Connect with us

Moral Stories - Tamil

Paramartha Guru – Paramarthaguru Aasiramam – (Part – 2) பரமார்த்த குரு – பரமார்த்தகுரு ஆசிரமம்

இந்த கிழட்டுச் சாமியாருக்கு சமையல் செஞ்சு போடவே நேரம் சரியாஇருக்கு… இன்னும் 5 தடிப்பசங்க வேற, சீடர்களா சேர்ந்துட்டானுங்களே நாம தீர்ந்தோம்…ம்.

பரமார்த்தகுரு ஆசிரமம்

காட்சி – 3

மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன்,ஊர் மக்கள்

ஊர் தலைவன் : கிராம மக்களே… நம்ம ஊருல… என்னைக்கும் இல்லாத அதிசயமா இவங்க பிச்சை எடுத்து மாட்டிகிட்டாங்க… நாமே சிக்கனம் கருதி மூணு நாளைக்கு ஒருமுறை தான் சாப்பிடறோம்… குறைஞ்ச அளவுதான் ஆடை அலங்காரம் பண்ணிகிட்டு இருக்கோம்…

ஆள்1 : அதுவும் பழைய சோறு தானே சாப்பிடறோம் தலைவா….

ஊர் தலைவன் : அப்படி இருக்கும் போது, இவங்க எப்படி தைரியமா இந்த கஞ்சன்பட்டிக்கு வந்து, பிச்சை எடுக்கலாம்… இதை நம்ம ஊரு மக்களுக்கு ஏற்பட்ட அவமானமா கருதறேன்… அனைவரும் : ஆமா… ஆமா…

ஆள்2 : தலைவா… மன்னிக்க முடியாத குற்றத்தை செஞ்சஇவங்களஎண்ணெயை ஊத்திக் கொளுத்திடுவோம்…

சீடர்கள் ஐவரும் : ஐயய்யோ… வேண்டாம்… வேண்டாம்… ஊர் தலைவன் : மூச்….. தலைக்கு நாம எண்ணெய் வச்சே, பல வருஷங்கள் ஆகி போச்சு…. இவங்களுக்கு எண்ணெய்க்கு எங்கடா போறது…ஆகையினால இவங்களஅடிச்சித் துரத்திடுவோம்… அனைவரும்: ஆமா… ஆமா…

Advertisement

ஊர் தலைவன்: போதும்… போதும்… இனிமே துரத்தினா நமக்கு அநாவசியமா வயிறு பசிக்கும்டா… திரும்புங்கோ…

முட்டாள் : ஐயோ… ஐயோ…ஆங்… இனிமே என்னால ஓட முடியாது…

மட்டி : ஏன்டா நமக்கு வேலை செய்யவும் சோம்பல்… பிச்சை எடுத்தாலும் கைகால் நல்லாருக்குன்னு அடிக்க வர்றாங்க… எழுதப் படிக்கவும் தெரியாது… அப்புறம் எப்படித்தாண்டா ஒரு மனுஷன் சாப்பிடறது…

மூடன் : ம்… ஒரு யோசனை….

மட்டி : எப்படி… சாப்பிடாம இருக்கலாங்கறீயா…

மூடன் : இல்ல.. எதாவது சாமியார்கிட்ட போயி… சீடர்களா சேர்ந்துக்கலாம்…

பேயன்: சே…ர்ந்தா….

மூடன்: : உழைக்காம சாப்பிடலாம்… குருநாதருக்கு வர்ற காணிக்கை, பழங்கள், எல்லாம் நமக்குதான்…

Advertisement

முட்டாள்: ம்… அதுசரி… நம்மள சேர்த்துக்கக் கூடிய அறிவாளியான குருநாதர் கிடைக்கணுமே…

மூடன் : அட… தேடுவோம்… வாங்கடா…

முட்டாள்: ம்… எங்க ஞானகுருவே… அறிவு குருவே… நீங்க எங்க இருக்கீங்க… எங்க இருக்கீங்க…

 

காட்சி – 4

மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் பரமார்த்த குரு, ஒருவன்

(பரமாத்ர்த குரு ஆசி ரம்மம்) என பெயர்பலகை காட்டப்பட… ஒருவன்: ஐயோ

குரு: அப்பனே… ஐயோ என்று சொல்லாதே… ஆண்டவனே… என்று சொல்…. நீ எனக்கு காணிக்கையாகத் தந்த பழத்தின் தோல்…உன்னையேபதம்பார்த்துவிட்டது…ஹஹா…ஹா… எழுந்தவன் விழுவான்… விழுந்தவன் எழுவான்… இது தான் உலக இயற்கை… போ… நாளை வழுக்கி விழாத பலாப் பலத்துடன் வா…

Advertisement

ஒருவன்: குருவே… ஒரு பிரச்சினை… அதை நீங்க தான் தீர்த்து வைக்கணும்…

குரு: என்னப்பா பிரச்சினை…

ஒருவன்: எங்க வீட்டுல 5 கோழிங்களும், ஒரு சேவலும் இருக்கு… கோழிங்க முட்டை போடுது… ஆனா இந்த வெள்ளை சேவல், முட்டையே போடமாட்டேங்குது சாமி…

குரு: ஹ.. ஹா…ஹா… ஹா… இதுவா உன் பிரச்சினை… இந்த பிரச்சினை தீர, நான் நல்ல வழி சொல்றேன்…கேளு… முட்டாள்: இந்த சாமியார் மட்டும்… இந்த பிரச்சினைக்கு தீர்வு சொல்லிட்டா…அவரு தான் நம்ம குருநாதர்… என்னடா…

மற்ற நால்வரும்: ஆமா… ஆமா…

குரு : ஏம்பா… மற்ற கோழிகள் என்ன வர்ணம்

ஒருவன்: கருப்பு கோழிகள் குருவே…

குரு: மடையனே… மடையனே…

Advertisement

மட்டி: மடையா… உன்னை சாமியாரு கூப்பிடறாரு..

மடையன்: போடா.. இந்த உலகத்துல நெறைய பேரு என் பேரோட திரியறாங்க..

குரு : கருப்புக் கோழிகள் முட்டையிடும் போது… வெள்ளைச்சேவல் எப்படி முட்டையிடும்… இந்த வெள்ளைச் சேவலையும் கறுப்பு வர்ணம் அடித்து கருப்பாக மாற்றி விடு… முட்டை போடும்… ஒருவன்: ஆஹா… நீங்க தான் குரு… பரமார்த்த குரு…

ஐவரும்: நீங்கள் தான் நாங்க தேடிய குருநாதர்…

முட்டாள்: பரமார்த்த குரு…

நால்வரும்: வாழ்க.. வாழ்க

முட்டாள்: : பரமார்த்த குரு

நால்வரும்: வாழ்க.. வாழ்க…

Advertisement

மட்டி : அவரு கால்ல விழுங்கடா…

குரு: ஓ.. என் சீடர்களே… நீங்கள் வாழ்க.. நீங்களும் வாழ்க…

சமையல்காரன்: ஆஹா… இந்த கிழட்டுச் சாமியாருக்கு சமையல் செஞ்சு போடவே நேரம் சரியாஇருக்கு… இன்னும் 5 தடிப்பசங்க வேற, சீடர்களா சேர்ந்துட்டானுங்களே நாம தீர்ந்தோம்…ம்..

குரு : என்னடா அங்க முனகல்…

சமையல்காரன்: ஒண்ணுமில்லை குருவே… இப்படிப் பட்ட வயிறுக்கு சமைச்சிப் போட, குடுத்து வைச்சிருக்கணும்னு சொன்னேன்…

முட்டாள்: டேய் மூடா… என் வயித்தப் பாத்து அவன் பயந்துட்டான்… உனக்கு தலையிலருந்து கால்வரைக்கும் வயிறுன்னு அவனுக்குத் தெரியாது…

மூடன் : ஹ.. ஹ.. நீ வேணும்னா பாரேன்… நாம சாப்பிடறதப் பாத்து பயந்து போயி, அவன் மடத்தை விட்டு ஒரே நாள்ல ஓடி போயிடுவான்…

ஐவரும் : ஹ…ஹா…ஹா… ஹ…ஹா…ஹா…

Advertisement

குரு: என்னடா அங்க சிரிப்பு…

மடையன் : அது…. குருநாதா…. மடத்துல எங்களை நீங்க சேர்த்துகிட்டீங்களே.. அந்த சந்தோஷத்துல சிரிச்சோம்…

குரு : ம்.. ஹ…ஹா…ஹா… ஹ…ஹா…ஹா… நல்ல சீடர்கள்… நல்ல சீடர்கள்…

மடையன் : பரமார்த்த குரு…

முட்டாள் : வாழ்க.. வாழ்க… பேயன : பரமார்த்த குரு… நால்வரும் : வாழ்க.. வாழ்க…

 

 

Advertisement
Continue Reading
Advertisement