Connect with us

Moral Stories - Tamil

Akbar And Birbal – The Magic Stick – அக்பர் பீர்பால் கதைகள் – மந்திரக்கோல்

எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்

Akbar And Birbal –  The Magic Stick – அக்பர் பீர்பால் கதைகள் – மந்திரக்கோல் PR040 07

மந்திரக்கோல்

காட்சி-01

அக்பர், நகைவியாபாரி

நகைவியாபாரி: மன்னா என்பெயர் நவீன் பதுக்கர்…. நான் ஒரு நகைவியாபாரி… நேற்று முன் தினம் இரவு… நான் என்னிடம் இருந்த சில பொற்காசுகளை… ஒரு தோல் பையில் போட்டு… என் வீட்டு அலமாரியில் வைத்தேன்… நேற்றுக் காலை அந்த பையில் காணவில்லை மன்னா…

அக்பர்: ஐயையோ… பிறகு…

நகைவியாபாரி: என் வீட்டில் நான்கு வேலையாட்கள் இருக்கின்றனர்… அவர்களில் யாரேனும் ஒருவர் தான் எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்… அவர்களை விசாரித்த போது… தங்களுக்கு தெரியாது என்று கூறுகின்றனர்…

அடித்து விசாரிக்கலாம் என்றால்… தவறு செய்த ஒருவனைத்தவிர.. மற்ற மூவரும் என்னை விட்டு போய் விடுவார்கள்… ஆகையால் அவர்களை அடிக்காமல் விசாரித்து அந்த திருடனை கண்டுபிடித்து தரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…

அக்பர்: வணிகரே… அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்… நீர் அடிக்காமல் திருடனைக் கண்டுபிடிக்க சொல்கிறீர்கள்… ம்.. சிறிது கஷ்டம் தான்…சரி நாளை உங்கள் வேலையாட்களை அழைத்துக் கொண்டு சபைக்கு வாருங்கள்… இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம்…

Advertisement

மந்திரக்கோல்.. காட்சி-02 அக்பர், நகைவியாபாரி,பீர்பால், வேலைக்காரர்கள்4-பேர் நகைவியாபாரி: மன்னா வணக்கம்… இவர்கள் தான் என் வேலையாட்கள்… இவர்கள் தானா…

அக்பர்: இவர்கள் தானா… ம்…பீர்பால்…

பீர்பால்: மன்னா… இந்த வழக்கை சற்று வித்தியாசமாக… எனக்கு தெரிந்த சில மந்திர வித்தைகளைக் கொண்டு விசாரிக்க உள்ளேன் மன்னா…

அக்பர்: மந்திர வித்தைகளா…

பீர்பால்: ஆம் மன்னா…

அக்பர்: ம்….

பீர்பால்: இந்த கோலிற்கு சில மந்திர சக்தி உள்ளது… இதை நான் இப்பொழுது… இவர்களிடம் தரப்போகிறேன்… யார் வணிகரின் பொற்காசுகளை திருடினார்களோ… அவர் கையிலிருக்கும் கோல் மட்டும் நாளை காலை நான்கு அங்குலம் வளர்ந்திருக்கும்… மன்னா… அதை வைத்து திருடியவனை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்… மன்னா…

அக்பர்: ம்… இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது… ம்… உங்கள் இஷ்டப்படி நடத்துங்கள்…

Advertisement

பீர்பால்: இந்தாருங்கள்… ஆளுக்கு ஒரு கோலை எடுத்துக் கொள்ளுங்கள்… இன்று இரவு இதை உங்கள் அருகில் வைத்து உறங்குங்கள்… நாளை காலை இதை எடுத்துக் கொண்டு சபைக்கு வாருங்கள்…

நால்வரும்: தங்கள் உத்தரவு…..

 

காட்சி-03

வேலைக்காரன்

வேலைக்காரன்: சாதாரண குச்சி நீ… ஹி..ஹி… நீ என்ன மாட்டி விடப் போறியா… உன்னை வைச்சி அந்த பீர்பால் என்ன கண்டுபிடிச்சிடுவாரா…. நாளைக்கு நீ 4 அங்குலம் வளர்ந்தா தானே அந்த பீர்பால் என்னை கண்டு பிடிப்பாரு… ம்.. இப்ப எப்படி அவர் என்ன கண்டு பிடிக்கறாருன்னு பாக்கறேன்.. முடிச்சிட்டேன்… நாலுல ஒரு பங்கா ஒடிச்சிட்டேன்… இப்ப எப்படி நான் தான் திருடன்னு கண்டுபிடிக்கறாங்க பாப்போம்…

மந்திரக்கோல்.. காட்சி-01 அக்பர், நகைவியாபாரி,பீர்பால், வேலைக்காரர்கள்4-பேர்

பீர்பால்: எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்… ம்… நீ செல்லலாம்…

Advertisement

வேலைக்காரன்1: நன்றி

பீர்பால்: எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்… ம்… நீ செல்லலாம்…

வேலைக்காரன்2: நன்றி

பீர்பால்: எங்கே உங்களிடம் கொடுத்த கோலைத் தாருங்கள்… ம்…

வேலைக்காரன்3: நான் போகலாமா…

பீர்பால்: நீ போக வேண்டாம்… நில்…உன் பெயர் என்ன…

வேலைக்காரன்3: பர்கத்…

பீர்பால்: சரி பர்கத்… இந்த வணிகரின் பொற்காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள்…

Advertisement

வேலைக்காரன்3: என்ன கூறுகிறீர்கள்… நான் எடுக்கவே இல்லையே…

பீர்பால்: அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்…

வேலைக்காரன்3: ம்.. தப்பவே முடியாது போல இருக்கே…

பீர்பால்: இனியும் ஏமாற்ற நினைக்காதே… உன் குற்றத்தை ஒப்புக் கொள்…

அக்பர்: பீர்பால்… இங்கு என்ன நடக்கிறது…எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே…

பீர்பால்: மன்னா… நான் இவர்களுக்கு தந்தது… சாதாரண கோல் தான் மன்னா… அதில் எந்த மாயமோ மந்திரமோ கிடையாது… அது வெறும் குச்சி தான் மன்னா… ஆனால் இவன் எங்கே இந்த கோல் நாலு அங்குலம் வளர்ந்து விடுமோ என்ற பயத்தில் இவனே அதை வெட்டி விட்டான்… இவன் திருட வில்லை என்றால்… இவன் ஏன் இதை வெட்ட வேண்டும்… என்ன.. பர்கத்…. நான் கூறுவது சரிதானே…

வேலைக்காரன்3: மன்னா… என்னை மன்னித்து விடுங்கள்… நான் தான் அந்த பொற்காசுகளைத் திருடினேன்… இன்றே இதை இவரிடம் ஒப்படைத்து விடுகிறேன் மன்னா… என்னை விட்டு விடுங்கள்… நான் புள்ளைகுட்டிக் காரன்…

அக்பர்: ஹ… ஹ.. ஹ… சபாஷ் பீர்பால்… சபாஷ்.. உங்கள் அறிவைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை… சபாஷ் பீர்பால்…

Advertisement

சபையோ: அமைச்சர் பீர்பால்… வாழ்க.. வாழ்க.. அமைச்சர் பீர்பால்… வாழ்க.. வாழ்க.. வாழ்க.. வாழ்க..

 

 

 

Continue Reading
Advertisement