Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Foolish Crocodile – பஞ்சதந்திரக் கதைகள் – முட்டாள் முதலை

நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும் உண்மையோடு பழக வேண்டும் நன்றி இல்லாத நட்பு இருந்தால் இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்

முட்டாள் முதலை…

காட்சி-01 குரங்கு.ஆண்முதலை, பெண்முதலை voice over..

VOICE OVER: ஒரு குளிர்ந்த நீரோடை… அதனருகே அழகான நாவல்மரம்… அந்த மரத்திற்கு

தினமும் ஒரு குரங்கு வரும்… மரத்தில் ஏறி கிளைக்கு கிளை தாவி

விளையாடும்… பசி எடுக்கும் போது நாவல் பழங்களைப் பறித்து உண்ணும்…

தாகத்திற்கு தண்ணீர் குடிக்கும்…

VOICE OVER: இப்படி அதன் போக்கு இருந்த போது… அந்த ஓடைப் பக்கம் ஒரு புதிய

விலங்கு தண்ணீரில் நீந்தி வந்தது.. உடல் முழுதும் மேடும் பள்ளமுமாய்… முள்ளாக இருந்தது.. நீண்ட வால், கூரிய நகம் பார்க்கவே பயம் தருவதாக இருந்தது…

VOICE OVER : குரங்கு முதலி அதைப் பார்த்து பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்

கொண்டு பேசியது…

Advertisement

குரங்கு : ஹேய்… யார் நீ… எங்கே வந்தாய்…

முதலை : என் பேர் முதலை… எனக்கு இன்று இரை ஏதும் கிடைக்க வில்லை… அதனால்

நீந்திக் கொண்டே இந்த பக்கம் வந்தேன்..

எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது… எதாவது சாப்பிட இருந்தால் குடு…

குரங்கு: உன்னைப் பார்த்தால் பயமாக உள்ளது.. பசி என்கிறாய்… பாவமாகவும்

இருக்கிறது… சரி இந்தா… இந்த நாவல் பழங்களை சாப்பிட்டு… உன் பசியை தனித்துக் கொள்…

முதலை அதை ஆவலுடன் வாயைத் திறந்து எடுத்து சாப்பிட்டது…

மிகவும் ருசியாக இருக்கிறது… இது என்ன பழம்

குரங்கு: இதுவா… இது நாவல் பழம்…

நான் தினமும் இங்கே தான் வருவேன்… இந்த மரத்தில் சிறிது நேரம் விளையாடிவிட்டு… பழங்களைத் தின்று… நீரைக் குடித்து பசியாறிக் கொள்வேன்…

Advertisement

முதலை: நீ சரி என்றால் நானும் இங்கே அடிக்கடி வருவேன்… நாம் இருவரும்

நண்பர்கள் ஆவோம்… என்ன சொல்கிறாய்..

குரங்கு :எனக்கும் விளையாட துணை இல்லை… சரி அப்படியே செய்வோம்…இந்தா

இந்த பழங்களை கொண்டு போய் உன் வீட்டில் கொடு…

VOICE OVER முதலை அதை பத்திரமாக எடுத்துச் சென்று… தன் மனைவியிடம்

கொடுத்தது…

பெண்முதலை: ஆஹா… ஏது இந்த பழம்…

நானே இப்போது தானே ருசித்தேன்… இது நாவல் பழமாம்…

முதலை தான் பசியோடு இருந்த போது… குரங்கை சந்தித்தக் கதையைக்

கூறியது…

Advertisement

ஆண்முதலை: கவலைப்படாதே… இனி என் நண்பனிடம் உனக்காக இன்னும் கொஞ்சம்

அதிகமாகவே பழம் பறித்து வாங்கி வருகிறேன்…

VOICE OVER: இப்படி அடிக்கடி, குரங்கிடமிருந்து தன் கணவன் நாவல் பழம் வாங்கி வந்து

ருசித்த பெண் முதலைக்கு அறிவு மழுங்கியது..

VOICE OVER: நாவல் பழமே இத்தனை ருசி என்றால்… இதை தினமும் சாப்பிடும் குரங்கின்

இதயம் எத்தனை ருசியாக இருக்கவேண்டும்…

என்று குறுக்கு வழியில் சிந்தித்தது..

பெண்முதலை: உங்களை ஒண்ணு கேக்கட்டுமா… கோவிக்கமாட்டீர்களே…

ஆண்முதலை: நீ எது கேட்டாலும் நான் கோவிக்க மாட்டேன்… உன்மேல் நான்

பிரியமானவன்…

Advertisement

பெண்முதலை: அப்படியானால்… அந்த குரங்கை நம் வீட்டுக்கு தந்திரமாக அழைத்து வாரும்…

அதன் இதயம் ருசிக்க ஆவ்லாக இருக்கிறேன்…

ஆண்முதலை: இது என்ன விபரீத ஆசை… அவன் என் நண்பன்… அவனை எப்படி உனக்கு

பலி ஆக்குவது…

VOICE OVER:: மனைவி முதலை ஆவேசமாக சண்டையிட்டு விட்டு போனதால்… ஆண்

முதலை மனம் வருந்தியது… சிறிது காலமே பழகினாலும்… நல்ல நண்பனுக்கு

துரோகம் செய்ய விரும்பவில்லை… ஆனாலும் வேறு வழியின்றி குரங்கிடம் சென்றது..

குரங்கு: வா நண்பா… ஏன் தாமதம்… என்ன உன் முகம் வாட்டமாக இருக்கிறது…

ஏதாவது கவலையா…

ஆண்முதலை: அதெல்லாம் ஒன்றும் இல்லை… தோழா… என் மனைவி உன்னை காண

Advertisement

விரும்புகிறாள்… விருந்து தயார் செய்து வைத்திருக்கிறாள்… வா… என் வீட்டுக்குப் போகலாம்… முதலையின் அழைப்பை உண்மை என்று நம்பிய குரங்கு.. அதன் முதுகில் ஏறி பாதி தூரம்சென்ற போது… முதலையால் உண்மையை மறைக்க முடிய வில்லை…

VOICE OVER: மனைவி சண்டையிட்டதை சொல்லியதைக் கேட்ட குரங்கு… தந்திரமாக

தப்பிக்க யோசித்தது…

குரங்கு: இந்த தகவலை நான் மரத்திலிருந்த போதே சொல்லக் கூடாதா… என்

இன்னொரு இதயத்தை அங்கே காயப்போட்டேன்… அதையும் எடுத்து வந்திருக்கலாமே…

முதலை: அதனால் என்ன… இதோ ஒரு நொடியில் உன்னை மரத்திற்கே சுமந்து

போகிறேன்… அதையும் கொண்டு வா… என் மனைவி மிகவும் சந்தோஷப்

படுவாள்…

VOICE OVER: பேசிக் கொண்டே இருவரும் பழைய இடத்திற்கே வர… குரங்கு ஒரே தாவல்

தாவி கிளையில் அமர்ந்து கொண்டது…

Advertisement

குரங்கு: ஏய் முட்டாள் முதலையே… நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்… பசி

என்று வந்த போது பழம் கொடுத்து உதவியதற்கு இது தான் பரிசா.. போய் விடு இங்கிருந்து…

முதலை: அப்படியானால் இன்னொரு இதயம் இருப்பதாக சொல்லி என்னை

ஏமாற்றினாயா….

குரங்கு: வேறு என்ன செய்யமுடியும்… உன்னைப் போன்ற நன்றி கெட்ட

நண்பனிடமிருந்து.. பொய் சொல்லித்தான் தப்ப வேண்டும்… யாருக்காவது

இரண்டு இதயம் உண்டா… என் கண்முன் நிற்காதே… இனி இங்கு வர வேண்டாம்

VOICE OVER: குரங்கு விரட்டியதில் முதலை சோகத்துடன் வீடு திரும்பியது…

நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும்… உண்மையோடு பழக வேண்டும்.. நன்றி இல்லாத நட்பு இருந்தால்… இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்…

Advertisement
Advertisement