Connect with us

Mythological Stories - Tamil

Ganesha – River Cauvery – ஸ்ரீ கணேசா – காவேரியை மீட்ட கணபதி

விநாயகப் பெருமான் தெய்வீகமானவர், அவருடைய பிறப்பு இன்னும் மர்மமான கதையைக் கொண்டுள்ளது.

காவேரியை மீட்ட கணபதி

VOICE OVER: பார் போற்றும் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த அகத்தியமாமுனிவர்… ஒருமுறை காவிரி ஆற்றங்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தார்…

காவிரி: ஹ…ஹ…ஹா…

VOICE OVER: அகத்தியரின் குள்ளமான உருவத்தைக் கண்ட காவிரி… இப்படியும் ஒரு குள்ளமுனியா என்று ஏளனமாக பேசி சிரித்தாள்…

VOICE OVER: இதனால் கடுங்கோபமுற்ற அகத்திய முனிவர்.. காவிரியின் ஆணவத்தை அடக்க எண்ணி… தன் கையில் வைத்திருந்த கமண்டலத்தில் அவளை அடைத்தார்…

VOICE OVER: இதனைக் கண்ட முனிவர் ஒருவர்… தென்னகத்தை செழுமையாக வைத்திருக்க உதவும் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து விட்டாரே அகத்தியர்… காவிரியை எப்படியாவது மீட்க வேண்டும் என நினைத்த முனிவர்… கைலாயம் சென்று கணபதியிடம் முறையிட்டார்…

கணபதி: கவலைப் படாதீர்கள்… அகத்தியரின் கமண்டலத்திலிருந்து… காவிரியை விடுவிக்க வேண்டும்.. அவ்வளவுதானே… இதோ இப்பொழுதே புறப்படுகிறேன்…

VOICE OVER: கவலைப் படாதீர்கள்… அகத்தியரின் கமண்டலத்திலிருந்து… காவிரியை விடுவிக்க வேண்டும்.. அவ்வளவுதானே… இதோ இப்பொழுதே புறப்படுகிறேன்…

Advertisement

கணபதி: கவலைப் படாதீர்கள்… அகத்தியரின் கமண்டலத்திலிருந்து… காவிரியை விடுவிக்க வேண்டும்.. அவ்வளவுதானே… இதோ இப்பொழுதே புறப்படுகிறேன்…

VOICE OVER: ஆணவத்தால் தன்னை இகழ்ந்து பேசிய காவிரியை… கமண்டலத்தில் அடக்கிய அகத்தியர்… ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார்…

VOICE OVER: கமண்டலத்திலிருந்த காவிரியை விடுவிக்க எண்ணிய கணபதி… ஒரு காக்கையின் வடிவெடுத்து… தாழ்வாக பறந்து வந்து… கமண்டலத்து நீரை கவிழ்த்து… காவிரியை விடுவித்ததும் ஒரு பாலகனாக உருமாறி நின்றார்… அகத்தியர்: என் கமண்டலத்திலிருந்து காவிரியை விடுவித்த சிறுவனே… உன்னை என்ன செய்கிறேன் பார்…

அகத்தியர்: விநாயகப் பெருமானே… ப்ரணவப் பொருளே… பிள்ளைவடிவில் வந்தது யாரோ என்று நினைத்தேன்… வந்தது பிள்ளையார் தான் என்று எமக்கு தெரியாமல் போய் விட்டதே… உங்களையா நான் குட்ட வந்தேன்…

கணபதி: அகத்தியரே… குட்ட வந்ததை ஏன் நிறுத்தி விட்டீர்கள்… குட்டுப் பட்டாலும் தமிழில் எழுதும் உங்களைப் போன்ற… தவமணி கையால் குட்டுப் பட வேண்டும்… ம்.. குட்டுங்கள்…

அகத்தியர்: விநாயகா… உம்மையா நான் குட்டுவது… உம்மை குட்ட வந்ததற்கு என்னையல்லவா நான் குட்டிக் கொள்ளவேண்டும்…

கணபதி: அகத்தியரே… நீர் தவறேதும் செய்யவில்லை… உங்களால் தான் இன்று காவிரிக்கு புதிய பாதை கிடைத்துள்ளது.. இன்றுமுதல் காவிரி தமிழகத்தின் தலையாய நதியாக விளங்கும்…

Advertisement
Continue Reading
Advertisement