Mythological Stories - Tamil
Ganesha – Analasura – விநாயகர் கதைகள் – அனலாசுரன்
ஆபத்தான மற்றும் தீய அரக்கன் அனலாசுரன் தான் சுவாசித்த நெருப்பால் மக்களிடையே அழிவை ஏற்படுத்தினான்

அனலாசுரன்
VOICE OVER: கொடும் வெப்பத்தோடும், பெரும் கோபத்துடனும்… முன் ஒரு சமயம்… அனலாசுரன் என்பவன் வாழ்ந்து வந்தான்.. அவன் பார்வை பட்ட இடங்கள் எல்லாம்… பற்றி எரிந்தது…
அக்னி குழம்பு ஆங்காங்கே அசுரனின் உடம்பிலிருந்து சிதறி விழுந்தது…
VOICE OVER: அனலாசுரனின் கொடுமைகளைக் கண்ட அமரர்களும், முனிவர்களும்… ஆனைமுகக் கடவுளாம் கணபதியிடம் முறையிட்டனர்…
கணபதி: கவலைப் படாதீர்கள்.. அந்த அனலாசுரனை அழித்து… இந்த அண்டத்தைக் காப்பது… இனி என் பொறுப்பு..
அனலாசுரன்: இம்மூவுலகிற்கும் இனி அதிபதி நான்… இந்திராதி தேவர்களும், முனிவர்களும்… இனி என் காலடியில்… ஹ..ஹ..ஹா.. என்னை அழிக்கும் வல்லமை இங்கு எவருக்கு இருக்கிறது… ஹ..ஹ..ஹா.. ஹ..ஹ..ஹா.. ஹ..ஹ..ஹா.. ஹ..ஹ..ஹா..
கணபதி: அனலாசுரா… என்ன ஆணவம் தலைக்கேறி விட்டதா… நீ அழியும் காலம் வந்து விட்டது… அனலாசுரன்: என் முன் நின்று பேச என்ன துணிச்சல் உனக்கு… வீணாக என் அக்கினிக்கு இரையாகாதே… ஓடி விடு இங்கிருந்து… ஹ..ஹ..ஹா.. ஹ..ஹ..ஹா..
கணபதி: அனலாசுரா… நான் ஓடி ஒளிய வரவில்லை… உன் ஆணவத்தை ஒடுக்க வந்திருக்கிறேன்… உலக மக்களை உன்னிடமிருந்து காக்க வந்திருக்கிறேன்…
VOICE OVER: அனலாசுரனுக்கும், கணபதிக்கும் இடையே பெருத்த சண்டை தொடங்கியது…
சண்டையின் முடிவில் விஷ்வரூபம் எடுத்த கணபதி… அனலாசுரனை அப்படியே அள்ளி எடுத்து விழுங்கினான்…
கணபதி: ஸ்… ஆ… எரிகிறது… என்னால் இந்த வெப்பத்தை தாங்க முடியவில்லை… ஏதாவது செய்து என்னுள் உள்ள இந்த வெப்பத்தை தணியுங்கள்… ஸ்… ஆ…
VOICE OVER: கணபதியின் வெப்பத்தை தணிக்க எண்ணிய முனிவர்கள்… புனிதமான குளிர்ந்த கங்கை நீரை கணபதியின் சிரசில் ஊற்றத் தொடங்கினார்கள்…
VOICE OVER: வெப்பம் தணிய வில்லை… வெப்பத்தை தணிக்க… ஆயிரக் கணக்கான இளநீர் காய்களை வெட்டி… அதன் நீரை கணபதியின் சிரசில் முனிவர்கள் ஊற்றினார்கள்… கைலாய மலையிலிருந்து பெயர்த்து… பனிப் பாறைகளை சிரசில் வைத்தனர்… குளிர்ச்சி தருகின்ற சந்திரனையே கணபதியின் சிரசில் வைத்தும்… அவரின் உடல் வெப்பம் தணியாததை கண்ட முனிவர் ஒருவர்…
முனிவர்: எப்பேர் பட்ட வெப்பத்தையும்… தணிக்க வல்லமை… அருகம்புல்லிற்கு மட்டுமே உள்ளது… எனவே சிறிது அருகம்புல்லை கொண்டு வந்து… கணபதியின் தலையில் வையுங்கள்… கண்டிப்பாக வெப்பம் தணிந்து விடும்…
VOICE OVER: முனிவர் கட்டளைப் படியே… அருகம்புல்லை வைத்த மறுவிநாடியே வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது…
VOICE OVER: இது தான் நாம் அருகம்புல்லை கணபதிக்கு சாத்துவதன் காரணமாகும்…