Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – The Guest – பஞ்சதந்திரக் கதைகள் – விருந்தினர்

யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களின் குணஇயல்பை அறிந்து அந்த உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உதவி செய்தவருக்கே இப்படித்தான் தீங்கு நேரிடும்

Panchatantra Stories – The Guest – பஞ்சதந்திரக் கதைகள் – விருந்தினர் PR039 19

விருந்தினர்

காட்சி-01

அரசன்,பேன், மூட்டைப் பூச்சி, voice over…

VOICE OVER: அரசன் ஒருவன் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான்… காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரையில், மக்கள் குறையை கேட்பதிலும், அதை போக்குவதிலுமே காலத்தை செலவழித்தான்…

VOICE OVER: அரசன் என்றால் அரண்மனை இல்லாமலா… அரசர் உறங்குவதற்கு கலை வேலைப்பாடுகள் நிறைந்த கண்கவர் கட்டில்… பட்டு மெத்தை, கம்பள விரிப்பு… என்று எல்லாமே ஆடம்பரமாக இருந்தது…

இரவு உணவை முடித்து விட்டு தனது தனியறையில் அரசர் உறங்கப் போவது வழக்கம்… வாயிலில் காவலர்கள் இருவர் இருப்பார்கள்…

யாருமே எளிதில் உள்ளே நுழையமுடியாத அரசரின் படுக்கையறை மெத்தையில் எப்படியோ ஒரு பேன் நுழைந்து விட்டது… அரசர் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது.. ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது…

VOICE OVER: பலநாள் இப்படி வாழ்ந்த பேனுக்கெதிரே… திடீரென ஒரு நாள் மூட்டைப்பூச்சி… ஒன்று வந்து நின்றது… அதைக் கண்டு…

Advertisement

ஏய்… யார் நீ… இங்கெப்படி வந்தாய்?

பேன்: நான் தான் மூட்டைப் பூச்சி… அரசகுடும்பத்தோட சலவைத் துணிகளுக்கு நடுவுல புகுந்து… நானே… வழிதெரியாம எப்படியோ இங்க வந்துட்டேன்… இங்க இருக்கற மெத்தையும், கம்பள விரிப்பும்… கட்டிலும், நானும் என் குடும்பமும் தங்க… ரொம்ப நல்ல இடமா இருக்குது…

மூட்டைப் பூச்சி: போதும் நிறுத்து… அதிகம் பேசாதே… நீ நினைப்பது போல… இது சாதாரண இடமில்லை… அரண்மனை… அரசரின் படுக்கையறை… இங்கே உன்னை உள்ளே விட்டதே தவறு… போய் விடு உடனே…

கோவிச்சிக்காதே பேன் அண்ணா… நீங்க அனுமதி கொடுத்தா… நான் ஒரு மூலையில, இடுக்குல இருந்து உயிர் பிழைச்சிக்கறேன்… எத்தனையோ விதமான ரத்தத்தை குடிச்சிருக்கேன்… நான் இதுவரை குடிச்சதே இல்லை… அதோட ருசி என்னன்னு எனக்குத் தெரியாது… அதனால இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இங்க தங்கிட்டு… நான் போயிடறேன்… வேணாம்னு சொல்லிடாதீங்க அண்ணா…

மூட்டைப் பூச்சி: பிழைத்துப் போ… உன்னைப் பார்த்தால் பாவமாக தெரிகிறது… ஆனால் ஒரு நிபந்தனை… அரசர் உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் போது தான் நீ உன் பசியை போக்கிக் கொள்ளவேண்டும்… அதற்கு முன்னதாக ஆசைப்பட்டால்… நம் இருவருக்குமே ஆபத்து… என்ன புரிகிறதா…

நான் அப்படி செய்யமாட்டேன்… என்னை நம்புங்க… நீங்க பசியாறுன அப்புறமே நான் என் வேலையை தொடங்குறேன்…

வார்த்தை மாறமாட்டாயே….

பேன்: நிச்சயமா மாறமாட்டேன்… நான் தங்கறதுக்கு அனுமதி கொடுத்த உங்களுக்கு… இடையூறு செய்வேனா…

Advertisement

இரண்டும் இப்படி பேசிக் கொண்டு அரசரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தது…

மூட்டைப் பூச்சி: அரசரும் வந்தார்… கட்டிலில் அமர்ந்தார்… படுக்கப் போகும் முன் ஏதோ சிந்தனையில் இருந்தார்… பேன் பொறுமையாக இருந்தார்… ஆனால் மூட்டைப் பூச்சிக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை… அரசரின் ரத்தசுவையை அறியப் போகிற ஆனந்தத்தில் அவசரப்பட்டு ஓடிப் போய் அரசரைக் கடித்தது…

மூட்டைப் பூச்சி: யாரங்கே… இங்கு ஏதோ ஒரு பூச்சி என்னைக் கடித்து விட்டது… பேனா மூட்டைப் பூச்சியா என்று பாருங்கள்…

VOICE OVER: காவலர் இருவர் கம்புடன் வருவதைக் கண்டு பேன் அஞ்சி நடுங்கியது… மூட்டைப் பூச்சியோ… கட்டில் இடுக்கில் சென்று மறைந்து விட்டது… பேனை தடியால் அடித்துக் கொன்றனர்…

VOICE OVER: இந்த கதையால் நாம் அறியும் பாடம் என்னவென்றால்… யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களின் குணஇயல்பை அறிந்து அந்த உதவியை செய்யவேண்டும்… இல்லையென்றால் உதவி செய்தவருக்கே இப்படித்தான்… தீங்கு நேரிடும்…

Continue Reading
Advertisement