Moral Stories - Tamil
Panchatantra Stories – Think Before You Advice – பஞ்சதந்திரக் கதைகள் – பிறருக்கு அறிவுரை கூறும் முன் சிந்தி
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது

பிறருக்கு அறிவுரை கூறும் முன் சிந்தி
காட்சி-01 ஆண்குருவி, பெண்குருவி, குரங்கு voice over..
VOICE OVER: நாம ஒருத்தருக்கு புத்திமதி சொல்றதுக்கு முன்னாடி… அவங்க அந்த
புத்திமதியை கேட்பாங்களா… கேட்டு நடப்பாங்களா… அவங்களுக்கு சொல்லலாமா… அவங்களுக்கு பலன் தருமா.. அப்படின்னு சிந்திக்கணும்.. அப்படி யோசிக்காம அறிவுரை சொன்னா… அது வீணாகிப் போறதோட.. நமக்கும் தீமை விளைவிக்கும்… எப்படின்னு கேக்கறீங்களா… இந்த கதையை கேளுங்க… நீங்களே புரிஞ்சுக்குவீங்க…
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது…
ஒரு நாள் பலத்த மழை… காற்று வேற பலமா வீசுது…. கூட்டுக்குள்ள ஆண்குருவியும், பெண்குருவியும் குளிரில் நடுங்கியபடி பாதுகாப்பா இருந்தது…
அந்த நேரம் பார்த்து ஒரு எங்கிருந்தோ ஒரு குரங்கு மழையில நனைஞ்சபடி… ஓடி வந்து குருவிங்க இருக்கற மரத்துக்கு கீழ வந்து ஒதுங்கியது…
மழையில நனைஞ்சதால குரங்குக்கும் உடல் நடுக்கம் ஏற்பட்டது… இதை மரத்துக்கு மேல இருந்து பார்த்த குருவிங்க ரெண்டும்..
பெண்குருவி கீழ பாத்தியா… பாவம் அந்த குரங்கு… எப்படி நடுங்குது பாரு… அவருக்கு
ஏதாவது உதவி செய்ய முடியாதா…
ஆண்குருவி: உதவியா… அவருக்கா… நாமே சிறிய உருவம்… அத்தனை பெரிய குரங்குக்கு
நம்மாள என்ன உதவி செய்ய முடியும்…
பெண்குருவி உதவி நேரடியா தான் செய்யணுமா என்ன.. ஒரு வழிகாட்டுதலா..
யோசனையா… அறிவுரையா கூட இருக்கலாமே…
ஆண்குருவி: அறிவுரையா அதற்கா… அவரு கோபக்காரரு… உன்னோட யோசனையை
கேப்பாரா என்ன…
பெண்குருவி சொல்லி தான் பாப்போமே.. கேட்டா கேக்கறாரு.விட்டா விடறாரு…
ஆண்குருவி: புத்தி சொல்லப் போறேன்னு சிக்கல்ல மாட்டிக்காத… அப்புறம் உன்
இஷ்டம்…
பெண்குருவி: ஒண்ணும் ஆகாது… பயப்படாதீங்க…
அண்ணா… குரங்கண்ணா… மேல பாருங்க… இதோ இங்க இருக்கேன்…
குரங்கு ஓ… குருவியா… என்ன எதுக்கு கூப்பிட்ட… நானே மழையில நனைஞ்சி
நடுங்கிட்டு இருக்கேன்.. நீ வேற தொந்தரவு பண்றியே..
பெண்குருவி: தொந்தரவு பண்ண கூப்பிடல… நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க
மாட்டியே… கோபப் படக் கூடாது… என்ன சரியா….
குரங்கு அப்படி என்ன சொல்லப் போற… சீக்கிரம் சொல்லு… நான் என் இடத்துக்குப்
போகணும்..
பெண்குருவி: ஒண்ணுமில்ல… சின்ன மூக்கு மட்டும் இருக்கிற நானே… வெயிலுக்கும்
மழைக்கும் பாதுகாப்பா ஒரு கூடு கட்டி வாழும் போது… மனிதன் மாதிரி, ரெண்டு கை, ரெண்டு கால் இருக்கற நீ ஏன் ஒரு வீடு கட்டி… பாதுகாப்பா சந்தோஷமா இருக்கக் கூடாது… இப்படி மழையில நனையறீங்களே…
VOICE OVER குருவி சொன்ன வார்த்தையில உண்மை இருந்தாலும், குரங்குக்கு
சுருக்கென்று ஊசி குத்தியது போல் இருந்தது… என்ன செய்கிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல்.. சரசரவென்று மரத்தின் மீது ஏறி… கூட்டைப் பிரித்து போட்டது… குருவிகள் ரெண்டும் பரிதாபமாய் பறந்து ஓடின..
அறிவுரை சொல்பவர் பெரியவரா… சிறியவரா என்று தகுதி பார்க்காமல்… அந்த அறிவுரையின் பயன் என்ன என்று மட்டும் பார்த்தால்… எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம் இல்லையா…