Moral Stories - Tamil
Panchatantra Stories – Don’t Be Proud – பஞ்சதந்திரக் கதைகள் – கர்வம் கொள்ளாதே
கர்வம் கூடாது யாரையும் அழிக்க நினைச்சா அந்த நினைப்பு
நம்மையே அழிச்சிடும் புரியுதா

கர்வம் கொள்ளாதே…
காட்சி-01
VOICE OVER: நாம மனிதரா இருந்தாலும், விலங்குகளா இருந்தாலும், வேறு எந்த உயிரினமா இருந்தாலும், கர்வம் என்ற தீய குணம் கூடவே கூடாது… அந்த குணம் வந்துட்டா… அது அவங்களை அடியோட அழிச்சிடும்… அது எப்படின்னு இப்ப பாக்கலாம்… கதை கேக்க நீங்க எல்லாம் தயாரா… ஆரம்பிக்கலாமா..
VOICE OVER: ஒரு ஊர்ல ஒரு அழகான கிராமம்… அந்த கிராமத்துக்கு வெளிய… கொஞ்சம் தொலைவுல ஒரு அடர்த்தியான காடு… அங்க தான் எல்லா மிருகங்களும் வாழும்… பெரிய மிருகம், சின்ன மிருகம்…எல்லாமே இந்த காட்டுக்குள்ள தான் இருக்கும்… காடுன்னா அந்த காட்டுக்கு ராஜா இருப்பாரு… அவர்தான் சிங்கம்… அவரை எல்லாருமே சிங்க ராஜா, சிங்கராஜான்னு கூப்பிடுவாங்க…
VOICE OVER: சிங்க ராஜா எப்பவுமே கோபக்காரர்… பசி எடுத்தாலும், இல்லைன்னாலும், எந்த மிருகம் எதிர்ல வந்தாலும்… அதை பாய்ந்து தாக்கி உயிரைப்போக்கிடும்… அதனால அதன் கண்ணில் படவே எல்லா மிருகமும் பயந்து நடுங்கும்…
VOICE OVER: சிங்க ராஜாவோட சர்வாதிகார போக்கு… மத்த மிருகங்களுக்கு கொஞ்சம்கூட பிடிக்கலை… அதனால எல்லா மிருகங்களும் கூட்டமா கூடி.. ஒரு முடிவெடுத்து… அதை தயங்கி தயங்கி… சிங்க ராஜாகிட்ட சொல்ல கிளம்பினாங்க…
கரடி: அரசே… அரசே…
சிங்கம்: யாரது… என்னோட குகைக்குவந்து சத்தம் போடறது…
யானை: மன்னிக்க வேண்டும் மகராஜா… நாங்க எல்லாரும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசவந்திருக்கோம்… நீங்க கோபப் படாம அவசியம் கேக்கணும்…
சிங்கம்: என்னது… என்னோட அடிமைங்க நீங்க.. உங்க அரசன் நான்… நீங்க சொல்றதை நான் கேக்கணுமா.. நான் எழுந்து வெளிய வரதுக்குள்ள… உயிர் பிழைச்சி ஓடிப் போயிடுங்க…
மான்: அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்… இது வீண் வேலை… விபரீதமா முடியும்னு…என் பேச்சை யாராவது கேட்டீங்களா…
குரங்கு: சரி… சரி… அழாத… கண்ணை தொடச்சிக்கோ.. நீ பயப்படற மாதிரி ஒண்ணும் ஆகாது… அரசே… நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்… நாங்க மறுக்கல… ஆனா வயசான நீங்க இரை தேடி கால் வலிக்க காடு முழுக்க அலைய வேண்டாம்… நீங்க வர்றதை பாத்து பயந்து எல்லோரும் ஓடி ஒளியறாங்க… இரை கிடைக்காத கோபம்… பசிஎல்லாம் சேர்ந்து… நல்ல ராஜான்னு பேர் எடுக்க வேண்டிய நீங்க.. கொடூரமானவன்னு பேர் வாங்கறீங்க… அதனால… சிங்கம் அதனால…
குரங்கு: அதனால நீங்க குகையிலயே இருங்க.. ஒரு ஒரு விலங்குகளும்… தங்கள் இனத்தில இருந்து ஒருத்தரை… உங்களுக்கு உணவா அனுப்பி வைக்கறோம்.. நீங்களும்… காடு மேடுன்னு அலைஞ்சி…திரிய வேணாம்… நாங்களும் எப்ப உங்க காலடி சத்தம் கேக்குமோன்னு.. அஞ்சி நடுங்க வேணாம்… ஆங்… என்ன சொல்றீங்க மகாராஜா…
சிங்கம்: பலே… நல்ல யோசனை… உங்க வார்த்தைகளை நம்பறேன்… பேச்சு படி நடக்காம, ஏமாத்த நினைச்சீங்கன்னா.. மூச்சை நிறுத்தறதுக்கு உங்க முன்னால வந்து நிப்பேன்… போங்க எல்லாரும்…
VOICE OVER: எல்லா மிருகங்களும் கலைந்து சென்றன… அதன் படி நாள் தோறும்… ஒரு விலங்கு சிங்க ராஜாவோட குகைக்கு போறது வழக்கம் ஆகிடுச்சி… .
.முயல் செல்ல வேண்டிய நாள்… தன் குட்டியை அனுப்ப தாய் முயலுக்கு மனமில்லை…
தாய் முயல்: என்ன செய்வது… அரசனுக்கு வாக்கு கொடுத்தாச்சே…
கண்ணீரும் கவலையுமா, தாய் முயல் குட்டியை அனுப்பி வச்சது…
இந்த புத்திசாலி முயல் ஆடிப் பாடிக் கொண்டு… சிங்கத்தை பாக்க
புறப்பட்டது…
VOICE OVER: அங்கே குகையிலோ சிங்கம் மிகவும் பசியால் கோபத்தின் உச்சியில் கர்ஜித்துக் கொண்டிருந்தது…
சிங்கம்: வரட்டும் அந்த திமிர் பிடித்த குட்டி மிருகம்… கொதிக்கும் எண்ணெய் சட்டியில போட்டு வாட்டி எடுக்கறேன் பார்…
குட்டிமுயல்: மன்னா… மன்னா… என்னை மன்னித்து விடுங்கள்…
சிங்கம்: ஏய்… அற்ப முயலே… ஏன் இத்தனை தாமதம்… என்னை ஏமாற்ற நினைத்தாயா… நான் பசி பொறுக்காதவன் என்று உன் அம்மா உனக்கு சொல்ல வில்லையா…. உன்னை என்ன செய்கிறேன் பார்….
குட்டிமுயல்: அரசே… அரசே… கொஞ்சம் பொறுங்கள்..
நான் எப்படியும் உங்களுக்கு உணவாகத்தான் வந்திருக்கிறேன்… என் தாமதத்திற்கு காரணம் அறிந்துகொண்டு பிறகு… என்னை எப்படி வேண்டுமானாலும் உண்ணுங்கள்….
சிங்கம்: சீக்கிரம் சொல்… நேரம் கடத்தாத…
குட்டிமுயல்: நான் வரும் வழியில் உங்களைப் போலவே இன்னொரு சிங்க ராஜாவைப் பார்த்தேன்… உங்கள் எதிரி என்றான்… உங்கள் வீரத்தையும் , பலத்தையும் இழிவாக பேசினான்… நான் தான் சாமர்த்தியமாக தப்பி உங்களிடம் ஓடி வந்தேன்.. இப்போது என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்… மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்…
சிங்கம்: என்னது எனக்கு எதிரியா.. அதுவும் இந்த காட்டுலயா… யார் அவன்… எங்கே இருக்கான்… காட்டு…
குட்டிமுயல்: வேண்டாம்.. மன்னா.. நீங்களோ பசியோடு இருக்கிறீர்கள்… முதலில் என்னை சாப்பிடுங்கள்… பிறகு அவனை தேடலாம்…
சிங்கம்: இப்போது எனக்கு பசியில்லை… வெறி தான் இருக்கிறது.. அவனை அழிக்க வேண்டும் என்ற வெறி…
குட்டிமுயல்: நீங்களோ இந்த காட்டுக்கே அரசர்… அவனோட மோதி உங்கள் உயிருக்கு ஆபத்து நேரிட்டால்… விட்டு விடுங்கள் மன்னா…
சிங்கம்: என் உயிரே போனாலும் பரவாயில்லை… எனக்கு எதிரி யாரும் இருக்கக் கூடாது…
எனக்கு போட்டியாக யாரையும் இருக்க விடமாட்டேன். வா… என்னோடு… எங்கே காட்டு அந்த எதிரியை…
குட்டிமுயல்: இதன் உள்ளே தான் அவன் பதுங்கி இருந்தான் ராஜா…. உங்களைக் கண்டதும்… பயந்து கொண்டான் போல் தெரிகிறது…
சிங்கம்: ஏய்… யாரது உள்ளே… வா.. வெளியே…
VOICE OVER: எட்டிப் பார்க்கிறது… கிணற்று நீரில்… தன் உருவம் தெரிய… முட்டாள் சிங்கம் சீறிப் பாய்ந்து… தன் உயிரையே விடுகிறது…
VOICE OVER: முயலின் வீரத்தைப் பார்த்து… மற்ற எல்லா மிருகங்களும்… மகிழ்ந்து விழா எடுத்தனர்…
VOICE OVER: கர்வம் கூடாது… யாரையும்… அழிக்க நினைச்சா… அந்த நினைப்பு நம்மையே அழிச்சிடும்… புரியுதா…