Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Don’T Trust Anybody – பஞ்சதந்திரக் கதைகள் – எவரையும் நம்பாதே

எத்தனை நட்பாக பழகினாலும், வஞ்சக மனம் உடையவர் தங்கள் எண்ணத்தை
நிறைவேற்றாமல் விடுவத்தில்லை

எவரையும் நம்பாதே… 

காட்சி-01 சிங்கம், நரி, காகம், ஒட்டகம், voiceover…

VOICE OVER ஒரு வியாபாரி… தன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு… ஒரு காட்டு வழியே 

சென்று கொண்டிருந்தான்… வழியில் உடல் நலம் இல்லாமல் போனதால்… ஒட்டகத்தை அங்கேயே விட்டு விட்டு போனான்… காட்டில் கிடைத்ததை உண்டு… உடல்நலம் தேறிய ஒட்டகம் அங்கு சுதந்திரமாக உலவி வந்தது… 

VOICE OVER அதே காட்டில் ஒற்றுமையாக இருக்கும் சிங்கம், நரி, காக்கை மூன்றுக்கும், 

புதிதாக வந்த ஒட்டகத்தைப் பற்றி தெரியவரவே….  அழைத்து வந்து விசாரித்தது… ஒட்டகம் நடந்ததை சொல்ல… நாலும் நண்பர்கள் ஆயின… 

VOICE OVER ஒருமுறை யானையை வேட்டையாடிய சிங்கம்… பலத்தக் காயம் பட்டு… 

குகையை விட்டு வெளியே வர முடியாமல் அங்கேயே முடங்கிக் கிடந்தது… இதனால் சிங்கமும் வேட்டைக்கு போக முடியவில்லை…  மற்ற விலங்குகளும்,வேட்டையாடாமல் பட்டினிப் பசியால் உடல் வாடத்தொடங்கின… சிங்கம்  நரி, காகம், ஒட்டகம் மூன்றையும் அழைத்து,

Advertisement

சிங்கம்: நரியாரே… எனக்கு மிகவும் பசி…  ஏதாவது உணவு கொண்டுவர இந்த 

திசையில் செல்..  காக்கையாரே… நீ அந்த பக்கம் போ… ஒட்டகத்தாரே… நீ எதிர் பக்கம் போனால்… ஏதாவது கிடைக்கும்… மூவரும் வரும்போது உணவோடு தான் வர வேண்டும்… ம்..  செல்லுங்கள்…

VOICE OVER திசைக்கு ஒன்றாய் வந்த யாருக்கும் எந்த உணவும் கிடைக்க வில்லை… 

மூன்றும் மீண்டும் ஒன்று கூடி..  ஒரு முடிவெடுத்தது… அதன்படி சிங்கத்தின் முன்னால் போய் நின்றன…

காக்கா: சிங்கராஜா உங்கள் பசிக்கு என்னால் உணவு தேடமுடியவில்லை… எங்கு 

தேடியும் கிடைக்க வில்லை… எனவே என்னையே உணவாகத் தருகிறேன்…

நரி: வேண்டாம் அரசே… காக்கை மிகவும் சிறிய உருவம்… உங்கள் பசிக்கு நானே 

ஏற்ற உணவு.. என்னைக் கொன்று பசியாறுங்கள்…

Advertisement

ஒட்டகம்: இல்லை மன்னா… எங்கள் மூவரில் நானே பெரியவன்… என் ஒருவனால் 

உங்கள் அனைவரின் பசியும் அடங்கும்…  என்னை அடித்து சாப்பிடுங்கள்…  

VOICE OVER இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சொன்னாலும், ஒட்டகம் சொன்ன மறுநொடியே, 

சிங்கமும், நரியும் அதன் மீது பாய்ந்தது… 

VOICE OVER எத்தனை நட்பாக பழகினாலும், வஞ்சக மனம் உடையவர் தங்கள் எண்ணத்தை 

நிறைவேற்றாமல் விடுவத்தில்லை… தீயவரின் நட்பு தீமையே கொடுக்கும்…நன்மை தருவது போல முதலில் தோன்றினாலும், சமயம் வரும் போது தீயவர் குணம் மாறாது…

Continue Reading
Advertisement