Moral Stories - Tamil
Panchatantra Stories – Don’T Be Greedy – பஞ்சதந்திரக் கதைகள் – வேண்டாம் பேராசை
அதனால் அளவோடு ஆசைப்பட்டால்… வளமோடு வாழலாம்

வேண்டாம் பேராசை
காட்சி-01 கொக்கு, நண்டு, voice over.
VOICE OVER: ஒரு அழகான குளத்துக் கரையில், வெள்ளைக் கொக்கு ஒன்று தன் ஒற்றைக்
காலை தூக்கியபடி நின்றிருந்தது…
அதன் உள்ளத்தில் மட்டும் ஏனோ தெரிய வில்லை கவலை…
கொக்கு நமக்கோ வயதாகிவிட்டது… இனியும் குளம் குளமாக சென்று, தவமிருந்து மீன்
பிடித்துத் தின்று உயிர் வாழமுடியாது… அதனால் நாம் இதற்கு உடனடியாக ஒரு வழி கண்டுபிடித்தே ஆக வேண்டும்… என்ன செய்யலாம்…
VOICE OVER: திடீரென கொக்கின் மனதில் வஞ்சக எண்ணம் குடிகொண்டது…. சிறிது நேரம்
கழித்து முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு… மிகவும் கவலையில்
ஆழ்ந்திருப்பது போல காணப்பட்டது.. அங்கு வந்த நண்டு ஒன்று கொக்கின் முகத்தைப் பார்த்து…
நண்டு. அக்கா… நீ ஏன் வருத்தமா இருக்க…
கொக்கு நான் என்னத்தை சொல்ல.. உன்னையும் உன் நண்பர்கள் மீன் கூட்டத்தையும்
நினைச்சாதான்.. மனசுக்கு வேதனையா இருக்கு…
நண்டு: என்னக்கா சொல்ற…
எங்களுக்காக நீ எதுக்கு வேதனைப் படணும்…
கொக்கு என்ன தம்பி இப்படி கேக்கற… நீ வேற அன்பா பாசமா அக்கான்னு கூப்பிடற…
உன்னோட பாசத்துல பாதியாவது எனக்கு இருக்காதா…
நண்டு: விவரமா சொல்லுக்கா…
கொக்கு தம்பி… இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கற ஜோசியர் என்ன சொன்னாரு
தெரியுமா…
நண்டு: சொன்னா தானே தெரியும்…
கொக்கு: இந்த வருஷம் நம்ம ஊருக்கு மழையே கிடையாதாம்… இன்னும் கொஞ்ச
நாள்ல இந்த குளம் வறண்டு காய்ஞ்சு போயிடுமாம்… அப்புறம் நீயும் மீன்களும் செத்து மடிய வேண்டியதுதானாம்…
நண்டு ஐயையோ… இப்ப என்னக்கா செய்யறது…
கொக்கு: அதுக்கு தான் ஒரு நல்ல யோசனைய கண்டுபிடிச்சேன்… சொன்னா நீங்க
எல்லாரும் கேப்பிங்களோ மாட்டிங்களோ தெரியல…
நண்டு என்னக்கா இப்படி சொல்லிட்ட…நீ என்ன சொன்னாலும் கேக்கறோம்…
கொக்கு: ஒண்ணுமில்ல.. பக்கத்துல ஒரு ஆறு போயிகிட்டு இருக்கு… அங்க
நிறைய தண்ணி இருக்கு…வத்தாது… உங்க எல்லாரையும் நானே அங்க கொண்டு போய் பத்திரமா விடலாமேன்னு யோசிச்சேன்…
நண்டு நல்ல யோசனைதான்… இப்பவே போயி மீனுங்ககிட்டயும், அவங்க
குட்டிங்ககிட்டயும் சொல்லி… மொத்தமா கூட்டிட்டு வர்றேன்…
கொக்கு: விஷயத்தை சொல்லு… தப்பு இல்ல… ஆனா மொத்தமா வேணாம்… ஒரு
நாளைக்கு பெரிய மீனா இருந்தா ரெண்டு… சின்ன மீனா இருந்தா நாலு…
அது போதும்… அவ்வளவு தான் என்னால தின்னமுடியும்..
நண்டு ஆமா.. ஆமா… உன்னாலயும் சுமக்க முடியணும் இல்லையா… சரிக்கா நான்
வர்றேன்… அப்போ எப்போ இருந்து எங்களைக் கூட்டிட்டு போற..
கொக்கு: நாளைக்கே என் வேலையை தொடங்கிடறேனே…
VOICE OVER மறுநாள் முதல்… தன்னால் முடிந்த அளவு… மீன்களை தன் கூரிய நீண்ட
மூக்கால்… குத்தி எடுத்துச் சென்று… வழியில் ஒரு பெரிய பாறையில் போட்டு… சுவைத்துச் சாப்பிட்டு விட்டு… நண்டுகளுக்கும் மீன்களுக்கும் நன்மை செய்வது போலவும்… பலனை எதிர் பாராமல் உழைப்பது போலவும்… நடித்தது… நாள்தோறும் மீன் உணவையே ருசித்து பழகிய கொக்குக்கு…
கொக்கு: இந்த நண்டை ஏமாற்றி அடித்துத் தின்றால் என்ன…
VOICE OVER என்று தோன்றியது… அதன் படி நண்டை அழைத்தது… நண்டும் கொக்கின்
முதுகில் ஏறிக் கொண்டது… கொக்கு பறந்தது… கொக்கின் முதுகில் பயணம் செய்த நண்டின் கண்களுக்கு… வழியில் ஒரு பாறை முழுதும் மீனின் முற்கள் இருப்பதை பார்த்ததும்… மனம் திக் என்றது…
அட சூழ்ச்சிக் கார கொக்கே… உன் பேச்சை நம்பி இத்தனை மீன் நண்பர்களை இழந்து விட்டேனே… என்னையும் இப்படி தான் உணவாக்கிடுவியோ..
என்று நினைத்தது…
VOICE OVER அது நம்மளைக் கொன்னு சாப்பிடறதுக்கு முன்னாடி… நாம அதன் கதையை
முடிச்சிட வேண்டியது தான்…
என்று தீர்மானித்த நண்டு… சற்றும் எதிர் பாராத நேரம் பார்த்து… கொக்கின் கழுத்தை தன் கூரான கைகளால் குத்தி… கொக்கை மண்ணில் சாய்த்தது…
பிறகு தன் பழைய இடத்திற்கே சென்று நடந்ததைக் கூறியது…
பேராசை பெருநஷ்டம்.. என்பது போல.. மீனுக்கும், நண்டுக்கும் ஆசைப்பட்ட கொக்கு… தானும் இறக்க நேரிட்டது… அதனால் அளவோடு ஆசைப்பட்டால்… வளமோடு வாழலாம்… இல்லையா குழந்தைகளா…