Mythological Stories - Tamil
Ganesha – Mahabharata – ஸ்ரீ கணேசா – மஹாபாரதம்
கடுந்தவம் புரிந்தார் வியாசமாமுனிவர் தவத்தின் பயனாக… பிரம்ம தேவர் வியாசர் முன் தோன்றினார்

மஹாபாரதம்
காட்சி-02
வியாசர்,விநாயகர், பிரம்மர், VOICEOVER..
VOICE OVER: வேதங்களை உலகுக்கு அளித்த, அவதார புருஷரான வேத வியாசருக்கு… ஒரு முறை தியானத்தில் அமர்ந்திருந்த போது… ஒரு மகா காவியம் அவர் மனக்கண் முன் தோன்றியதாம்…
இந்த மகாக் காவியத்தை நூல்வடிவமாக்கி… உலகுக்கு அர்ப்பணிக்க எண்ணி… நான்முகனாகிய பிரம்மாவை நோக்கி… இரவென்றும் பகலென்றும் பாராமல்… கடுந்தவம் புரிந்தார் வியாசமாமுனிவர்…
தவத்தின் பயனாக… பிரம்ம தேவர் வியாசர் முன் தோன்றினார்…
பிரம்மர்:வியாசமுனிவரே… தங்கள் எண்ணம் புரிந்தது… நீங்கள் விநாயகப் பெருமானை வேண்டி தவம் செய்யுங்கள்…. இந்த மகா காவியத்தை எழுதும் வல்லமை… அவருக்கு மட்டுமே உண்டு…
வியாசர்: அப்படியே ஆகட்டும் சுவாமி…
VOICE OVER: பிரம்மதேவர் கூறியது போலவே விநாயக பெருமானை வேண்டி… தவம் புரிந்தார்… வியாசமா முனிவர்…
அவர் தவத்தின் பயனாக… விநாயக பெருமான் அவர்முன் தோன்றினார்…
அவரிடம் ஒரு மகாக் காவியம் எழுத வேண்டும் என தன் விருப்பத்தைக் கூறினார் வியாச மாமுனிவர்…
விநாயகர்: அப்படியே ஆகட்டும் வியாசமாமுனிவரே… ஆனால் ஒரு நிபந்தனை… நான் எழுதும் பொழுது எனது எழுதுகோல் நிற்காதபடி, நீர் இடைவெளி இன்றி… என்வேகத்திற்கு காவியத்தை கூறவேண்டும்…
வியாசர்: அப்படியே ஆகட்டும் சுவாமி…
VOICE OVER: இருவரும் இம்மகாக் காவியத்தை எழுத ஆரம்பித்தனர்… கணபதியிடம் எழுத எழுதுகோல் ஏதும் இல்லாத காரணத்தால்… தன் தந்தத்தையே உடைத்து எழுதுகோலாக உபயோகித்தார்…
இவ்வாறாக இவ்விருவரின் பெரு முயற்சியால் தான்… மகாபாரதம் என்னும் பெருங்காவியம்… நமக்கு கிடைத்தது…