Mythological Stories - Tamil
Ganesha – Kubera’s Feast – ஸ்ரீ கணேசா – குபேரனின் விருந்து
அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும், செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் விளங்குகின்ற குபேரன்

குபேரனின் விருந்து
காட்சி-01
சிவன், விநாயகர், குபேரன், VOICE OVER…
VOICE OVER:
அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும், செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும்… விளங்குகின்ற குபேரன்… தன்னிடமுள்ள பொன்… பொருள், மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பரமனான சிவபெருமானிடம் காண்பித்து. அவரது திருவருளைப் பெற்று… பெருமை பெற வேண்டும் என்று எண்ணினான்… அதற்காக… தனது அழகாபுரி மாளிகையில் ஒரு பெரும் விருந்திற்கு ஏற்பாடு செய்து… சிவபெருமானை அழைக்க… கைலாயம் புறப்பட்டு சென்றார்…
ஓம்… நமச்சிவாய…. ஓம்… நமச்சிவாய….
குபேரன்: சுவாமி… தங்களுக்காக… என் வீட்டில் ஒரு மாபெரும் விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்… தாங்கள் நிச்சயம் வந்து அதில் கலந்து கொள்ள வேண்டும் சுவாமி…
விநாயகர்: என்ன… விருந்தா… பலே.. பலே… நிறைய பலகாரம் செய்து வையுங்கள்.. நான் கண்டிப்பாக வருகிறேன்…
சிவன்: குபேரா… நீ விருந்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்… யாம் கண்டிப்பாக வருகிறோம்….
காட்சி-02
குபேரன், விநாயகர், சிவன், VOICE OVER.
VOICE OVER: சிவபெருமானை வணங்கிய குபேரன்… தனது அழகாபுரிக்கு திரும்பி… பெரிய விருந்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான்…
அழகாபுரி எங்கும் மாவிலை தோரணங்களும்… வாசல்கள் தோறும் வாழை மரங்களும்… வண்ண வண்ண வாண வேடிக்கைகளும்… வானில் பூ மாறிப் பொழிந்தன… முரசொலியின் முழக்கம் ஊர் எங்கும் கேட்டது… துந்துபியின் கீதம் விண்ணைத் தொட்டது…
ஊரெங்கும் விழாக்கோலம் பூண்டது… கைதேர்ந்த சமையற்காரர்களின் கைவண்ணத்தில்… சித்ராஅன்னங்கள்… பலவிதமான பலகாரங்கள்.. தயாராயின…
விருந்திற்கு சிவபெருமான் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்… கதையுடன் கணபதி மட்டும் குபேரன் எதிரில் தோன்றினார்…
குபேரன்: வாருங்கள்…கணபதி… எங்கே மற்றவர்கள்.. நீங்கள் மட்டும் தனியே வந்துள்ளீர்கள்…
கணபதி: அவர்களுக்கு பதிலாகத்தான் நான் வந்திருக்கிறேன்… என்ன விருந்து தயார் தானே…
குபேரன்: ம்… வாருங்கள்…
VOICE OVER: தற்பெருமையோடு தயாரிக்கப் பட்டு… சிவனுக்க படைக்க இருந்த விருந்தைக் கண்ட விநாயகர்.. குபேரனின் கர்வத்தைப் போக்க எண்ணினார்…
படைக்கப் பட்ட விருந்துகள் அனைத்தையும், ஒரு நொடியில் தனது தும்பிக்கையாலேயே உண்டு தீர்த்தார்…
கணபதி: என்ன அவ்வளவுதானா… இன்னும் கொண்டுவாருங்கள்…
VOICE OVER: மீண்டும் பசிஎன்று கூறிய கணபதிக்கு, குபேரன் ஆணைப்படி… அரண்மனையில் உள்ள அத்தனை உணவு பொருட்களையும் எடுத்து சமைத்து மீண்டும் விருந்து படைக்கப் பட்டது……
அவற்றையும் ஒரு நொடியில் உண்டு தீர்த்தார் கணபதி…
கணபதி: இன்னும் என் பசி அடங்கவில்லை… சீக்கிரம்… சீக்கிரம்…
VOICE OVER: மீண்டும் பசிஎன்ற கணபதிக்கு, அழகாபுரி பட்டிணத்தில் உள்ள அத்தனை காய், கனி, உணவுப் பொருட்களால், ஆன விருந்து சமைக்கப் பட்டு உடனே அளிக்கப் பட்டது…
தட்டு தட்டாய் விருந்து வகைகள்… அத்தனையும் மிச்சமின்றி உண்டு தீர்த்துக் கொண்டே இருந்தார் கணபதி…
விருந்து கொடுத்து சிவனிடம் கவுரவம் பெற எண்ணிய குபேரன் நிலைமை… விபரீதமாக ஆனதை உணரத் தொடங்கினான்..
கணபதிக்கு கொடுக்க… தன்னிடம் ஏதுமில்லை என்ற நிலையில் தன் தவறை உணர்ந்த குபேரன்… சிவபெருமானிடம் முறையிட்டு நிற்க…
சிவன் குபேரன் எதிரில் தோன்றினார்…
குபேரன்: சுவாமி என்னை மன்னியுங்கள்… என்னுடைய செல்வங்களை காண்பித்து… தங்களின் அருளை பெற்று விடலாம் என தவறாக நினைத்து விட்டேன்… அது மாபெரும் தவறு என கணபதி எங்களுக்கு புரிய வைத்து விட்டார்… என்னிடம் உள்ள செல்வங்களால்… கணபதியை திருப்தி படுத்த முடியவில்லை… இவ்வுலகைக் காக்கும் தாங்கள் தான் எம்மையும் காத்தருள வேண்டும் சுவாமி…
சிவன்: குபேரா… நீ என்னிடம் மன்னிப்பு கேட்டு எந்த பயனும் இல்லை… நீ மன்னிப்பு கேட்க வேண்டியது… கணபதியிடம் தான்… நீ அவனிடம் சென்று முறையிடு…
குபேரன்: சுவாமி என்னை மன்னியுங்கள்… என்னுடைய காண்பித்து… தங்களின் அருளைப் பெற்று விடலாம் என தவறாக நினைத்து விட்டேன்… என்னை மன்னித்து அருள் புரியுங்கள் சுவாமி… அருள் புரியுங்கள்…
கணபதி: குபேரா… எழுந்திரு… உண்மையான பக்தியால் மட்டுமே… எங்களின் அருளைப் பெற முடியும்… இப்படி பொன்னும், பொருள்களைக் காண்பித்து எங்கள் அருளைப்பெற்று விடலாம் என ஒரு போதும் நினைத்து விடாதே… உமக்கு பாடம் புகட்டவே யாம் இவ்வாறு செய்தோம்…