Moral Stories - Tamil
Panchatantra Stories – The Snake And The Crow – பஞ்சதந்திரக் கதைகள் – காக்கையும், நாகமும்
சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்

காக்கையும், நாகமும்
காட்சி-01 ஆண்காக்கை, பெண்காக்கை, நரி, voice over…ஒரு
மரக்கிளையில் இரண்டு காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன… ஆனால் அவை இரண்டும் மகிழ்ச்சியாக இல்லை… கவலை தோய்ந்த முகத்துடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தது… அதன் கவலைக்கு காரணம் குஞ்சு பொறிக்க முடியவில்லையே என்பது தான்…
அருகில் ஒரு புற்றிலிருந்த கருநாகப்பாம்பு, காக்கைகள் இரைதேடிவெளியே புறப்படும் சமயம் பார்த்து… யாருமில்லா கூட்டுக்குள் வந்து… இருக்கும் முட்டைகளை உடைத்து குடித்துவிட்டு போய் விடும்…
இப்படி ஒருமுறையல்ல… இருமுறையல்ல… அடிக்கடி நிகழ்வதால், என்ன செய்வது என்று புரியாமல் தவித்த காக்கைகளுக்கு… நரியின் நினைவு வந்தது…
காக்கைகள் இரண்டு தன்னை தேடி வந்திருப்பதை அறிந்த நரி.. தன் குகையை விட்டு வெளியே வந்தது…
வணக்கம்….
காக்கைகள் :இருக்கட்டும்… இருக்கட்டும்… என்ன குழந்தைகளா…. ஏதாவது விஷயம் இல்லாமல் வரமாட்டீர்களே…
நரி :காக்கைகள் இரண்டும் தங்கள் மனக்குறையைச் சொல்லி வருந்தின…
VOICE OVER:வேறு எங்காவது மரம் பார்த்து போய் விடலாமா என்று பார்க்கிறோம்… உங்களிடமும் ஒரு யோசனை கேட்கலாம் என்று தான் வந்தோம்…
காக்கைகள்:எப்போதும் துன்பத்தைக் கண்டு பயந்தோடக் கூடாது… துணிந்து எதிர் கொண்டால் தான் நல்ல முடிவு ஏற்படும்.. நான் சொல்வது போல செய்யுங்கள்…. உங்கள் எதிரி இல்லாமல் போவான்…
நரி:நரி சொன்னபடியே செய்வதாக காக்கைகள் இரண்டும் தலை ஆட்டி உறுதி செய்தன…
VOICE OVER ஆண் காக்கை, இளவரசி, voice over..
காட்சி-02 மறுநாள் இரை தேடிப் பறந்த ஆண்காக்கை, பக்கத்து நாட்டு இளவரசி, தான் குளிக்கப் போகும் முன், தன்னுடைய முத்துமாலையை கழட்டி கரை மீது வைப்பதைப் பார்த்தது… கண் இமைக்கும் நேரத்தில், காக்கை தாழ்வாக பறந்து… அந்த முத்து மாலையை தன் அழகால் கவ்விக் கொண்டு… பறந்தது…
இதைக் கண்ட இளவரசி… கூச்சலிட்டாள்…
VOICE OVER ஆ என் முத்து மாலை… பிடியுங்கள் அந்த காக்கையை.. துரத்துங்கள்… விடாதீர்கள்.. முத்து மாலை இல்லாமல் எந்த காவலாளியும் அரண்மனைக்குள் நுழையக் கூடாது…
இளவரசி:இளவரசியின் கட்டளைக்கு அஞ்சிய வீரர்கள்… ஆளுக்கு ஒரு திசையில் காக்கையை விரட்டினார்கள்…
VOICE OVER:பறந்து கொண்டே வந்த காக்கை சரியாக பாம்பு புற்றில் அந்த முத்துமாலையை போட்டது…
இதைக் கண்ட வீரர்கள் ஆவேசமாக ஓடிவந்து புற்றை இடிக்கத் தொடங்கினார்கள்… உள்ளே இருந்த கருநாகம், சீறிக் கொண்டு வெளியே வந்தது… இது தான் சமயம் என்று அங்கே இருந்த ஒரு வீரன்… வாளை ஓங்கி பாம்பை வெட்டிக் கொன்றான்…
VOICE OVER:பிறகு புற்றிலிருந்து முத்து மாலையை எடுத்துக் கொண்டு… படைவீரர்கள் புறப்பட்டார்கள்…
மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த காக்கைகள் இரண்டும்… மன நிம்மதி அடைந்தது… அதன் பின் காக்கைகள் இரண்டும்… முட்டையிட்டு, அழகாய் குஞ்சுபொறித்து, நரியைப் பார்த்து நன்றி சொல்லி, நல்வாழ்த்தையும் பெற்று, ஆனந்தமாய் வாழ்ந்தன…
.VOICE OVER:சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்… எனவே நாம் கவனமாக இருக்கப் பழக வேண்டும்… நாமும் சூழ்ச்சி பண்ண வேண்டாம்… பிறருடைய சூழ்ச்சிக்கும் பலியாக வேண்டாம்… சரியா… குழந்தைகளே…