Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Cunning Fox – பஞ்சதந்திரக் கதைகள் – தந்திர நரி

யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு
நாள் வெளிப்பட்டே தீரும்

தந்திர நரி

காட்சி-01 சிங்கம், நரி, voice over…

VOICE OVER: ஒரு அடர்ந்த காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது… அது இரை தேடி அங்கும் 

இங்கும் திரிந்ததில்…  பாதை மாறி நகரத்திற்குள் வந்தது…. 

VOICE OVER: அங்கே ஒரு வீட்டின் முன்பு மிகப் பெரிய தொட்டி இருந்தது… அந்த வீடு 

துணிகளுக்கு வண்ணம் போடும் சாயக்காரர் வீடு… அவர் தன் வீட்டு முன் இருக்கும் தொட்டியில் தினம் ஒரு வண்ணச்சாயம் கலந்து வைப்பார்… அன்றும் அப்படித்தான்… நீல நிற கலவையை கலந்து வைத்திருந்தார்…

VOICE OVER: நீண்ட நேரம் ஓடி வந்த களைப்பால்… நரிக்கு மிகுந்த தாகம் எடுத்தது… 

குடிக்க தண்ணீர் தான் இது என்று நினைத்த நரி… தொட்டியின் விளிம்பில் நின்று… குனிந்து குடிக்க தலை கவிழ்ந்த போது…  தொட்டிக்குள் நிலை தடுமாறி… விழுந்து விட்டது…

Advertisement

VOICE OVER: உள்ளே விழுந்த நரிக்கு இது தண்ணீர் தொட்டி இல்லை என்பது புரிந்தாலும்…  

ஏதோ வண்ணக் கலவை நம் நிறத்தை மாற்றி புது வடிவமாக, புதிய மிருகமாக காட்டுகிறது  என்பதை மட்டும் உணர்ந்து கொண்டது… 

VOICE OVER: நரிக்கு எப்போது தந்திர சூழ்ச்சி குணம் உண்டு அல்லவா… இந்த நீல நிறத் 

தோற்றத்தைக் காட்டி… நாம் எப்படி மற்றவர்களை ஏமாற்றி உயிர்வாழலாம் என்று யோசித்தது…  அதற்கா தெரியாது நடிக்க… ராஜகம்பீரத்துடன் அந்த நரி காட்டுக்குள் வந்தது… எல்லா மிருகங்களையும் அழைத்தது… ஒரு தலைவன் போல் பேசத் தொடங்கியது… 

நரி எல்லோரும் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.. நான் கடவுளின் வரம் 

பெற்றவன்… இங்கே உள்ள காட்டு விலங்குகளுக்கு எல்லாம்… நானே இனி தலைவன்… அதனால் தான் கடவுள் எனக்கு நீல நிறத்தை பரிசாக கொடுத்து உங்களிடம் அனுப்பி உள்ளார்… எனவே நீங்கள் எல்லோரும்… என் உத்தரவுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால்.. உயிர் பிழைக்கலாம்..  மறுத்தால் என்னை அவமதிப்பது மட்டுமின்றி… அந்த கடவுளையும் அவமதித்த குற்றத்திற்கு ஆளாவீர்கள்…  நான் தங்குவதற்கு அரண்மனை போன்ற குகையும், தினமும் விருந்தும் எனக்கு நடக்கட்டும்.. நீங்கள் இனி கலைந்து போகலாம்… 

கடவுளின் பிரதிநிதியாக ஒருவர் நம் காட்டுக்குவந்திருக்கிறார் என்றால்… 

அவருக்கு நடக்கவேண்டிய உபசரிப்புக்கு பஞ்சமா என்ன…

Advertisement

VOICE OVER: நரி அரசன் போல அமர்ந்திருக்க…. இடது புறம் சிங்கமும், வலதுபுறம்  புலியும் 

பாதுகாவலர்களாக நின்று இருக்க… குரங்குகள் கையில் தட்டு நிறைய திராட்சைப் பழங்களுடன் காத்திருந்தன… மயில் சபையில் ஆடியது… குயில் சங்கீதம் பாடியது…  கரடி சமையல் வேலைகளைப் பார்த்தது… மான்கள் சின்னச் சின்ன உதவிகளை செய்தது… எங்கே தனது சுயரூபம் தெரிந்து விடுமோ என்று எண்ணி பயந்த தந்திர நரி… தன் இனத்தார் கண்களில் மட்டும் படாமலே தப்பித்து வந்தது… 

VOICE OVER: ஆனால் நரிகள் கூட்டத்திலிருந்து… ஒரு நரியைக் காணவில்லை என்பதும்… 

யாரோ புதிதாக காட்டுக்கு தலைமை ஏற்க வந்திருக்கிறார் என்பதும்… மற்ற நரிகளை குழப்பத்தில் தள்ளியது.

VOICE OVER: முடிவில் உண்மையை வரவழைக்க… ஒரு நரியை ஊளையிட்டு பாடச் செய்வது 

என்று முடிவாயிற்று… எங்கிருந்தோ நரி ஒன்று ஊளையிட்டது… இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த ஆர்வம் பொங்க… புதிய தோற்றத்திலிருந்த நரியும் பதிலுக்கு ஊளையிட்டது… 

நரி இந்த சத்தம் கேட்டு கண்விழித்த மற்ற மிருகங்கள்…

புலி: அடக்கடவுளே… இத்தனைநாட்களும் நரிதான் நம்மை ஏமாற்றியதா…

Advertisement

சிங்கம்: அதன் தந்திரம் தெரியாமல் நாமும் அது சொன்னபடி எல்லாம் 

தலையாட்டினோமே…

VOICE OVER: என்று எல்லாக் காட்டு விலங்குகளும், கடும் கோபம் கொண்டு… நரி மீது 

பாய்ந்து கடித்துக் குதறின… 

VOICE OVER யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு 

நாள் வெளிப்பட்டே தீரும்…  

Continue Reading
Advertisement