Moral Stories - Tamil
Panchatantra Stories – Foolish Friend – பஞ்சதந்திரக் கதைகள் – முட்டாள் நண்பன்
முட்டாள்களை நாம் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது அவர்களோடு நட்பு பாராட்டினால் அது நமக்கே துன்பம் தரும்

முட்டாள் நண்பன்
காட்சி-01
மன்னன், குரங்கு, ஈ,voice over…
VOICE OVER: ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு… அவர் மத்த ராஜாக்கள் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமானவரு…. பொதுவா எல்லாருமே நாய்…பூனை போன்ற பிராணிகளைத்தான் செல்லமா வளர்ப்பாங்க… ஆனா இந்த ராஜாவோ…ஒரு குரங்கை தன்னோட அரண்மனையில செல்லமா வளர்த்து வந்தாரு… மக்களும் மந்திரிகளும் கூட கேலி பேசினாங்க… ஆனா அவர் எதைப் பத்தியும் கவலைப் படாம… தன் விருப்பப் படி நடந்தார்…
VOICE OVER: காலையில எழுந்ததில இருந்து, ராத்திரி படுக்க போற வரைக்கும் , இந்த ராஜாவும் குரங்கும் இணைபிரியாத நண்பர்கள் மாதிரி இருந்தாங்க… VOICE OVER: ஒரு நாள் அரசர் மதிய உணவுக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னு நெனச்சி அங்கிருந்த மெத்தையில சாய்ஞ்சாரு…கூடவே இருந்த குரங்கு அவர் தூங்கட்டும் அப்படின்னு பக்கத்துல இருந்த விசிறிய எடுத்து விசிறியது…
VOICE OVER: அங்க வந்த ஈ ஒன்று அரசரின் முகத்தருகே வந்து… தொந்தரவு செய்தது…
குரங்கு: ஏய்… ஈயே… உனக்கு என்ன துணிச்சல் இருந்தால்… அரசரின் முகத்தருகே வந்து விளையாடுவாய்… போய் விடு…
ஈ: கோபப் படாதீர்கள்… உன்னையும் அரசரையும் பார்த்து… என்னுடைய சிறிய சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவே வந்தேன்…
குரங்கு உனக்கு சந்தேகம் என்றால் அவைக்கு வந்து கேள்… பதில் கிடைக்கும்… இங்கே வந்து அரசரின் ஓய்வு நேரத்தைக் கெடுக்காதே… ஓடிப் போ…
ஈ: அரசர் தானே ஓய்வெடுக்கிறார்… அவர் நன்றாக உறங்கட்டும்… நீயாவது எனது சந்தேகத்தை தீர்த்து வைக்க முயற்சி செய்யலாமே..
குரங்கு சீக்கிரம் கேட்டுவிட்டு இடத்தை காலி செய்… அரசர் விழித்துக் கொள்ளப் போகிறார்…
ஈ: ஒன்றுமில்லை… உன்னை முட்டாள் குரங்கென்றும்… அரசரை முட்டாள் அரசர் என்றும்…மக்கள் சொல்கிறார்கள்… நானே என் காது பட கேட்டேன்… இது உண்மைதானா என்று அறியவே வந்தேன்…
குரங்கு: ஆஹா… உனக்கு என்ன ஆணவம்… அரசரின் நிழல் போலவே இருக்கும் என்னிடமே வந்து… என்னைப்பற்றியும் மன்னரைப் பற்றியும் இழிவாகப் பேசுகிறாயே… உன்னை என்செய்கிறேன்… பார்…
VOICE OVER: குரங்கு கையை ஓங்க… ஈ பறந்து விடுகிறது… மீண்டும் ராஜாவின் தோள் மீது அமர்கிறது…
ஈ: என்னை உங்களால் பிடிக்கமுடியாது… நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்
குரங்கு: அதையும் பார்க்கிறேன்… இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்…
VOICE OVER: என்றபடி அரசரின் அருகில் இருந்த கத்தியை எடுத்து… ஈயைக் கொள்ள ஓங்கியது… ஈ பறந்து விட… கத்தியின் கூர்மை மன்னரின் மார்பில் பட்டு… ரத்தம் பீறிட இறந்து போனான்…
தன் முட்டாள் தனத்தால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த குரங்கு அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தது…
இந்த கதையின் மூலம் நாம் அறிய வேண்டியது… முட்டாள்களை நாம் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது… அவர்களோடு நட்பு பாராட்டினால்… அது நமக்கே துன்பம் தரும் என்பது தான்… புரிகிறதா…