Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Do Not Ignore – பஞ்சதந்திரக் கதைகள் – புறக்கணிக்காதே

எப்பவுமே இது தான் நடக்கும் என்று உறுதியாக இருக்கலாம் ஆனால் அலட்சியமாக இருக்கக்கூடாது

Panchatantra Stories – Do Not Ignore – பஞ்சதந்திரக் கதைகள் – புறக்கணிக்காதே PR039 03

புறக்கணிக்காதே…

காட்சி-01 மயில்சாமி,மாடசாமி,மீன்கள் 1,2,3,voice over…

VOICE OVER:ஒரு ஊரின் நடுவில் இருந்த குளத்தின் அருகே… இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தனர்…

மயில்சாமி:என்ன மாடசாமி… வியாபாரம் எல்லாம் நல்லா நடக்குதா…

மாடசாமி:எங்க மயில்சாமி… எங்க ஊரு ஆறெல்லாம் வத்திப் போச்சு… மீன் பிடிக்கற தொழிலையே விட்டுடலாம்னு நினைக்கிறேன்…

மயில்சாமி:அப்படியெல்லாம் சொல்லாத மாடசாமி… ஒரு கதவு அடைபட்டா… இன்னொரு கதவு திறக்குன்னு சொல்லுவாங்க… உங்க ஊர்ல தண்ணியில்ல… மீன் இல்லன்னு தான இங்க வந்திருக்க… எங்க ஊர்ல குளம் குளமா மீன் குவிஞ்சி கிடக்கு… அள்ளிகிட்டு போவியா…

மாடசாமி:நிஜமாவா சொல்ற… என்னால நம்பவே முடியலையே…

மயில்சாமி:அட ஆமாம்பா… நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்… வேணும்னா நாளைக்கு வலையோட வா.. நானும் வரேன்.. இஷ்டம் போல பங்கு போட்டுக்குவோம்… என்ன சொல்ற…

Advertisement

மாடசாமி:ரொம்ப சந்தோஷம்… அப்ப நாளைக்கு இதே நேரம் கண்டிப்பா வந்திடறேன்… மறக்காம நீயும் வந்திடு மயில்சாமி…

மாடசாமி:இருவரும் பேசிவிட்டு கலைந்து சென்றனர்…

VOICE OVER :இவர்களின் பேச்சைக் கேட்ட அந்த மீன்களில் சில வருத்தப் பட்டன….

:குளிர்ந்த நீரில் சுகமாக ஓடி ஆடி விளையாடும் நாம்… நாளை யார் வீட்டுக் குழம்பில்

கொதிக்கப் போகிறோமோ… என்று கவலைப்பட்டன…

பாத்தியா… நம்ம கதை இன்னையோட முடியப்போகுது… என்ன பண்ண போறீங்க

அதான் எனக்கும் புரியலை… நினைக்கும் போதே… துக்கம் தொண்டையை அடைக்குது…

மீன் 1:இப்படி கவலைப் பட்டா காரியம் ஆகாது… நாமஇன்னிக்கே, இப்பவே, வேற இடத்துக்குப் போவோம்…

Advertisement

மீன் 2:அதெப்படி முடியும்… நம்ம கூட்டத்தை விட்டுட்டு… நாம ஒரு சிலர் மட்டும் போனா நியாயமா…

மீன் 1:இரண்டு மீன்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது… மூன்றாவதாக அங்கு வந்த மீன் பேசியது…

மீன் 2அந்த மனிதர்கள் பேசினதை நானும் கேட்டேன்… அதுக்காக நாம ஓடி ஒளியணும்னு அவசியம் இல்லை… ஏன்னா இந்த மனிதர்களே இப்படித்தான்… நம்மை பயமுறுத்த ஏதாவது சொல்வாங்க… ஆனா செய்ய மாட்டாங்க… வீணா கவலைப் படாதீங்க…

VOICE OVER : ஒரு வேளை வந்திட்டா… நமக்கு ஆபத்து தானே…

மீன் 3:ஆபத்து எந்த ரூபத்தில வேணும்னாலும் வரும்… யாரும் எங்கயும் போகவேணாம்… நாம எல்லோரும் இங்கயே இருப்போம்…

இதோ பார்… என் பேச்சை கேட்டு என்னோட வேற இடம் வர விரும்பறவங்க என்னோட வாங்க… இங்கயே பிடிவாதமா இருந்து செத்துப் போறவங்க… இருங்க.. நான் கிளம்பறேன்…

மீன் 1:இப்படி துணிச்சலாக பேசிய மீனைத் தொடர்ந்து… ஐந்து பத்து மீன்கள் என ஒரு சிறிய கூட்டம் அந்த குளத்தை விட்டு வேறு இடம் நகர்ந்தது…

மீன் 3:மூன்றாவதாக வந்து வீராப்பு பேசிய மீனும், அதற்கு ஆமாம் போடுகிற சில மீன்களும், அங்கேயே இருந்தன…

Advertisement

மீன் 1:மறுநாள் சொன்ன படி அந்த இரு மனிதர்களும் வந்தனர்… வலையை விரித்தனர்… பிடிவாதம் செய்த பெரிய மீன் உட்பட… ஏராளமான மீன்கள் வலையில் சிக்கியது… அப்போதுதான் அந்த பெரிய மீனுக்கு தனது அலட்சியம் புரிந்தது… புத்திசாலித்தனமாக நேற்று புறப்பட்ட மீன்களின் அறிவு.. நமக்கில்லையே என்று உள்ளுக்குள் வருந்தியது…
VOICE OVER:எப்பவுமே இது தான் நடக்கும் என்று உறுதியாக இருக்கலாம்… ஆனால் அலட்சியமாக இருக்கக்கூடாது… எதுவும் நடக்கலாம்… இப்படி இல்லாமல் அப்படி நடந்தால் அதை எப்படியும் சமாளிக்க நாம் கவனமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்…

Continue Reading
Advertisement