Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Listen To Elder’s Advice – பஞ்சதந்திரக் கதைகள் – மூத்தோர் சொல் கேள்

வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து
கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின

Panchatantra Stories – Listen To Elder’s Advice – பஞ்சதந்திரக் கதைகள் – மூத்தோர் சொல் கேள் PR039 13

மூத்தோர் சொல் கேள்

காட்சி-01 விவசாயி, voice over

VOICE OVER: நன்கு உயர்ந்த மரம் ஒன்றின் மேல்… ஒரு வயது முதிர்ந்த பறவையும்… இரு சிறிய பறவைகளும் கூடு கட்டித் தங்கியிருந்தன…

VOICE OVER: அந்த மரத்தைச் சுற்றி, மெல்லிய கொடி ஒன்று படர ஆரம்பித்து இருந்தது…இதை கண்ட வயதான பறவை… தன் சிறிய பறவைகளைப் பார்த்து எச்சரிக்கை செய்தது…

பெரிய பறவை: கொடி ஒன்று லேசாக படர ஆரம்பிக்கிறது… நாம் இதை அப்படியே விட்டு விட்டால்… பிறகு இதன்மூலம் பல இடையூறுகள் வரும்… உடனே வெட்டி எறிவோம்… வாருங்கள்..

சிறிய பறவை 1: முடியாது…இந்த கொடி இந்த மரத்துக்கு எத்தனை அழகாக இருக்கிறது தெரியுமா… அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது… அழகை ரசிக்க அறிவு வேண்டும்…

பெரிய பறவை: அழகான ஒரு விஷயம் ஆபத்தில் போய் முடியும் என்பது உனக்குத் தெரியாது. ஏன் தெரியுமா… உனக்கு அனுபவ அறிவு இல்லை… நான் சொல்வதைக் கேள்…

சிறிய பறவை 2: வயதாகிவிட்டால் இது சரியில்லை… அது சரியில்லை… என்று குற்றம் சொல்லக் கூடாது… பேசாமல் மூலையில் சென்று அமர்ந்து… சிறுவர்களின் விருப்பம் போல் நடந்து கொள்ள அனுமதியுங்கள்…

Advertisement

VOICE OVER: இப்படி ஆளாளுக்கு வாதம் செய்து அந்த கொடியை எடுக்க விடாமல் செய்து விட்டார்கள்… வயதான பறவைக்கு கொஞ்சம் மனவருத்தம்.. இருந்தாலும்… அனுபவத்தால்…இவர்கள் தெளிவடைவார்கள்… என்று பொறுமையாக இருந்து விட்டது…

சில வருடங்கள் கழித்து… அந்த கொடி உறுதியாகவும், வலிமையாகவும் மாறி அந்த மரத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டது… அந்த வழியாக வந்த வேடனொருவன்… படிக்கட்டு போன்ற அந்த கெட்டியான கொடியின் மீது கால்வைத்து.. மேலே ஏறி கண்ணி வலை வைத்து விட்டு இறங்கி, மறைந்திருந்து கண்காணித்தான்…

பிறகு சிறிது நேரம் கழித்து வர நினைத்து… அங்கிருந்து வெளியேறினான்… ஆபத்தை உணராதஎல்லா பறவைகளும்… மரத்தின் மீது கூட்டில் வைக்கப் பட்ட கண்ணிவலையில் சிக்கிக் கொண்டன…

பெரிய பறவை: பார்த்தாயா… நான் அப்போதே சொன்னேன்… யாராவது கேட்டீர்களா… இந்த கொடி பெரிதாக வளர்ந்தால் நமக்கு துன்பம் வரும் என்று எச்சரிக்கை செய்தேன்… என் வார்த்தையை அலட்சியம் செய்தீர்களே… இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்…

சிறிய பறவை 1: என்னை மன்னித்து விடுங்கள்… நான் தான் முதலில் மறுத்தேன்… பிறகு எல்லோரும் எதிர்ப்பு சொன்னார்கள்… தயவு செய்து எப்படியாவது எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வழி சொல்லுங்கள்… உங்கள் யோசனைப்படியே செய்கிறோம்… பெரிய பறவை இப்போதும் ஒன்றும் காலம் கடந்துவிட வில்லை… வேடன் வரும் போது, எல்லோரும் இறந்து விட்டது போல அசைவற்று இருப்போம்… ஒவ்வொன்றாக எடுத்து கீழே போட்டது…

வேடன் மரமிறங்கி வரும் முன் நாம் ஒன்றாக பறப்போம்..

சிறிய பறவை 2: நல்ல யோசனை… பெரியவர்களின் அறிவுரையை… அலட்சியத்துடன் ஒதுக்கித் தள்ளினால்… கிடைக்கும் பலனை அறிந்து கொண்டோம்… இனி என்றும் உங்கள் சொல் படியே நடப்போம்…

VOICE OVER: இவ்வாறு பறவைகள் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில்…வேடன் வந்தான்… எல்லா பறவைகளும் மூத்த பறவை சொன்னபடி… இறந்து விட்டது போல கிடந்தன…

Advertisement

VOICE OVER: ஆஹா இன்று நமக்கு அதிர்ஷ்டம் தான்… இத்தனைப் பறவைகளும் வலையில் சிக்கி இறந்து விட்டன… இதையெல்லாம் விற்று அதிக லாபம் சம்பாதிப்பேன்… என்று எண்ணி வலையிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்துக்கீழே போட்டான்…

கடைசிப் பறவை கீழே வந்து விழும் வரை… பொறுமையாக இருந்த மற்றப் பறவைகள்.. மரத்திலிருந்து வேடன் இறங்க ஆரம்பித்தது தான் என்று கூட்டமாக பறந்து வேறு இடம் சென்றன.. எல்லா பறவைகளையும் விற்று பணமாக்கலாம் என்று நினைத்த வேடன்… பறவைக்கூட்டம் தன்னை ஏமாற்றியது எண்ணி வருந்தினான்..

VOICE OVER: வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின…

Continue Reading
Advertisement