Connect with us

Mythological Stories - Tamil

Ganesha – Atmalinga – ஸ்ரீ கணேசா – ஆத்மலிங்கம்

சிறந்த சிவபக்தனான இராவணன் தினமும் காலை மாலை வேளைகளில், நீராடி சிவபூஜை செய்வது வழக்கம்

Ganesha – Atmalinga – ஸ்ரீ கணேசா – ஆத்மலிங்கம் PR041 UNIV 05

ஆத்மலிங்கம்

VOICE OVER: முன்னொரு காலத்தில் பாரத தேசத்தின் தென்கோடிப் பகுதியான இலங்கை என்னும் தேசத்தை ஆண்டுவந்த இலங்கேஷ்வரனான ராவணன் பெரும் சிவபக்தன்…

VOICE OVER: ஒருமுறை எல்லா ஷேமங்களையும், நினைத்ததும் ஆக்க வல்ல ஆத்மலிங்கத்தை… சிவபெருமானிடமிருந்து பெற… அவரை நோக்கி, பெரும் தவம் புரிய… வடக்கு திசை நோக்கி புறப்பட்டான்…

VOICE OVER: அன்ன ஆகாரமின்றி ஒற்றைக் காலில் ஒரு மலையின் மேல் சிவபெருமானை நோக்கி… கடுந்தவம் புரிந்தான்… ராவணனின் கடுந்தவம் கண்டு… சிவபெருமான் அவன் முன் தோன்றினார்…

சிவன்: ராவணா… உன் கடுந்தவம் கண்டு யாம் மனம் மகிழ்ந்தோம்.. என்ன வரம் வேண்டும் கேள்… இராவணன்: சுவாமி எனக்கு தங்களின் ஆத்மலிங்கம் வேண்டும்… அதை அடைவதற்கே யாம் இக்கடுந்தவம் புரிந்தோம்… சுவாமி…

VOICE OVER: இராவணனின் வேண்டுகோளுக்கு இணங்கி… ஆத்மலிங்கத்தை இராவணனுக்கே வழங்கினார் சிவபெருமான்… கூடவே ஒரு நிபந்தனையையும் வைத்தார்…

சிவன்: இராவணா… ஆத்மலிங்கத்தை கீழே வைக்கக் கூடாது… மீறி வைத்தால் அது வைத்த இடத்திலேயே தங்கிவிடும்…

VOICE OVER: சிவபெருமானின் கட்டளையை ஏற்ற இராவணன் ஆத்மலிங்கத்தோடு… வான்வழியே… இலங்கை வழியே பயணம் செய்வதைக் கண்டு… அதிர்ச்சியடைந்த தேவர்களும், முனிவர்களும்..

Advertisement

VOICE OVER: அசுர மன்னனான ராவணன்… ஏற்கனவே மக்களை கொடுமைப் படுத்தி வருகிறான்… இந்த ஆத்மலிங்கத்தை மட்டும் அவன் இலங்கைக்கு எடுத்து சென்று விட்டால்… இனி மக்களின் நிலை என்ன ஆகுமோ….

VOICE OVER: என்று மிகுந்த கவலையடைந்த தேவர்களும் முனிவர்களும்… விக்னங்களைப் போக்கும் விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்…

விநாயகர்: கவலைப் படாதீர்கள்… யாமிருக்க பயமேன்… இராவணன் ஆத்மலிங்கத்தை எடுத்துக் கொண்டு… இலங்கைக்கு எப்படி செல்கிறான் என்று நானும் பார்க்கிறேன்…

VOICE OVER: சிறந்த சிவபக்தனான இராவணன்… தினமும் காலை மாலை வேளைகளில், நீராடி சிவபூஜை செய்வது வழக்கம்… இராவணன்: ஆ.. மாலை நேரம் நெருங்குகிறது… யாம் இப்பொழுது சிவனுக்கு பூஜை செய்ய வேண்டுமே… என்ன செய்யலாம்…

VOICE OVER: என்று ஆழ்ந்து யோசித்த இராவணன்… சிவபெருமானின் நிபந்தனையை நினைத்தபடி… நீர் வளம் நிறைந்த கன்னட தேசத்தில்… வடபகுதியான கோகர்ணம் என்ற இடத்தில் இறங்கிய இராவணன்… சுற்றும் முற்றும் பார்த்தான்… என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் இராவணன்…

VOICE OVER: அந்த சமயம் அந்த வழியாக ஒரு சிறுவன் வருவதைக் கண்டு, அவனிடம்… தான் சிவபூஜை செய்யும் நேரம் வந்து விட்டது… என்றும் இந்த லிங்கத்தை தான் நீராடி பூஜையை முடித்து விட்டு வரும்வரை கையிலேயே வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு… சிறுவனின் கையில் லிங்கத்தை கொடுத்தான் இராவணன்…

VOICE OVER: நதியில் நீராடிய இராவணன்… இரண்டு கைகளை கூப்பியபடி… ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்…

விநாயகர்: சுவாமி… சீக்கிரம் வாருங்கள்…எனக்கு நேரமாகிவிட்டது… நான் வீட்டிற்கு செல்லவேண்டும்… சீக்கிரம் வாருங்கள்… சுவாமி… சிறுவன் அழைப்பதை உணராத இராவணன்… தியானத்தில் ஆழ்ந்த படியே இருந்தான்… சுவாமி வெகுநேரம் ஆயிற்று.. என்னால் இந்த லிங்கத்தை வைத்திருக்க முடியவில்லை… என் கைகள் இரண்டும் வலிக்கின்றன… சீக்கிரம் வாருங்கள்… வாருங்கள்…

Advertisement

இராவணன்: இதோ இதோ… ஒரு நொடியில் வருகிறேன்.. சற்று பொறு… லிங்கத்தைக் கீழே வைத்துவிடாதே..

விநாயகர்: இல்லை சுவாமி… என்னால் இந்த லிங்கத்தை சுமக்க முடியவில்லை… நான் கீழே வைத்து விடுகின்றேன்..

VOICE OVER: சிறுவன் சிவலிங்கத்தை கீழே வைத்து விடப் போகின்றானே என்ற அச்சத்தில் பூஜையை நிறுத்தி விட்டு சிறுவனை நோக்கி ஓடி வந்தான்… அதற்குள்ளாகவே நொடிப்பொழுதில் கீழே வைத்து விட்டான் சிறுவன்…

இராவணன்: அட மடச்சிறுவனே என்ன காரியம் செய்தாய்…

நான் கீழே வைத்துவிடாதே என்று கூறியும்… நீ லிங்கத்தை கீழே வைத்து விட்டாய்… இது என்ன… இதன் மகிமை என்ன என்று உனக்குத் தெரியுமா… இந்த லிங்கத்தை அடைய நான் கடந்த சோதனைகள் தான் என்ன என்று உனக்குப் புரியுமா… உன்னை என்ன செய்கிறேன் பார்…

ஹ..ஹ.. ஹா… ஹ..ஹ.. ஹா…

விநாயகர்: இராவணா… எனக்கா ஏதும் தெரியாது… இது ஆத்மலிங்கம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்… இதை ஈசனிடம் இருந்து நீ எப்படி பெற்றாய் என்றும் எனக்கு தெரியும்… இது உன்னிடம் இருந்தால் இந்த உலகை நீ என்ன பாடு படுத்துவாய் என்றும் எனக்கு தெரியும்… உன்னிடம் இருந்து இவ்வுலகைக் காக்கவே யாம் இவ்வாறு செய்தோம்…

நடந்தவை யாவும் கணபதியின் லீலை என்று அறிந்த இராவணன்… தன் எண்ணம் ஈடேறாமல் போனதற்கு… வருந்தி நின்றான்…

Advertisement

VOICE OVER: தேவர்களும் முனிவர்களும் பூமாரிப் பொழிந்தனர்… அந்த ஆத்மலிங்கம் அமைந்த இடமே… இன்று கோகர்ணம் என்று புகழுடன் விளங்குகின்றது… இந்த அருஞ்செயலை செய்த ஆனைமுகத்து விநாயகப் பெருமானை சத்யலோகத்திலிருந்து

VOICE OVER: பிரம்மனும், வைகுந்தத்திலிருந்து திருமாலும், கையிலாயத்திலிருந்து சிவபார்வதியும், ஆசிதந்து வாழ்த்தினார்கள்…

Continue Reading
Advertisement