Mythological Stories - Tamil
Ganesha – Vishnu’s Dharma Chakra – ஸ்ரீ கணேசா – விஷ்ணுவின் தர்மச்சக்கரம்
திருமாலைப் போலவே தானும் தர்மச்சக்கரத்தைக் கையில் ஏந்தியபடி விளையாட நினைத்த கணபதி

விஷ்ணுவின் தர்மச்சக்கரம்
காட்சி-01
VOICE OVER: முழுமுதற்கடவுளான கணபதி.. சிறு பிள்ளையாக இருந்த போது… மூன்று உலகங்களுக்கும் தாவி ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்… வைகுந்தம் வழியாக குதித்து ஓடிய போது… யோகத்தில் அமர்ந்திருந்த திருமாலின் கையில்… பளபளவென்று மின்னிய சக்கரத்தைக் கண்டார்…
VOICE OVER: திருமாலைப் போலவே தானும் தர்மச்சக்கரத்தைக் கையில் ஏந்தியபடி… விளையாட நினைத்த கணபதி… தக்க சமயத்தில் தாவி ஏறி… தர்மசக்கரத்தை எடுத்துக் கொண்டார்…
VOICE OVER: சக்கரம் தன் கைவிட்டுப் போனதை உணர்ந்தார் விஷ்ணு… பலமுறை திருப்பித் தர கேட்டும்… தரமறுத்த கணபதி.. தன் வாயில் அதை வைத்துக் கொண்டார்… என்ன செய்வது என்று அறியாமல்… திகைத்து நின்றார் விஷ்ணு…
விஷ்ணு: ம்… என்ன செய்வது… எப்படிக் கேட்டாலும் சக்கரத்தை தர மறுக்கிறானே… என்ன செய்யலாம்… ம்… நாம் எப்படியாவது கணபதியை சிரிக்க வைக்க வேண்டும்… அவன் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் பொழுது…சக்கரம் கீழே விழுந்து விடும்… ம்…
VOICE OVER: கணபதியை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்த விஷ்ணு… தான் காதுகள் இரண்டையும்… கைகளால் பற்றிக் கொண்டு… கீழே குனிந்து எழுந்து… தோப்புக் கரணம் போட ஆரம்பித்தார்… அதைக் கண்ட கணபதி…. நன்றாக வயிறுகுலுங்க வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார்… அவர் இவ்வாறு சிரிக்கும் பொழுது… வாயில் வைத்திருந்த சக்கரம்… கீழே விழ… அது விஷ்ணுவிடம் தானாகவே வந்து சேர்ந்தது…
VOICE OVER: கணபதியின் முன் தன் காதுகளைப் பற்றிக் கொண்டு… விஷ்ணு தோப்புக் கரணம் போட்டு… தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டது போலவே… நாமும் நம் எண்ணம் நிறைவேறவே… ஒவ்வொரு முறையும்… கணபதியை வணங்கும் போது… தோப்புக் கரணம் போடுகின்றோம்…