Moral Stories - Tamil
Panchatantra Stories – Frog and the Snake – பஞ்சதந்திரக் கதைகள் – தவளையும் பாம்பும்
யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது நம்பிக்கைக்கு உரியவரா பிறவி
குணம் என்ன என்பதை ஆராய்ந்து பழகிட வேண்டும்

தவளையும் பாம்பும்
காட்சி-01
தவளை, பாம்பு, voice over..
VOICE OVER: துள்ளித் துள்ளி பாயும் தவளைகள் நிறைந்த ஒரு குளத்துக் கரை மேல ஒரு வயதான கருநாகம் இருந்தது… அது சோகமாகவும், சோர்வாகவும் இருக்கறதை பார்த்து மனசு கேக்காத தவளை ஒண்ணு… அதன் கிட்ட நெருங்கி…
தவளை இப்படி சோகமா உக்காந்துட்டீங்க… இந்நேரம் லபக் லபக்குன்னு 8,10 தவளைங்களை பிடிச்சி உள்ள தள்ளி இருப்பீங்களே… இன்னிக்கு என்ன அமைதியா இருக்கீங்க… உடம்பு சரியில்லையா…
பாம்பு: அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் ஒரு சாபத்துக்கு ஆளாயிட்டேன்… அதான் இப்படி இருக்கேன்…
தவளை: என்னது சாபமா… எப்படி ஆச்சு… விவரமா சொன்னாத் தானே புரியும்…
பாம்பு: சொல்றேன்… ரெண்டு நாளைக்கு முன்ன… ஒரு தவளையை துரத்திகிட்டு போனேன்… அது தத்தித் தத்திப் போய்… பூசாரிங்க மத்தியில போய் விழுந்தது… திரும்பி வரும்னு ரொம்ப நேரம் காத்திருந்தேன்… வரவே இல்ல… அந்த கோவத்துல அங்க இருந்த பூசாரியோட குழந்தையைக் கடிச்சிட்டேன்… அதுவும் இறந்து போச்சு… உடனே அந்த பூசாரி சாபம் கொடுத்துட்டாரு…
தவளை: என்னன்னு…
பாம்பு: விடமாட்டியே… தவளைங்களை பிடிச்சி தின்னுற நீ… இனிமே அதே தவளைகளை உன்னுடைய முதுகுல சுமந்துகிட்டு போகணும்… அந்த தவளைங்க குடுக்கற சாப்பாட்டை தான் நீ சாப்பிடணும்… அப்படின்னு சொல்லிட்டாரு……அப்படியா விஷயம்… இப்பவே எங்க அரசர்கிட்ட போய் சொல்றேன்… கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாரு…
தவளை: அப்படியா விஷயம்… இப்பவே எங்க அரசர்கிட்ட போய் சொல்றேன்… கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாரு…
பாம்பு: சரி சரி… சீக்கிரம் போய் சொல்லி ரெண்டு பேரை கூட்டிட்டு வா.. இன்னைக்கு என் முதுகுல இது வரைக்கும் யாரையும் சுமக்கவே இல்ல…
VOICE OVER: தவளையும் ஆவலுடன் குளத்துக்குள் தாவியது…
பாம்பு: அப்பாடா… இந்த தவளையை ஏமாத்தி நம்பவைக்கறதுக்குள்ள… போதும் போதும்னு ஆயிடுது… என்னப் பாத்தாலே பயந்து ஓடற பையன்… என் பக்கத்துல உக்கார்ந்து கேள்வி கேக்கறான்… எல்லாம் என் நேரம்
VOICE OVER: கருநாகம் மனசுக்குள் சலித்துக் கொண்டது… குளத்துக்குள் போன தவளை… அரசனிடமும், மற்ற எல்லாரிடமும், கருநாகத்தின் சாபக்கதையை சொல்லி துள்ளியது…
VOICE OVER: உடனே நான் நீ என்று போட்டிப் போட்டு… மேலே வந்து… சிறிது நேரம் கருநாகத்தின் முதுகில் ஏறி.. விளையாடியது… இது தான் சமயம் என்று… தன் உடலை அசைத்து, வளைத்து, நெளிந்து… தவளைகளுக்கு ஆசைகாட்டியது பாம்பு…
VOICE OVER: மறு நாளும் இந்த விளையாட்டு தொடர்ந்தது… சிறிது நேரத்தில் களைப்பாகவும்.. மூச்சிரைப்பது போலவும் கருநாகம் பாசாங்கு செய்ய… தவளை அரசன்… சின்னச் சின்ன குட்டித் தவளைகளை எல்லாம்… சாப்பிட அனுமதி தந்தது…
VOICE OVER: இப்படியே நாட்கள் செல்ல… கருநாகம் உடல் தேறி… வலிமை பெற்றது… கொஞ்சம் கொஞ்சமாக தவளைகளை சுமந்து சென்று… மறைவிடத்தில் வைத்து உணவாக்கிக் கொண்டது…
VOICE OVER: விளையாட போன தவளைகள் திரும்பாதது கண்டு… தவளை அரசன் கேள்வி கேட்க… அதையும் பாய்ந்துவிழுங்கி ஏப்பம் விட்டது…
VOICE OVER: யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது… நம்பிக்கைக்கு உரியவரா… பிறவி குணம் என்ன என்பதை ஆராய்ந்து… பழகிட வேண்டும்…