Connect with us

Moral Stories - Tamil

Paramartha Guru – Muttalin Pasi – (Part -1) பரமார்த்த குரு – முட்டாளின் பசி

சுயபுத்தியும் கிடையாத சொல்புத்தியும் கிடையாதுஇவங்களுக்குப் பட்டா தான் தெரியும்

முட்டாளின் பசி

காட்சி – 1

மட்டி, மடையன், முட்டாள், மூடன், பேயன் முட்டாள் : ஏய் மூடா…. ஏய்… என்னால… என்னால இனிமே நடக்க முடியாதுடா… பசி வயித்த கிள்ளுது…

மூடன்: ஏண்டா… ஒரு மூட்டை அரிசியை முழுங்குன மாதிரி வயிறு… இதைப் போயி யாருடா கிள்ள முடியும்….

முட்டாள்: ஏய்… தொடப்பக்குச்சி… கேலி பேசாத… அப்புறம் கோபம் வந்தது…

மட்டி: அவன் வாயால ஊதுனாலே போதும்… அதோ அந்த மரத்து மேல போய் விழுவ…

மடையன்: சரி சரி தமாஷ் எல்லாம் போதும்… அதோ அங்க கைகாட்டி இருக்கு… அது எந்த ஊருக்கு போகுதுன்னு பாப்போம்…

பேயன்: கைகாட்டி… போ…காதுடா… நா…மதான் போகணும்…

Advertisement

காட்சி – 2

மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன், வழிப்போக்கன் கஞ்சன்பட்டி என பெயர் பலகை எழுதியிருப்பது….

அனைவரும் : என்னா எழுதியிருக்குன்னே தெரியலையே…

முட்டாள்: இந்த கைகாட்டி எந்த ஊரைக் காட்டுதோ… அங்க இருந்து தான் முளைச்சி வந்திருக்கணும்… புடுங்கிப் பாத்தா தெரிஞ்சிட்டு போகுது…டேய்… முட்டாள்… நில்லுடா…

வழிப்போக்கன்: அட… என் பேரைச் சரியா சொல்றாரே… இவரு பெரிய ஞானியா இருப்பாரு போல இருக்கு….

உன் பேரே முட்டாளா? ஆமா…

இவன் மடையன்

அவன் மட்டி…

Advertisement

முட்டாள்: இவன் மூடன்…

இவன் பேயன்

நாங்க எல்லாம் இணைபிரியா நண்பர்கள்…

வழிப்போக்கன்: சரி ஏன் கைகாட்டியை புடுங்கறீங்க…

முட்டாள்: கஞ்சன்பட்டிக்கு போக வழி தேடத்தான்…

வழிப்போக்கன் : ஏம்பா… படிச்சி தெரிஞ்சிக்கக்கூடாது…

முட்டாள்: நாங்க தான் பள்ளிக்கூடத்துல போயி தூங்கிட்டோமே… அதனால படிக்கத் தெரியாது…

வழிப்போக்கன்:சரி சரி… உபதேசம் வேண்டாம்… இதைப் படிச்சி எந்த ஊருக்குப் போகுதுன்னு சொல்லுங்க… சீக்கிரம் போயி பிச்சை எடுத்து சாப்பிடணும்…

Advertisement

வழிப்போக்கன்:ஓ… பிச்சையா… இந்த வழியா தான் கஞ்சன்பட்டிக்கு போகணும்… ஆனா அங்க யாரும் உங்களுக்கு சாப்பாடு போட மாட்டாங்க… பேருக்கு தகுந்த மாதிரி தான், அந்த ஊரு ஜனங்களும் இருப்பாங்க… வேணும்னா என்கூட என் ஊருக்கு வாங்க… நான் சாப்பாடு போடறேன்…

முட்டாள்: சரி சரி… வாங்கடா… நமக்கு சோறு கண்ட இடம் தாண்டா சொர்க்கபுரி…

மூடன்: முட்டாள் அண்ணே… இந்த ஆளு நம்மளை ஏமாத்தப் பாக்கறாரு… நாம கஞ்சன்பட்டிக்கே போகலாம்…

மட்டி: ஆமாமா… நாம பிச்சை எடுத்து சாப்பிடறதைப் பார்த்து…. இந்த ஆளுக்கு வயித்தெரிச்சல்…

மடையன்: அண்ணே… நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க.. நாங்க இப்படியே போறோம்…

வழிப்போக்கன்:ஹ…ஹ…ஹா… ஆங்… சுயபுத்தியும் கிடையாது… சொல்புத்தியும் கிடையாது…. இவங்களுக்குப் பட்டா தான் தெரியும்…. ஹி… ஹி… ஹி…

 

 

Advertisement

 

Continue Reading
Advertisement