Moral Stories - Tamil
Akbar And Birbal – Who is Unfortunate – அக்பர் பீர்பால் கதைகள் – யார் துரதிர்ஷ்டகாரன்
அரே அல்லா நான் என்ன குற்றம் செஞ்சேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்ன காப்பாத்த யாருமே இல்லையா

யார் துரதிர்ஷ்டகாரன்
காட்சி-01
அக்பர், பீர்பால், ஒருவன்
ஒருவன்: ஐயையோ.. ஐயையோ… அம்மா… அடிக்கறாங்களே…அடிக்கறாங்களே… அடிக்காதீங்க… அடிக்காதீங்க…
அரே அல்லா.. நான் என்ன குற்றம் செஞ்சேன்… எனக்கு ஏன் இந்த தண்டனை… என்ன காப்பாத்த யாருமே இல்லையா…
பீர்பால்: நிறுத்துங்கள்…
மன்னா… இவன் என்ன குற்றம் செய்தான்… எதற்காக இவனை இப்படி அடிக்கிறீர்கள்…
அக்பர்: பீர்பால்… இவன் பெயர் சாஹப்… இவன் தான் நம் நாட்டின் மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலி… இவனைப் பார்த்து விட்டு தொடங்கிய எந்த காரியமும்… நல்ல படியாக முடிந்ததாக சரித்திரமே இல்லையாம்…
பீர்பால்: அதற்காகவா இவனைப் போட்டு இப்படி அடிக்கிறீர்கள்..
அக்பர்: அதை நானும் சோதித்துப் பார்க்கலாம் என்று… நேற்று முன் தினம் இரவு… என் அந்தப் புரத்திலேயே இவனை தங்க சொன்னேன்.. நேற்று காலை பொழுது விடிந்ததும்… நான் கண்விழித்தது இவன் முகத்தில் தான்…
பீர்பால்: பிறகு என்ன ஆயிற்று மன்னா…
அக்பர்: அக்கணம் முதலே… என்னுடைய நாள் தலைகீழாக மாறி விட்டது… ஏகப்பட்ட பிரச்சினைகள்… சிறிது நேரம் கூட என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை… ஏன் நேற்று முழுவதும்… எனக்கு உணவு உண்ணக் கூட நேரம் கிடைக்க வில்லை.. அத்தனைக் கொடுமையான நாள்… அதற்கு முழுமுதல் காரணமும் இவன் தான்… இவனின் இந்த துரதிர்ஷ்டமான இந்த முகம் தான்… ஆகவே தான் இவனுக்கு ஆயிரம் பிரம்படி கொடுத்து தலையை வாங்கும் படி உத்தரவிட்டு உள்ளேன்…
பீர்பால்: மன்னா எனக்கு ஒரு சிறிய சந்தேகம்…
அக்பர்: என்ன பீர்பால்…
பீர்பால்: ஒன்றுமில்லை… நேற்று காலை நீங்கள் இவன் முகத்தில் முழித்தீர்கள்… இவன் யார் முகத்தில் மன்னா விழித்தான்…
அக்பர்: இதில் என்ன சந்தேகம்… என் முகத்தில் தான்…
பீர்பால்: ஹ…ஹ… ஹ…ஹா..ஹ…ஹா..
அக்பர்: பீர்பால்… ஏன் சிரிக்கிறீர்கள்..என் நிலைமையைப் பார்த்தால் உமக்கு கேலியாக இருக்கிறதா…
பீர்பால்: ஹ… ஹ.. ஹ.. இல்லை மன்னா… இந்த நாட்டிலேயே… மிகவும் துரதிர்ஷ்டசாலியான இவன் முகத்தில்… விழித்ததால் உங்களுக்கு உனவு மட்டும் தான் போய் விட்டது… ஆனால் இவன் நிலைமையை பார்த்தீர்களா… உங்கள் முகத்தில் முழித்ததால்… இவனுக்குத் தலையே போகப் போகிறது… இதில் துரதிர்ஷடசாலி அவனா இல்லை… ஹ.. ஹ…. நீங்களா மன்னா…
அக்பர்: என்னை மன்னியுங்கள் பீர்பால்.. என்னை மன்னியுங்கள்… எத்தனைப் பெரிய அவச்சொல்லுக்கு நான் ஆளாக இருந்தேன்… என்னைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி…
யாரங்கே… உடனடியாக அவன் கால்கட்டை அவிழ்த்து விடுங்கள்… ம்…
பீர்பால்: மன்னா… சொல்லாமலேயே செல்வதால் தான்… செல்வம் என்றுபெயர்… அது இஷ்டம் போல் வருவதால் தான் அதிர்ஷ்டம் என்று பெயர்… ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும்… தீமைக்கும் அவனே தான் காரணம்… அதற்கு வேறு யாரும் காரணமக இருக்க முடியாது… இது புரியாமல்… நம் மக்கள் தான்… அவன் முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம்… இவன் முகத்தில் விழித்தால் துரதிர்ஷ்டம் என்று புலம்புகிறார்கள் என்றால்… ஹ.. ஹ.. நீங்களுமா மன்னா… அக்பர்: என்னை மன்னியுங்கள் பீர்பால்.. என்னை மன்னியுங்கள்… யாரங்கே இந்த சாஹபை விடுதலை செய்து கை நிறைய பொற்காசுகள் தந்து வழியனுப்பி வையுங்கள்…
ஒருவன்: நன்றி மன்னா… நன்றி…
அக்பர்: மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள்… இனி நம் நாட்டில் யாருமே துரதிர்ஷ்ட சாலி இல்லை… அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்…
பீர்பால்: எப்படி மன்னா…
அக்பர்: எங்களுடன் தான் நீங்கள் இருக்கிறீர்களே… அது போதாதா…
அனைவரும்: ஹ…ஹ…ஹா… ஹ.. ஹ.. ஹா…