Mythological Stories - Tamil
Ganesha – Birth Of Ganesha – ஸ்ரீ கணேசா – கணேஷின் பிறப்பு
சிவபெருமான் மூவுலகுக்கும் முதல்வனாய் கணங்கள் அனைத்திற்கும் தலைவனாய் பக்தர்கள் துயர் தீர்க்கும் கடவுளாய் கணபதி

கணேஷின் பிறப்பு
VOICE OVER: இவ்வண்ட சாரசரத்தின் ஆதியாய், பிரபஞ்சத்தின் மூலமாய், மூவுலகையும் கட்டிக்காக்கும் ஈசனின் பாதியாய் விளங்கும் பார்வதி தேவியார்…. தன் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்தார்… சற்றும் எதிர்பாராத சமயத்தில்… உள்ளே நுழைந்த ஈசனைக் கண்டு… அதிர்ச்சி அடைந்த பார்வதிதேவி… ஈசனின் மீது கோவம் கொண்டார்…
மீண்டும் இச்செயல் நடைபெறாமல் தடுக்க.. தனக்கென ஒரு புதல்வனை உருவாக்க எண்ணி… கையில் சிறிது நீரை எடுத்து… உடலில் தேய்த்து உருட்டி… தன் சர்வ சக்திகளையும் கொண்டு.. தனக்கென ஒரு புதல்வனை உருவாக்கினார்… பார்வதி தேவியார்…
ஒரு முறை பார்வதி தேவியாரின் அந்த புறத்தினுள்… நுழைய முற்பட்ட ஈசனை, உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான் சிறுவன்… இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடைபெற்றது… கடும் கோபம் கொண்ட ஈசன்… தன் கையில் வைத்திருந்த திரிசூலத்தினால்… அச்சிறுவனின் தலையைக் கொய்தார்…
தன்னால் உருவாக்கப் பட்ட குழந்தையின் தலை துண்டிக்கப் பட்டதை அறிந்த பார்வதி தேவியார்… சிவபெருமான் மீது கடுங்கோபம் கொண்டார்…
பார்வதி தேவியாரின் சினத்தை தணிக்க எண்ணிய சிவபெருமான்… தன் பூத கணங்களை பூலோகம் சென்று வடதிசையில் தலைவைத்து உறங்கும், ஏதேனும் ஒரு ஜீவராசியின் தலையை கொண்டு வருமாறு ஆணையிட்டார்…
பூலோகம் சென்ற பூதகணங்கள்… வடக்கில் தலைவைத்து உறங்கிய ஒரு யானையின் தலையை… கைலாயம் எடுத்து வந்தனர்… அந்த யானையின் தலையை சிரம் இழந்த அச்சிறுவனின் உடலில் இணைத்து… மீண்டும் உயிர் பெறச்செய்தார் சிவபெருமான்…
மூவுலகுக்கும் முதல்வனாய்… கணங்கள் அனைத்திற்கும் தலைவனாய்… பக்தர்கள் துயர் தீர்க்கும் கடவுளாய்… கணபதி என்ற திருநாமம் கொண்டு விளங்குவாய்… என சிவ பெருமான் அருள் புரிந்தார்…