Moral Stories - Tamil
Panchatantra Stories – Foolish Tortoise – பஞ்சதந்திரக் கதைகள் – மூட ஆமை
எதையும் செய்வதற்கு முன்… பலமுறை சிந்திக்க வேண்டும்

மூட ஆமை
காட்சி-01 வாத்து 1, 2 & ஆமை, voice over…
VOICE OVER: ஒரு ஊர் நடுவே உள்ள குளத்தில் இரண்டு வாத்துக்களும், ஒரு ஆமையும்
நட்பாய் பழகின… எப்போதும் கூடிப் பேசுவதும்… அடிக்கடி சந்தித்துக் கொள்வதுமாக.. ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன…
ஒரு நாள் அந்த குளத்தின் நீர் வற்றத் தொடங்கியது… நீரின் அளவு குறையக் குறைய… வாத்தும் ஆமையும் வருத்தம் கொண்டன… இனி என்ன சொல்வது… எங்கே செல்வது… என்று யோசித்தது… அதில் ஒரு வாத்துக்கு… ஒரு யோசனைத் தோன்றியது…
வாத்து 1 நாம் இனி இங்கே இருந்து பலனில்லை… பக்கத்து ஊரில் ஒரு நல்ல குளம்
உள்ளது.. எனவே அங்கு போவோம்…
வாத்து 2 நீ சொல்வது சரிதான்… ஆனால் இத்தனைக்காலம் இங்கே இருந்து விட்டு..
எப்படி நாம் புறப்படுவது…
வாத்து 1 அப்படி எல்லாம் சிந்தனை செய்யக் கூடாது… வாழும் வழிகள் பல உண்டு…
ஒரு இடத்திலேயே பிறந்து… அங்கேயே மடிய வேண்டுமா?
VOICE OVER: வாத்துக்களின் உரையாடலைக் கேட்ட ஆமை… அந்த
வாத்துக்களைப்பார்த்து…
ஆமை: நண்பர்களே… என்னைப் பிரிந்து போவது என்பது தான் உங்கள்
முடிவா…என்னையும் உங்களுடன் கூட்டிச் செல்லக் கூடாதா…
வாத்து 1 தோழா உன்னுடைய வருத்தம் புரிகிறது… என்ன செய்ய முடியும்… நாங்கள்
பறவைகள்… நொடியில் பறந்து விடுவோம்… உன்னால் அது எப்படி முடியும்…
ஆமை என்னால் பறக்க முடியாது தான்…. ஆனால் நீங்கள் மனம் வைத்தால்..
என்னை உங்களுடன் கூட்டிப் போக முடியும்…
வாத்து 1 எப்படி… முதுகில் சுமந்தா…
ஆமை: இல்லை… ஒரு கம்பு எடுத்து வருகிறேன்… இருவரும் ஒரு முனையைப்
பிடித்துக் கொள்ளுங்கள்… நான் என் வாயால் கம்பின் நடுபாகத்தைக் கவ்விக் கொள்கிறேன்.. நீங்கள் பறக்கும் போது நானும் உங்களுடன் வருவேனே…
வாத்து 1 நல்ல யோசனைதான்… இதில் உனக்கு சிக்கல் இருக்கிறதே…
ஆமை: எனக்கென்ன சிக்கல்…
வாத்து 1 பறக்கும் போது தவறிப் போய் வாய் திறந்தால்… நீ பூமியில் விழ நேரிடும்…
அந்த இடம் பாறையாக இருந்து விட்டால்… நீ ஓடு சிதறி உயிர் துறப்பாய்
ஆமை: அப்படி எதுவும் ஆகாது… எனக்கு நானே துன்பம் தேடிக் கொள்வேனா…
யோசிக்க வேண்டாம்… மூவரும் புறப்படுவோம்…
VOICE OVER: ஆமை சொன்ன படி ஒரு கம்பின் இருமுனையை வாத்து இரண்டும் பிடித்துக்
கொள்ள.. ஆமை நடுவில் தொங்கியபடி பறந்து கொண்டிருந்தது… இந்த
அதிசய காட்சியைப் பார்த்த… ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்…
VOICE OVER ஆமைக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது… அதை
வெளியில் சொல்ல உடனே வாயைத் திறந்தது…
பார்த்திங்களா… மக்கள் என் வித்தையைப் பார்த்து… எப்படி ஆரவாரம் செய்கிறார்கள்… எல்லாம் என் திறமை…
VOICE OVER: இப்படி சொன்னது தான் தாமதம்… பிடி தளர்ந்து பூமியில் ஒரு பாறையில்
மோதி… ஆமை இறந்தது…
தன் வாயால் சிலர் தனக்கு கேடு விளைவித்துக் கொள்வார்கள்… அதற்கு இந்த ஆமையே உதாரணம்.. எனவே எதையும் செய்வதற்கு முன்… பலமுறை சிந்திக்க வேண்டும்.. இல்லாவிட்டால் இந்த அறிவற்ற ஆமையின் நிலை தான் நேரும்…