Moral Stories - Tamil
Paramartha Guru – Kuthirai Muttai – (Part -5) பரமார்த்த குரு – குதிரை முட்டை
போனாப் போகுது விடுங்கடா இதுக்காக எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. 10 பவுன் தானே… இன்னொரு இளிச்சவாயன் காணிக்கையா கொண்டுவந்து குடுத்துட்டு போறான்
குதிரை முட்டை
காட்சி – 9
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் வழிப்போக்கன்
வழிப்போக்கன்: டேய் முட்டாள்… என்ன பண்ற…
முட்டாள்: பாத்தா தெரியலை… மரம் வெட்டறேன்…
வழிப்போக்கன்: சரிப்பா… நுனி மரத்துல உட்கார்ந்துகிட்டு அடிமரத்தை வெட்டறியே…
முட்டாள்: எனக்கு எல்லாம் தெரியும்… உங்க வேலையை பார்த்துட்டு போங்க…
வழிப்போக்கன்: கிளை உடைஞ்சி கீழே விழப் போறடா….
முட்டாள் ஐயோ… ஐயோ… ஐயோ… ஐயோ… இடுப்புப் போச்சே…
வழிப்போக்கன்: என் வாய் முகூர்த்தம் விழுந்துட்டானே… ஐயையோ இனிமே இங்கே நிக்கக் கூடாது…
முட்டாள்: இவரு சொன்ன உடனே கிளை உடைஞ்சி விழுந்திடுச்சே…நிச்சயம் இவரு ஒரு முக்கால ஞானிதான்…
முட்டாள்: ஐயா….
வழிப்போக்கன்: இங்க நின்னா குண்டங்கிட்ட அடி கிடைக்கும்… ஓடிப் போயிடலாம்…
முட்டாள்: ஐயா நில்லுங்க…
வழிப்போக்கன்: ம்.ஹூம்…நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்….
முட்டாள்: ஐயா நில்லுங்க… வழிப்போக்கன்: ம்.ஹூம்…நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்…. முட்டாள்: ஐயா நில்லுங்க…
வழிப்போக்கன்: ம்.ஹூம்…நான் நிக்க மாட்டேன்…. நான் நிக்க மாட்டேன்….
முட்டாள்: ஐயா… முன் கூட்டியே கிளை ஒடியும்னு சொன்ன நீங்க ஒரு முக்கால ஞானி… எனக்கு நிறைய பணம் கிடைக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க…
வழிப்போக்கன்: ம்… இது… இவன் நிஜமாவே வடிகட்டுன முட்டாள் தான் போல இருக்கே… அப்பனே…. அந்தணன் எதையும் வாங்காம ஆசிர்வாதம் பண்ணக்கூடாது… என்ன வச்சிருக்க நீ…
முட்டாள்: ரெண்டு பணம் இருக்கு சாமி…இந்தாங்க…
வழிப்போக்கன்: இதே அறிவோட தீர்க்காயுசா இரு…. நிறைய பணம் கிடைக்கட்டும்… ஹ..ஹ..ஹ…
காட்சி – 10
மட்டி,மடையன், விவசாயி, மனைவி
விவசாயி: ஏய்… பொன்னம்மா… இந்த கழுதைங்களையெல்லாம் கவனமா பாத்துக்க… பூசணிக் கொடிய மேய்ஞ்சிடப் போகுது… பூசணிக்காயை சந்தைக்கு கொண்டு போக, நான் வண்டியை எடுத்துட்டு வந்திடறேன்…
மனைவி: சரிங்க…
மடையன்: டேய்… மட்டி… அங்க பார்றா… மட்ட குதிரைங்கள… நம்மக் கையிலயோ நிறையா காசு இல்ல…
அதனால இதுல ஒண்ணை புடிச்சிட்டுப் போயி… குருநாதருக்குக் கொடுத்துட்டா…
மட்டி: சரியான யோசனை… வா… வா… விலை கேட்கலாம்…
மடையன்: ஐயா… ஐயா… இந்த மட்டகுதிரை ஒண்ணு என்ன விலை….
விவசாயி: ஏங்… என்னடி… கழுதைங்களை போயி குதிரைன்னு சொல்றானுங்க…
மனைவி: அதை அவங்களே சொல்லும் போது உனக்கென்ன… ஒரு விலையை சொல்லி தாட்டி விடு…
விவசாயி: இந்த மட்ட குதிரை விலை… 50 பவுனு…
மடையன்: ஐயையோ… ரொம்ப விலையா இருக்குங்களே… எங்ககிட்ட 5 பவுனு தான் இருக்கு…
விவசாயி: 5 பவுனுக்கு கால் மட்டுதாங்க கிடைக்கும்…
மட்டி: ஆங்… காலை மட்டும் வாங்கிட்டுபோயி நாங்க என்ன குழம்பா வைக்கப் போறோம்… எங்க குருநாதருக்கு வாகனம் வேணும்… அதுக்காகத்தான கேக்கறோம்…
மடையன்: அட… இதென்னங்க.. குதிரை முட்டையா…
விவசாயி: ம்.. சரியான வாத்து மடையனா இருப்பாங்க போல இருக்குதே…. ஆமாமா…. உசந்த ஜாதி குதிரைங்க முட்டைங்க… நாலு நாள்ல நல்ல குதிரை வெளிய வரும்…
மட்டி: ஒரு முட்டை என்ன விலைங்க…
விவசாயி: அரசாங்க வரியோட சேர்த்து… ஒரு குதிரை 10 பவுனுங்க…
மடையன்: எங்ககிட்ட 5 பவுனு தாங்க இருக்கு… இதை வச்சிக்கங்க.. மீதி 5 பவுனை குருநாதர்கிட்ட போயி வாங்கிட்டு வந்திடறோம்… யாருகிட்டயும் குடுத்திடாதீங்க…
விவசாயி: சரி…சரி சீக்கிரம் வாங்க… நல்ல முட்டையா பாத்து எடுத்து வைக்கறேன்…
மனைவி: இன்னைக்கு நரி முகத்துல தான்யா முழிச்சிருக்க… நல்ல இளிச்ச வாயனுங்க மாட்டுனாங்க…
விவசாயி: சரி… நல்ல குதிரை முட்டையா பாத்து ஒண்ணு எடு…
மனைவி: என்னது…
விவசாயி: அது… பூசணிக்காயா பாத்து எடுன்னேன்….
காட்சி – 11
மட்டி,மடையன்,குருநாதர்
குருநாதர்: என்னது… ஒரு நல்ல குதிரையோட முட்டை… 10 பவுன் தானா… ரொம்ப மலிவா இருக்கே…. அந்த வியாபாரி சரியான ஏமாந்த சோனகிரியா இருப்பான் போல இருக்கே… இந்தாங்கடா 5 பவுன்… அவன் மனசு மாறுறதுக்குள்ள போய் வாங்கிட்டுவந்திடுங்க…குட்டியிலேர்ந்து வளர்த்தினா… அந்த குதிரை நாம சொன்னபடி கேக்கும்… ஜனங்களுக்கு வேடிக்கை காட்டி கூட பணம் சம்பாதிச்சிடலாம்…
மட்டி: ஆஹா… நமக்கு தோணாத விஷயமெல்லாம் நம்ம குருநாதருக்குத் தோணுதே…
மடையன்: பரமார்த்த குரு…
மட்டி: வாழ்க.. வாழ்க…
மடையன்: பரமார்த்த குரு…
மட்டி: வாழ்க.. வாழ்க…
மடையன்: பரமார்த்த குரு…
மட்டி: வாழ்க.. வாழ்க…
காட்சி – 12
மட்டி,மடையன், விவசாயி, மனைவி
மட்டி: ஐயா… ஐயா… எங்க குதிரை முட்டை தீர்ந்து போயிடுமோன்னு வேகமா வர்றோம்… இந்தாங்க 5 பவுனு…
மடையன்: இதபாருங்க… எங்களுக்கு எல்லாம் தெரியும்… ஏமாத்த முடியாது… நல்ல முட்டையா பாத்து எங்க குருநாதர் வாங்கிட்டு வர சொன்னாரு…
மட்டி: ஆங்..ஆங்.. வெள்ளைக் குதிரை வெளிய வர்ற மாதிரி, முட்டை இருந்தா குடுங்க… எங்க குருநாதருக்கு வெள்ளை தான் புடிக்கும்…
விவசாயி: ஹி.. ஹி.. ஹி… ஒரு காசு பெறாத பூசணிக்காய்… இன்னிக்கு 10 பவுன் விக்குது…
மனைவி: இன்னிக்கு யார் முகத்துல விழிச்சியோ… விவசாயி: உன் முகத்துலதான்…
மனைவி: சீ… போய்யா…
மட்டி: வியாபாரத்தை கவனிக்காம அங்க என்ன பேச்சு…. சீக்கிரம் குதிரை முட்டை குடுங்க…
விவசாயி: ஆங்… ஆங்.. இந்தாப்பா…. கவனமா எடுத்துட்டுப் போ மடையன்: ஏங்க.. இந்த குதிரைக்கு என்ன ஆகாரம் தரலாம்னு குருநாதர் கேப்பாரே…
விவசாயி: நீங்க என்ன சாப்பிடறீங்க… மட்டி: பழைய சோறு…
விவசாயி: ஆங்… மூணுவேளையும் பழைய சோறே போடுங்க… குட்டி பத்தடி உயரத்துக்கு ஜோரான குதிரையா வளரும்…
மடையன் அப்படிங்களா.. குடுங்க.. குடுங்க… குடுங்க…
காட்சி – 13
மட்டி,மடையன்
மடையன்: டேய் மட்டி… என்னடா ஒரே காடா இருக்கு… உனக்கு நம்ம இடத்துக்கு போக வழி தெரியுமா?
மட்டி: பேசாம என் பின்னாடியே வா… வழி காட்டறேன்…
மடையன்: ம்… ம்…
மட்டி: டேய்… டேய்… ஏன்டா மடையா… அறியாம குதிரை முட்டைய போட்டு உடைச்சிட்டியே… அங்க பாரு…
மடையன்: ஐயையோ…
மட்டி: ஆண்டவன் நம்ம பக்கம் தான்… பாரேன்… அடைகாக்கறது இல்லாம நமக்கு குதிரைகுட்டி கிடைக்குது….
மடையன்: சரி… சரி… மட்டி: டேய் புடிடா… டேய்… புடிடா.. அங்க ஓடுது புடிடா…. டேய் புடியேன்டா…
மட்டி: ஐயோ… அம்மா.. முடியல…
மடையன்: விட்டுட்டியேடா…
மட்டி: ஐயையோ… முடியலடா…
மடையன்: ஐயோ.. என்னாலயும் இனிமே முடியாதுடா.. ஒண்ணு பண்ணலாமா…
மட்டி: என்ன…
மடையன்: குருநாதர்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாமா…
மட்டி: ம்… சரி வா…வா… சீக்கிரம் வாடா….
காட்சி – 14
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் குருநாதர்
குருநாதர்: போனாப் போகுது விடுங்கடா… இதுக்காக எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. 10 பவுன் தானே… இன்னொரு இளிச்சவாயன் காணிக்கையா கொண்டுவந்து குடுத்துட்டு போறான்… அந்த குதிரை, குட்டியிலயே இந்த வேகத்துல ஓடினா… பெருசானா நமக்கு அடங்காது… போனதே உத்தமம்… வயசான காலத்துல… நான் அதுமேல இருந்து கீழ விழுந்தா.. என்ன ஆகும்… ம்… ஓடி வந்த களைப்பு… பானையில பழையசோறு இருக்குது… போயி சாப்பிடுங்க…
மடையன்: குருநாதா… குருநாதா… உங்களுக்கு எத்தனை நல்ல மனசு…
மடையன்: பரமார்த்த குருவே…
மட்டி: வாழ்க… வாழ்க…
மடையன்: பரமார்த்த குருவே…
மட்டி: வாழ்க… வாழ்க…
மடையன்: பரமார்த்த குருவே…
மட்டி: வாழ்க… வாழ்க…