Connect with us

Moral Stories - Tamil

Panchatantra Stories – Truth Will Never Die – பஞ்சதந்திரக் கதைகள் – உண்மை அழியாது

நாம் என்ன தான் பிறரை ஏமாற்ற நினைத்தாலும் நமது பிறவி குணம் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும்

Panchatantra Stories – Truth Will Never Die – பஞ்சதந்திரக் கதைகள் – உண்மை அழியாது PR039 11

உண்மை அழியாது… 

காட்சி-01 கழுதை, சலவைதொழிலாளி, voice over..

VOICE OVER:ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி இருந்தான்… அவனிடம் ஒரு உடல் மெலிந்த கழுதை ஒன்றும் இருந்தது… 

அவனே ஏழை… அவனால் அந்த கழுதைக்கு தேவையான போதுமான உணவு தரமுடியவில்லை… ஆனால் அழுக்குத் துணி மூட்டையோ அதிகமாகிக் கொண்டே இருந்தது… 

ஒரு முறை கழுதை அந்த எஜமானிடம் முறையிட்டது….

கழுதை:ஐயா, என்னால் இப்போது சுமைகளை சுமக்க முடியவில்லை… நீங்கள் தரும் உணவும் போதவில்லை… என் துன்பம் தீர ஏதாவது உதவிசெய்ய மாட்டீர்களா…

சலவைதொழிலாளி :நீ என் அடிமை… நான் உன் எஜமான்… என்னிடம் உன் துன்பத்தை சொல்லி நீதி கேட்க… உனக்கு உரிமை இல்லை… இட்ட வேலையை செய்… நடப்பது நடக்கும்… போ.. போ…

VOICE OVER:சலவை தொழிலாளி  கொஞ்சம் கடுமையாக பேசினாலும், மனதில் அதன் மீது கருணை வரத்தான் செய்தது… கழுதையின் துன்பம் கண்ணெதிரிலேயே தெரிகிறது.. என்ன செய்ய… இப்படி யோசித்த படி ஒருநாள்… வரும் வழியில் புலி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்தான்… அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது… அதன்படி புலியின் தோலை உரித்து கழுதையின் மீது போர்த்தினான்… கிட்டத்தட்ட கழுதையும் புலி மாதிரியே தெரிந்தது… 

Advertisement

கழுதையே… நீண்டநாளாய் நீ வைத்த கோரிக்கை நிறைவேறும் காலம் வந்துள்ளது… 

எஜமான் சொல்வது எனக்கொன்றும் புரியவில்லையே… 

சலவைதொழிலாளி:உனக்கு எது புரிந்தது… இது புரிய… அருகில் இருக்கும் கோதுமை வயலுக்குப் போ…நன்கு வயிறார உண்டுவிட்டு வா…

கழுதை:ஐயா.. உங்கள் யோசனை சரிதான்… எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்…

சலவைதொழிலாளி:ஆபத்து எல்லா இடத்திலும் உண்டு… அதற்கு பயந்தால் வாழும் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை…

கழுதை:ஒரு வழியாக கழுதையை சமாதானம் செய்து அனுப்பினான்…

சலவைதொழிலாளி:கழுதையும், அவன் சொன்ன படியே…  புலித்தோல் போர்த்தி கோதுமை வயலை காலி செய்தது… இப்படி பல நாட்கள் கழிந்தன.. கோதுமை பயிரிட்டவர்களோ புலியை துரத்த துணிவின்றி அஞ்சி நடுங்கினார்கள்…  

ஆனாலும் ஒரு சிலர் எப்படியும், அதைப் பிடித்து விடத்தீர்மானித்து… காத்திருந்தனர்…  அன்றும் அப்படித்தான்… வழக்கம் போல புலி வடிவில் கழுதை வந்தது… அந்த நேரம் பார்த்து… அந்த நேரம் பார்த்து எங்கோஒரு கழுதையின்  காதை துளைக்க… தான் போட்ட வேஷத்தை மறந்து… இந்த கழுதையும் கத்த ஆரம்பிப்பது… 

Advertisement

இது நாள் வரையில் புலி… புலி என்று பயந்தவர்களுக்கு… இது கழுதை தானா என்ற வியப்பு வர… கையில் தடியுடன் ஓடி வந்து… ஆளுக்கொன்று தந்து அதன் உயிரைப் போக்கினர்…

VOICE OVER:இரவு கோதுமை வயலில் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் கழுதை வராததால்… சலவைத் தொழிலாளி அதைத் தேடிப் போனான்… வயலோரத்தில் கழுதை அடிப் பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு புரிந்து கொண்டான்…  அது நம்முடைய கழுதை என்று சொன்னால் நமக்கும் இது தான் பரிசு என்று எண்ணிய அவன்… வந்த வழியே திரும்பினான்… 

VOICE OVER:நாம் என்ன தான் பிறரை ஏமாற்ற நினைத்தாலும்… நமது பிறவி குணம் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும்… 

Continue Reading
Advertisement