Moral Stories - Tamil
Panchatantra Stories – Snake And The Mongoose – பஞ்சதந்திரக் கதைகள் – பாம்பும், கீரிப்பிள்ளையும்
ஆத்திரக்காரனுக்கு புத்திக் குறைவு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது

பாம்பும், கீரிப்பிள்ளையும்
காட்சி-01
பிராமணன், மனைவி, voice over..
VOICE OVER: ஒரு ஊரில் ஒரு பிராமணனும், அவன் மனைவியும் இருந்தனர்… அந்த பிராமணப் பெண் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்… அதே சமயம் ஒரு பெண் கீரிப்பிள்ளை, ஒரு குட்டியை போட்டு விட்டு இறந்து விட்டது… அதைக் கண்ட பிராமணன்… அந்த குட்டியின் மீது இறக்கப் பட்டு… அதை தன் வீட்டுக்கு எடுத்து வந்தான்…
பிராமணன் மனைவி: இந்தக் கீரிப்பிள்ளையையும், நம் குழந்தையுடன் சேர்த்து நான் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருவேன்…என்று அவன் மனைவி கூறினாள்
VOICE OVER: அவள் கூறிய படியே… கீரிப்பிள்ளையின் மீதும், குழந்தையின் மீதும், மிகுந்த பாசம் வைத்திருந்தாள்… என்ன தான் பாசம் வைத்திருந்த போதிலும்… கீரிப்பிள்ளையினால் தன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வந்து விடக்கூடாதே… என்று பயந்து, அவள் ஒரு போதும், கீரிப் பிள்ளையிடம் தன் குழந்தையை தனியாக விட்டுச் செல்வதில்லை…
பிராமணன் மனைவி: ஒருநாள் அவள் தன் கணவனிடம்.. நான் ஆற்றுக்கு தண்ணீர் எடுக்கப் போகிறேன்…குழந்தை தனியாக இருக்கிறது… அதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…
என்று கூறிவிட்டு சென்றாள்… சிறிது நேரம் சென்றதும்… VOICE OVER: பிராமணனன்பிச்சைக்காக வீட்டை விட்டு வெளியேறினான்… அதனால் குழந்தை மட்டும் கீரிப்பிள்ளையுடன் தனியே வீட்டில்இருந்தது…
அச்சமயம் அருகிலுள்ள ஒரு பொந்திலிருந்து… ஒரு கருநாகம் வீட்டினுள் வந்தது… அது குழந்தை தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலின் அருகே போனது…
VOICE OVER: கரு நாகத்தைக் கண்ட கீரிப் பிள்ளைக்கு… குழந்தையபாம்பிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த கீரிப்பிள்ளை… ஆத்திரத்துடன் கருநாகத்தின் மீது பாய்ந்து… அதை தன் பற்களால் துண்டு துண்டாக… வெட்டிப் போட்டது… பிறகு அது ரத்தம் வடியும் வாயுடன்… தன் வீரச் செயலை வெளிக்காட்டுவதற்காக… பிராமணனின் மனைவியைத் தேடிச் சென்றது…
வாயிலிருந்த ரத்தக்கறையுடன் வந்த கீரிப்பிள்ளையைக் கண்டவுடன்… அவள் பதட்டமடைந்து… VOICE OVER: அட இழிந்த ஜென்மமே… என் குழந்தையைக் கொன்று விட்டாயே… என்று அலறினாள்… தான் கொண்டு வந்த தண்ணீர்க்குடத்தை கீரிப் பிள்ளையின் மீது போட்டு… அதைக் கொன்றாள்… பிறகு தன் வீட்டினுள் ஓடிப் போய்… பார்த்தாள்.
பிராமணன் மனைவி: அங்கே தன் குழந்தை, தொட்டிலில் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பது கண்டு… அதிர்ச்சி அடைந்தாள்… தொட்டிலை விட்டு தன் பார்வையை திருப்பிய அவள்…தொட்டிலின் அருகே:ஒரு கரு நாகம் இறந்து கிடப்பதைக் கண்டாள்… இப்போது அவளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை புரிந்தது…. கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் காப்பாற்றவே பாம்பைக் கொன்று உள்ளது… அதன் வாயிலிருந்த ரத்தக் கரை பாம்பினுடையது ஆகும்… உண்மை என்னவென்று அறியாமல் அவள் கீரிப்பிள்ளையைக் கொன்று விட்டாள்… இப்போது குற்ற உணர்வுடன் தன் அவசர செயலுக்காக… அவள் மிகவும் வருந்தினாள்…
VOICE OVER: இந்த கதையின் மூலம் நாம்அறிவதுஎன்னவென்றால்…ஆத்திரக்காரனுக்கு புத்திக் குறைவு… அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது…