Connect with us

Mythological Stories - Tamil

Ganesha – Gajasura – ஸ்ரீ கணேசா – கஜாசுரன்(கணேச வாகனம்)

கஜாசுரா உன் கடுந்தவம் கண்டு… யாம் மனம் மகிழ்ந்தோம் என்ன வரம் வேண்டும் கேள்

Ganesha – Gajasura – ஸ்ரீ கணேசா – கஜாசுரன்(கணேச வாகனம்) PR041 UNIV 06

கஜாசுரன்(கணேச வாகனம்)

VOICE OVER: ஒரு சமயம் கஜமுகம் கொண்ட கஜாசுரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான்… அவன் தன்னுடைய பலத்தை மேலும் பெருக்கிட எண்ணி… சிவபெருமானை நோக்கி… கடும்தவம் இருந்தான்… கஜாசுரன்: ஓம்… நமச்சிவாய… ஓம்… நமச்சிவாய… ஓம்… நமச்சிவாய…

VOICE OVER: கஜாசுரனின் தவத்தைக்கண்ட சிவபெருமான்… அவன் முன் தோன்றினார்…

சிவன்: கஜாசுரா… உன் கடுந்தவம் கண்டு… யாம் மனம் மகிழ்ந்தோம்… என்ன வரம் வேண்டும் கேள்…

கஜாசுரன்: சுவாமி மூவுலகிற்கும் நான் அதிபதியாக வேண்டும்….இந்திராதி தேவர்கள் அனைவரும் எனக்கு தொண்டு புரியவேண்டும்.. என்னைப் போன்ற உருவம் கொண்ட ஒருவனின் கையால் தான்… என் மரணம் நிகழ வேண்டும்…

சிவன்: கஜாசுரா… நீர் கேட்ட வரங்களையே யாம் உமக்கு அளித்தோம்…

VOICE OVER: தான் விரும்பிய வரத்தைப் பெற்ற மறுவிநாடியே.. தன் உடலில் மிகுதியான பலம் சேர்வதை உணர்ந்த அசுரனுக்கு… ஆணவம் தலைக்கேறியது…

VOICE OVER: ஊர்ஊராய் நாசம் செய்யத் துவங்கிய அசுரன்… தவம் இருந்தவர்களையும்… ஊர் மக்களையும்.. வதைக்கத் தொடங்கினான்… தேவர்களுக்கும் ஆபத்து வரும் என்று அஞ்சிய தேவர்கள் எல்லோரும்… நான்முகனான பிரம்மாவிடம் முறையிட்டனர்… பிரம்மன்: தேவர்களே.. கஜாசுரன் சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்றவன்… அவனை அழிக்கும் வல்லமை… கணபதியை தவிர வேறு எவருக்கும் கிடையாது… வாருங்கள்… நாம் கணபதியிடமே சென்று முறையிடுவோம்…

Advertisement

கணபதி: கவலைப் படாதீர்கள்… கஜாசுரனை அழித்து… இந்த மூவுலகையும் காக்க வேண்டியது… இனி என் பொறுப்பு…

VOICE OVER: கஜாசுரனை அழிக்க அவன் இருப்பிடம் நோக்கி… புறப்பட்டு சென்றார் கணபதி… தன்னைப் போலவே ஒரு சிறிய உருவத்தைக் கண்ட கஜாசுரன்… அதிர்ச்சி அடைந்தான்… இவனை வளர விடக்கூடாது என்று எண்ணி… ஒரு சக்தி வாய்ந்த ஆயுதத்தை கணபதியை நோக்கி வீசினான்… VOICE OVER: கணபதியின் தொடர் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாத கஜாசுரன்… நிலைகுலைந்து.. பலமிழந்து என்ன செய்வதென்று… தெரியாத நிலையில்… எலி வடிவம் கொண்டு தப்பித்து செல்ல எண்ணி… எலி வடிவம் எடுத்தான்… கஜாசுரன்: சுவாமி… என்னை மன்னித்து விடுங்கள்… சிவனிடம் வரம் பெற்று விட்டோம் என்ற அகந்தையில்… இவ்வாறு செய்து விட்டேன்… என்னை மன்னியுங்கள் சுவாமி…

கணபதி: கஜாசுரா… நீ மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதால்… யாம் உன்னை மன்னித்தோம்.. இனி நீ என் காலடியில் எனது வாகனமாய் விளங்குவாய்… ஆணவமும் அதிகாரமும், எப்பொழுதும் நீதியின் காலடியில் என்பதை இந்த உலகம் உன்னால் உணரட்டும்…

 

Continue Reading
Advertisement