Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Elephant And Mice – பஞ்சதந்திரக் கதைகள் – யானைகளும், எலிகளும்

இவரால் நமக்கு என்ன உதவி செய்ய முடியும் நாம் தானே பலசாலி… என்று கர்வம் கொள்ளக் கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா

யானைகளும், எலிகளும் 

காட்சி-01 யானை,எலி, voice over…

VOICE OVER: ஒரு முறை காட்டில் இருந்த யானைகள் ஒன்று திரண்டு… ஒன்றன் பின் 

ஒன்றாக, இரை தேட வேறிடம் செல்லத் தொடங்கியது… 

அப்படி அவை போகும் பாதையில் மிதிபட்டு சுண்டெலிகள் பல இறந்தன…

இதனால் எலிகள் எல்லாம் கூட்டம் போட்டு பேசின… யானைக் கூட்டத் தலைவனை சந்திப்பதென்றும், தங்கள் உயிர் பயத்தை தெரிவிப்பது என்றும்… இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது… 

கம்பீரமாக நடந்து வரும் யானைகளின் முன்னால்… எலிகள் கூட்டத்தலைவன் போய் நின்றது… 

யானை: யாரது எங்கள் வழியில் குறுக்கிடுவது… உயிர் மேல் ஆசையிருந்தால் 

Advertisement

ஓடிவிடு இங்கிருந்து…

எலிகள் தலைவன்: ஐயா… கோபிக்காதீர்கள்…. உங்கள் வீரம் உலகமறிந்தது… நான் 

உங்கள் வழியில் குறுக்கீடு செய்து உங்களது பயணத்தை தடை செய்ய வரவில்லை…  எங்கள் மரண பயத்தை உங்களிடம் சொல்லத்தான் வந்தேன்… நீங்கள் வரும் வழியில் கணக்கில்லாத எங்கள் இனத்தவர்… மிதிப்பட்டு இறந்து போயினர்…  எனவே தயவு செய்து உங்கள் பயணத்தை வேறு திசையில் மாற்றிக் கொண்டால்… எங்கள் எலிக்கூட்டம் கவலையில்லாமல் இருக்கும்… செய்வீர்களா… 

யானை: உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது… உங்கள் இனத்தை 

அழிப்பது எங்கள் நோக்கமல்ல… நாங்கள் வேறு பாதைவழியே செல்வதில் தடையேதுமில்லை… அச்சமில்லாமல் வாழுங்கள்… இனி எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது… 

எலிகள் தலைவன்: நன்றி ஐயா… மிக்க நன்றி… எலிதானே என்று ஏளனம் பேசாமல்… 

நீங்கள் செய்த பெரிய உதவிக்கு… கைமாறாக எங்களால் முடிந்த உதவியை செய்யக் காத்திருக்கிறோம்… வருகிறேன்… வாருங்கள் போவோம்… 

VOICE OVER: எலி தலைவன் தனது  கூட்டத்தை அழைத்துக் கொண்டு புறப்பட்டது… 

Advertisement

யானை இந்த சுண்டைக்காய் அளவு எலிகள் மலை போல் இருக்கும் நமக்கு 

உதவி செய்கிறதாம்… கேட்பதற்கு வேடிக்கையாய் இருக்கிறது… 

VOICE OVER: என்று யானைகள் எண்ணிக்கொண்டன…

ஒருநாள் வழக்கம் போல குளத்தில் நீராட யானைகள்  சென்றபோது…  வேடர்களால் வைக்கப் பட்டிருந்த கண்ணி வலைகளில் விழுந்தன… எங்கோ கேட்ட யானைகளின் பிளிறல் சத்தத்தால்… அதற்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த எலிகள், கூட்டமாக அலறல் வந்த திசையை நோக்கி சென்றன.. 

VOICE OVER: யானைகளின் துன்பத்தைப் புரிந்த எலிகள்… வலைகளை தங்களது 

கூரிய பற்களால், கடித்து கிழித்து யானைகளை விடுவித்தது… 

VOICE OVER: எலிகளின் பெரிய உதவிக்கு… யானைகள் துதிக்கையை ஆட்டி 

அசைத்து… நன்றி தெரிவித்தன… யானைகள் தரையில் அமர்ந்து கொள்ள… எலிகள் முதுகில் ஏறி சறுக்கு மரம் விளையாடின… 

Advertisement

VOICE OVER: இவரால் நமக்கு என்ன உதவி செய்ய முடியும்… நாம் தானே 

பலசாலி… என்று கர்வம் கொள்ளக் கூடாது.. சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா.. 

Continue Reading
Advertisement