Moral Stories - Tamil
Paramartha Guru – Samayalkaaranin Kavalai – (Part -3) பரமார்த்த குரு – சமையல்காரனின் கவலை
எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது

சமையல்காரனின் கவலை
காட்சி – 5
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் சமையற்காரன்,
மட்டி: ஏம்ப்பா…. இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டாப்பா…கொண்டாரேன்…. சமையற்காரன்: சமைச்சதெல்லாம் உங்களுக்குத்தான்… எனக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை.. சாப்பிடுங்க…
மடையன்: யோவ்… சாப்பாடு போடும்போது முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கய்யா…
மட்டி: டேய்…. கொஞ்சம் சாம்பார் கொண்டா… கொண்டா….
மடையன்: இங்க ரசம் ஊத்து…
மூடன்: செஞ்ச பொறியல் எல்லாம் நீயே தின்னுட்டியா… எடுத்தாய்யா….
பேயன்: டேய்… ஊ…ஊ… றுகா… போ…போடய்யா…
மட்டி: எனக்கு சோறு வேணும்…
சமையற்காரன்: இனிமே உங்களுக்கு என்னால சமைக்க முடியாது…. இந்த முப்பது வருஷ சமையல் வாழ்க்கையில, இப்படி தின்னவங்களை நான் பாத்ததே இல்லை… எனக்கு சாப்பாடே இல்லை… ஐயா… உங்க குருநாதர் எழுந்தா… நான் என்னோட மாமியார் பொண்ணை பாக்கறதுக்கு, ஊருக்குப் போறேன்னு சொல்லிடுங்க…
மூடன்: டேய்…டேய்… டேய்… இவன் போயிட்டா நமக்கு யாருடா அடுத்த வேளைக்கு சமைச்சிப் போடுவாங்க…
மடையன்: டேய்… எதுக்கும் கவலைப் படாதவன் தாண்டா சாமியார் மடத்துக்கு வரணும்… அடுத்த வேளைய ஆண்டவன் பாத்துக்குவான்…
மூடன்: ஆங்… நமக்கெல்லாம் ஆண்டவன் அந்த பரமார்த்த குருதான்….
காட்சி – 6
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் பரமார்த்தகுரு
குருநாதர்: இருந்த சமையற்காரனும் ஓடிட்டான்… வயத்தைப் பசிக்குது… உங்கள்ல யாருக்காவது சமைக்கத் தெரியுமா…
முட்டாள்: சாப்பிடத்தான் தெரியும் குருநாதா…
குருநாதர்: ஹ…ஹ… ஹா… நீங்க சாப்பிடறதைப் பாத்துதான் ஓடிட்டானே… ம்… என்ன செய்யலாம்… பிச்சை எடுக்கலாம்னா இந்த ஊருல போடமாட்டாங்க…
மூடன்: ஏன் குருநாதா….
குருநாதர்: இது ஒரு சோம்பேறி மடம்னு ஊரு ஜனங்களுக்குத் தெரிஞ்சு போச்சே…
பேயன்: என்ன….. செ… செ…ய்யலாம்… குரு… நாதா…
குருநாதர்: ஏதாவது வெளியூர் போகணும்… ஆனா என்னால நடக்க முடியாது… மாடு குதிரைன்னு ஏதாவது கிடைச்சா சவுரியமா இருக்கும்….
மூடன்: குருவே… குருவே… பக்கத்து தெருவுல ஒருத்தன்… பொதிமாடு வாடகைக்கு விடறான்… அதை நான் போயி புடிச்சிட்டு வரட்டுமா…
குருநாதர்: டேய் நல்லா சுமக்கற மாடா பாத்து…புடிச்சிட்டு வாடா…. இல்லைன்னா மாட்டை நாம சுமக்க வேண்டி வரும்…. ஹ…ஹ…ஹ…ஹ… ஹா…
காட்சி – 7
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் பரமார்த்த குரு
குருநாதா: மூடா…
மூடன்: சொல்லுங்க குருநாதா…
குருநாதர்: மாட்டுக்கு எவ்வளவு வாடகை…
மூடன்: ஒருநாளைக்கு அஞ்சு பணம் குருநாதா…
குருநாத: குடுக்கலாம்… குடுக்கலாம்… நல்லா சுமக்குதே…
குருநாதர்: என்னடா இது… வெயில் இப்படி மண்டையப் பொளக்குது… நாக்கு வரட்டுது… ம்… சின்ன வயசுல உழைச்சிருந்தா… இப்போ இப்படி சோத்துக்கு அலைய வேண்டாம்…தலைசுத்துதுடா… என்ன கொஞ்சம், இறக்கி விடுங்கடா…
குருநாதர்: இருக்கற மரத்தையெல்லாம் வெட்டி, பூமியை பாலைவனமா பண்ணிட்டாங்களே பாவிபயலுக… நிழலையே காணோமே…
முட்டாள்: குருநாதா… மாட்டு நிழல்ல வந்து… கொஞ்சம் படுத்து ஓய்வெடுத்துக்குங்க குருநாதா…ம்.. எங்க… எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது…
அனைவரும்: புடிச்சிக்கங்க… புடிச்சுக்கங்க… புடிடா.. புடிடா… நல்லா புடிடா…
காட்சி – 8
மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன், பரமார்த்தகுரு, மாட்டுக்காரன், ஊர்தலைவர்
குருநாதர்: ஏதோ.. இந்த ஊரு ஜனங்களுக்கு நம்மளப் பத்தி தெரியாததனால… நெறய பலகாரங்களை கொண்டு வந்து கொடுத்துட்டுப் போயிட்டாங்க… தெரிஞ்சுது….
மூடன்: என்ன ஆகும் குருநாதா….
குருநாதர்: ம்… அடுத்த ஊருக்குப் போக வேண்டியது தான்…
மாட்டுக்காரன்: சாமியாரே… சாமியாரே..
குருநாதர் டேய்… யாரோ கூப்பிடறாங்க… போய் பாருங்கடா…
முட்டாள்: இத்தனை ருசியான பலகாரத்தை விட்டுட்டு எழுந்து போக மனசே இல்ல குருநாதா…
மாட்டுக்காரன்: மாட்டு வாடகை 5 பணம் குடுங்க.. நான் மாட்டைப் புடிச்சிட்டு போகணும்…
குருநாதர்: ரொம்ப நன்றிப்பா… உன் மாடு நல்லா சுமந்தது… அடிச்ச வெயிலுக்கு உன் மாட்டு நிழல் மட்டும் இல்லேன்னா நான் ஓய்வெடுத்திருக்க முடியாது…
மாட்டுக்க்காரன்: ஓ…. மாட்டு நிழல்ல வேற ஓய்வெடுத்தீங்களா… அப்ப அதுக்கு தனியா… மூணுபணம் வாடகை எடுங்க…
குருநாதர்: ம்… என்னய்யா இது… நிழலுக்கு வாடகையா? அநியாயமா இருக்கே… இந்த ஊருல நியாயமே கிடையாதா…
மாட்டுக்காரன்: ம்… நியாயஸ்தரே இருக்காரு… வாங்க… போலாம்….
ஊர்தலைவர்: பெரியவரே… மாட்டுக்குப் பேசுன வாடகை எவ்வளவு…
குருநாதர்: அஞ்சு பணம்யா…
ஊர்தலைவர்: என்னய்யா.. மாட்டுக்காரரே… சரிதான…
மாட்டுக்காரன்: ம்.. ஒப்புக்கறேன்யா…
ஊர்தலைவர்: அப்புறம் என்ன… அஞ்சு பணம் தந்தா வாங்கிட்டு போகவேண்டியது தான…
மாட்டுக்காரன்: அதெப்படிங்க… மாட்டு சவாரிக்கு தான் வாடகை அஞ்சு பணம்… நிழல்ல படுத்தா… அதுக்கு தனியா மூணு பணம் தரணுமே…
குருநாதர்: ஐயய்யோ தலைவரே… இது ரொம்ப அநியாயம்… நீங்க தான் சரியான தீர்ப்பு சொல்லணும்…
ஊர்தலைவர்: என்னய்யா இது… விநோதமான வழக்கா இருக்கு… நடுநிசியில வந்து தீர்ப்பு சொல்லுங்கறீங்க… சரி நியாயமான தீர்ப்பு சொல்றேன்…
குருநாதர்: ஐயய்யோ என்ன தீர்ப்பு சொல்லப் போறாரோ… +சீடர்கள் கடவுளே…
ஊர்தலைவர்: இந்த வழக்கை விசாரிச்சதுல… மாட்டு சொந்தக்காரனோட வாதம் நியாயமானது…
மாட்டுக்காரன்: ம்… அது சரிதான்…
ஊர்தலைவர்: அதனால மாட்டு மேல சவாரிசெஞ்சதுக்கு 5 பணமும்… நிழல்ல தூங்குனதுக்கு மூணு பணமும் சாமியார் குடுத்துடணும்… குருநாதர் +சீடர்கள் இது என்னய்யா… அநியாயமா இருக்கு…
ஊர்தலைவர்: அமைதி… அமைதி… ஆனா ஒரு நிபந்தனை… நாளைக்கு காலையில விடிஞ்ச உடனே… பரமார்த்த குரு 3 பணத்தை சூரிய ஒளியில காட்டுவாரு… யோவ் மாட்டுக்காரரே…
மாட்டுக்காரன்: ம்…
ஊர்தலைவர்: நீ அந்த பணத்தோட நிழல எடுத்துகிட்டு போய்யா…
மாட்டுக்காரன்: என்னங்க இது அநியாயமா இருக்கு…
ஊர்தலைவர்: பின்ன என்னய்யா… நிழலுக்கு வாடகைன்னா… அந்த வாடகைப் பணமும் நிழலாத்தான் இருக்கும்… இது தான் என் தீர்ப்பு… எல்லோரும் கலைஞ்சு போங்க..
குருநாதர்: சரியான தீர்ப்பு… சரியான தீர்ப்பு…
.