Moral Stories - Tamil
Panchatantra Stories – Don’t Tell Lie – பஞ்சதந்திரக் கதைகள் – பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே
காட்சி-1 காளியப்பன்,மனைவி, கோவிந்தன், voice over..
VOICE OVER : முன்னொரு காலத்தில் சிங்காரபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது… பெயருக்கு ஏற்ற மாதிரி… அந்த ஊர் பார்க்க அழகாக இருந்ததை… யாரும் மறுக்க மாட்டார்கள்… அந்த ஊரில் காளியப்பன் என்பவர்.. தன் மனைவி மகனுடன் வாழ்ந்து வந்தார்… அவர்களுக்கு என்று சில ஆடுகள் இருந்தது…
VOICE OVER : தினமும் காலை வேளையில் ஆடுகளை ஊருக்கு வெளியே ஓட்டிக்கொண்டு போய்.. மேய்ச்சல் நிலத்தில் விட்டு… பொழுது சாயும் நேரத்தில், பத்திரமாக வீடு வந்து சேருவது காளியப்பனி வேலை…
VOICE OVER : ஆனால் அவர் மகன் கோவிந்தனோ… வேலை செய்வது என்றாலே வெகுதூரம் ஓடுவான்… கேலிப்பேச்சு, வெட்டிப் பேச்சு… பொய், புரட்டு, இப்படி வேண்டாத பழக்கங்களுக்கும் அடிமையானான்… ஒரு நாள் காளியப்பன்… தன் மகனை அழைத்தார்…
காளியப்பன் : கோவிந்தா… இங்க… வா
கோவிந்தன் : என்ன விஷயம் சொல்லுங்க… நான் விளையாடப் போகணும்…
காளியப்பன் : படிப்பு தான் வரலை… உனக்கு.. ஏதாவது வேலைக்காவது போலாமே… நாலு காசு சம்பாதிக்கலாம்… அதை விட்டுட்டு விளையாட்டுப் பிள்ளையா இருக்கியே…
கோவிந்தன் : அது போகட்டும்… எதுக்கு கூப்பிட்டீங்க…
காளியப்பன் : நான் சில முக்கியமான வேலையா, வெளியூர் போயிட்டு ரெண்டு மூணு நாள்ல வந்திடுவேன்… அது வரைக்கும் இந்த ஆடுகளை பத்திரமா ஓட்டி வந்து பார்த்துக்கோ…
கோவிந்தன் : என்னால முடியாது நான் மாட்டேன்…
காளியப்பன் : அப்படி சொல்லாத கோவிந்தா… அப்பாவுக்கு உதவியா இருக்கறது உன் கடமை தானே…
அம்மா: இப்படி ஆரம்பத்தில் முரண்டு பிடித்தவன்… தாயார் சொன்னதும் சரி என்று ஒப்புக் கொண்டு…
VOICE OVER : மறு நாள்காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்றான்.. அவனுக்கு வேலைபார்த்து பழக்கம் இல்லை என்பதால்… பொழுது போக வில்லை… ஆடுகள் எங்கோ ஒரு மூலையில் கூட்டமாக தழைகளை மேய்ந்து கொண்டிருந்தன… தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டிருந்தனர்… அவர்களின் கவனத்தை திருப்ப எண்ணிய கோவிந்தன்… திடீரென… கோவிந்தன் புலி வருது.. புலி வருது
என்று கூச்சலிட்டான்… கோவிந்தனின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள்.. அவசர அவசரமாக ஓடினார்கள்…