Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Fox And The Cave – பஞ்சதந்திரக் கதைகள் – நரியும், குகையும்

நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்

நரியும், குகையும்

 காட்சி-01 சிங்கம், நரி, voice over…

VOICE OVER: காட்டில் நாள் முழுதும் அலைந்து திரிந்த சிங்கத்துக்கு, ஒருநாள்  எந்த 

உணவும் கிடைக்க வில்லை… பசி எல்லை மீறியது… என்ன செய்வது… யாரை அடித்து சாப்பிடுவது… எதிரில் எந்த மிருகமுமே வரவில்லையே… 

சிங்கம் சே.. எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டன… காட்டை 

காலிசெய்து கொண்டு வேறு எங்காவது போய் விட்டதா…

VOICE OVER: சிங்கம் மனசுக்குள் எல்லோரையும் திட்டித் தீர்த்தது….  இப்படி மனம் 

சோர்ந்து, உடல் தளர்ந்து… வரும் வழியில் குகை ஒன்றைக் கண்டது…  உற்சாகம் கூட புத்துணர்ச்சி பெற்றது போல் உள்ளே சென்றது…. 

Advertisement

சிங்கம் இங்கே நிச்சயம் ஏதாவது ஒரு மிருகம் இருக்க வேண்டும்..  வெளியே 

சென்ற மிருகம், நான் இருப்பது அறியாமல்…  உள்ளே வரும்… மேலே பாய்ந்து அடித்து தின்று… என் அகோரப் பசியை, இன்று தணித்துக் கொள்ள வேண்டியது தான்… 

VOICE OVER: சிங்கம் மனக்கணக்குப் போட்டது… ஆனால் அது நரியுடைய குகை… 

அது அத்தனை எளிதாக ஏமாறாது.. வேட்டைக்குப் போன நரி குகைக்கு திரும்பியது… 

அதன் கூரான பார்வை… வழியில் பதிந்த… சிங்கத்தின் பாதச் சுவடுகளைப் பார்த்து விட்டது

வெளியில் இருந்து குகைக்கு உள்ளே போன அடையாளம் தெரிந்ததே தவிர… திரும்பவும் வெளியே வந்த தடயம் தெரியவில்லை…  எனவே சிங்கம் உள்ளே தான் இருக்கிறது என்பதை யூகித்துக் கொண்ட நரி, அதை எப்படி உறுதி செய்வது… யோசித்தது …   அதற்காக வழி தெரியாது… 

நரி: ஓ… என் அன்பான குகையே… என் வணக்கங்கள்…

VOICE OVER: என்று நரி அந்த குகையைப் பார்த்து பேசியது…

Advertisement

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது… பிறகு  மீண்டும் குகையிடம் நரியே பேசியது…  

நரி: என்ன குகையே… நான் உனக்கு வணக்கம் சொன்னால் பதிலுக்கு 

நீயும் எனக்கு வணக்கம் சொல்வாயே… மறந்து விட்டாயா… 

VOICE OVER: உள்ளே இருந்த சிங்கத்துக்கு இது புதுக் குழப்பமாக இருந்தது…

சரி… நடப்பது நடக்கட்டும்… 

என்ற சிங்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு… 

சிங்கம் வணக்கம்… வணக்கம்… உள்ளே வரலாமே… 

VOICE OVER: சிங்கம் இப்படி சொன்னதும்… உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு 

Advertisement

நரி ஓட்டமாய் ஓடியது… எந்த மிருகமும் வராமல், பசியால் உடல் மெலிந்து… சிங்கம் உயிர் விட்டது…

VOICE OVER நமக்கு எதிர்வர இருக்கும் ஆபத்திலிருந்து

நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்… அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்… எந்த சூழலிலும் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிக்க புத்திக் கூர்மையை பயன்படுத்த வேண்டும்… 

Continue Reading
Advertisement