Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Be With Gratitude – பஞ்சதந்திரக் கதைகள் – நன்றி மறக்காதே

Panchatantra Stories – Be With Gratitude – பஞ்சதந்திரக் கதைகள் – நன்றி மறக்காதே PR039 15

நன்றி மறக்காதே

காட்சி-01

VOICE OVER: ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்… அந்த ஊரில் மழை இல்லாததால் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடியது… ஊரில் பலரும் பிழைப்பைத் தேடி… வெளியூர் புறப்பட்டு போனார்கள்…

VOICE OVER: ஆனால் பரம்பரை பரம்பரையாக அதே ஊரில் வாழ்ந்து வந்த… வடிவேலு மட்டும் ஊரைவிட்டு செல்ல மனமில்லாமல்… வறுமையில் வாடினான்… VOICE OVER: அவன் மனைவியோ, தானும் இரண்டு பிள்ளைகளும் பசியால் வாடி, மரணவேதனைப் படுவதை எடுத்துச் சொல்லி வேலை தேடிவர, கட்டாயப் படுத்தி அனுப்பி வைத்தாள்…

VOICE OVER: குடும்ப சூழ்நிலை புரிந்து அவனும் நகரம் நோக்கி சென்றான்… போகின்ற வழியில்… ஒரு பெரும் பள்ளம்… அதில் ஒரு மனிதன்… ஒரு குரங்கு, ஒரு புலி, ஒரு பாம்பு நான்கும் மேலே வர வழி தெரியாமல்… தவித்துக் கொண்டிருப்பதை விவசாயி பார்த்தான்…

நால்வரும்: மனிதனும் மற்ற ஜீவராசிகளும், ஐயா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்… நான் உங்களுக்கு என்னால் இயன்ற ஏதேனும் ஒரு உதவி செய்து எனது நன்றிக்கடனைத் தீர்க்கிறேன்… என்று ஒவ்வொன்றாய் குரல் கொடுத்தனர்… ஏழை விவசாயிக்கு… மனம் இளகியது… நால்வரையும் காப்பாற்றிவிட்டு… தன் வழியே போனான்… காலையில் புறப்பட்டவன், மாலை வரை எங்கு தேடியும், வேலை இல்லாமல், உடலும் மனமும், சோர்ந்து, வீடு திரும்ப எண்ணினான்..

VOICE OVER: காலையில் உதவிய பள்ளம் வழியே வந்து கொண்டிருந்த போது…

நரி: ஐயா…

Advertisement

VOICE OVER: என்று ஒரு குரல் கேட்டது… எதிரே மரத்தின் மீதிருந்த குரங்கு… குதித்து நின்றது… அதன் கைகளில் திராட்சைப் பழங்கள்நிறைய இருந்தன… விவசாயி நல்ல பசியில் இருந்தான்… இதைப் புரிந்து கொண்ட குரங்கு…

குரங்கு: களைப்பாக இருப்பது போல் தெரிகிறது… இந்த பழங்களை உண்டு பசியாறுங்கள்…என்றது…

VOICE OVER: வடிவேலுவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது என்றாலும், குரங்கிடமிருந்து எப்படி வாங்கி உண்பது என்றுயோசித்தான்… குரங்கு தயங்காதீர்கள் ஐயா… என்னை உங்கள் நண்பனாக எண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள்…

VOICE OVER: என்று அன்புடன் சொல்லவே… வடிவேலுவால் அதை மறுக்க முடியவில்லை… வாங்கி பசியாற உண்டு… நன்றி சொல்லி புறப்பட்டான்… சிறிது தூரத்தில்… புலி நின்று… புலி: வாருங்கள் தலைவரே… உங்கள் வறுமை புரிகிறது… இதோ… என் குகையில் ஏராளமான பொன்னும் மணியும் இருக்கிறது… உங்களுக்கு தேவையானதை எடுத்துச் செல்லுங்கள்…

VOICE OVER: என்றது விவசாயியும் புலியின் அன்பை மறுக்காமல்… சில நகைகளுடன் திரும்பினான்…

விவசாயி: இந்த நகைகளை என்ன செய்ய… யாரிடமாவது சென்று விற்று பணமாக்கிக் கொள்ளலாம்…

VOICE OVER: என்று எண்ணினான்… அவனுக்கு உடனே பள்ளத்திலிருந்து தான் காப்பாற்றிய மனிதன் நினைவு வந்தது… நேராக அவனிடம் சென்று… நடந்ததைக் கூறினான்…

VOICE OVER: அவனொரு நகை வியாபாரி… விவசாயி கையில் இருக்கும் நகைகள் யாவும்… அரச குடும்பத்தின் நகைகள் என்பது புரிந்தது… உடனே இத்தகவலை அரசனிடம் சொல்லி… அதிகப் பொருள் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தா

Advertisement

VOICE OVER: ன்கொஞ்சம் இரு… இதோ.. வருகிறேன்…

என்று சொல்லி புறப்பட்டவன்… அரச காவலாளியுடன் வந்து…

விவசாயி ஒரு திருடன்… என்று சொல்லி …

சேவகர்களும்… அவனை அரசன் முன் நிறுத்தி…தண்டனைப் பெற்று சிறையில் தள்ளினார்கள்…சிறையில் விவசாயி மிகவும் மனம் வருந்தினான்…

ஒரு குரங்குக்கும், புலிக்கும் இருந்த நன்றி கூட… இந்த மனிதனுக்கு இல்லையே.. என்ன உலகம் இது… என்று கவலைப் பட்டான்… சரி… பாம்பும் தன் உதவி வேண்டுமானால் கேள் என்று சொன்னதே… அது என்ன செய்கிறது பார்ப்போம்…

என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன்… மனதார ஒருகணம் பாம்பை நினைத்தான்… அவன் நினைத்த மறுநொடியே எதிரில் தோன்றியது பாம்பு… நடந்த கதையைச் சொன்னான்…

VOICE OVER: ஐயா… நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்.. நான் நேராக அரசியாரின் காலை கொத்தி விடுகிறேன்… நீங்கள் வந்து தொட்டுத் தடவினால் தான்.. விஷம் நீங்கும் படி செய்கிறேன்… ராணியும் உயிர் பிழைப்பாள்… நீங்களும் விடுதலை ஆகலாம்…

என்றது பாம்பு… அதே போல் பாம்பு அரசியைத் தீண்டி விட… எத்தனையோ அரண்மனை வைத்தியர்கள் வந்தும் விஷம் இறங்காமல் போக… காவலாளி மூலம்… தான் ஒரு மந்திரம் மூலம் ராணியைக் காப்பாற்றுவதாக… விவசாயி சொல்லியனுப்ப… மன்னனும் விவசாயியை வரவழைத்தான்…

Advertisement

VOICE OVER: பாம்பை மனதில் நினைத்து ராணியின் பாதங்களை நீவியதும்… விஷம் இறங்கி கண்விழித்தாள்… அரசனும் மனம் மகிழ்ந்தான்…

விவசாயி தான் குற்றமற்றவன் என்பதை அரசனிடம் நிரூபித்தான்…

 

Continue Reading
Advertisement