன்னா… நான் நீ என்று சொல்லும் போது நம் உதடுகள் ஒட்டாது மன்னா… நாம் என்று சொல்லும் போது தான் நம் உதடுகளே ஒட்டும்… இது புரியாமல்… நிழலுக்கு ஒதுங்கிய அந்த சாதுக்களை… துரத்தி விட்டீர்களே… இது எந்த விதத்தில் நியாயம் மன்னா…
அக்பர்: நான் என்ற அகந்தையால் மூடியிருந்த என் கண்களை…திறந்த நீங்கள் யார்?
பீர்பால்: இன்னுமா மன்னா புரியவில்லை… நான் தான் உங்கள் அமைச்சர் பீர்பால்…
அக்பர்: மன்னர் என்றும் பாராமல்… நான் செய்த தவறை சுட்டிக்காட்டிய பீர்பால் அவர்களே… நன்றி… மிக்க நன்றி… ம்… இப்போதே நான் இட்ட ஆணையை திரும்பப் பெறுகிறேன்…
பீர்பால்: நன்றி மன்னா… மிக்க நன்றி…
சாதுக்கள்: ஹி… ஹி… ஹி….