Connect with us

Moral Stories - Tamil

Paramartha Guru – Seedanai Muzhungiya Aaru – (Part – 6) பரமார்த்த குரு – சீடனை முழுங்கிய ஆறு

எனக்கு ஆத்து மந்திரம் தெரியும்… அதைப் போட்டு செத்தவனை உயிரோட கொண்டு வர்றேன்… எனக்கு என்ன தருவீங்க

சீடனை முழுங்கிய ஆறு

காட்சி – 15

மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் பரமார்த்தகுரு

முட்டாள்: குருநாதா…. அங்க ஒரு படகு போகுது…. அதுல ஏறி அக்கரைக்கு போயிடலாம் குருநாதா…

குருநாதர்: அதுல படகோட்டியும் இல்ல.. துடுப்பும் இல்ல… எப்படி போறது… சும்மா இருங்க..

மட்டி: ஆறு எத்தனை ஆழம் இருக்கும் குருநாதா…

குருநாதர்: நீ எங்க இறங்குனாலும் அது தலைக்கு மேல போகும்…

மட்டி: ஐயையோ… எனக்கு நீச்சல் தெரியாதே…

Advertisement

மடையன்: அட… பயப்படாதடா… நான் உன்னை தூக்கிட்டுப் போறேன்…

முட்டாள்: போகலாமா குருநாதா…

குருநாதர்: இருங்கடா… உப்பு மூட்டைங்களையே முழுங்குன இது ஒரு பொல்லாத ஆறு…

மூடன்: எப்படி குரு…

குருநாதர்: என்னோட நண்பன் குப்புநாதன் ஒரு பெரிய உப்பு வியாபாரி… ஒரு நாள் குதிரையில நாலு உப்பு மூட்டைங்கள எடுத்துகிட்டு… இந்த ஆத்தைக் கடக்க வந்திருக்கான்… அவன் போன ஜென்மத்துல எருமையா இருந்ததனால… எங்க தண்ணிய பாத்தாலும் அஞ்சு நாழிகை குளிப்பான்… அன்னிக்கு உப்புமூட்டையோட குதிரையை தண்ணிக்குள்ள நிறுத்திட்டு குளிச்சிருக்கான்… கரைக்கு வந்து பாத்தா… மூட்டை சாக்கு அப்படியே இருக்கு… உள்ள இருக்க உப்பெல்லாம் காணோம்… இந்த பொல்லாத ஆறு… உப்பையெல்லாம் முழுங்கிடுச்சி… இது ரொம்ப பொல்லாத ஆறு…

மூடன்: ஐயையோ… பயமா இருக்குதே குருநாதா…

குருநாதர்: பயப்படாதே… நான் எதுக்கு இருக்கேன்… என்ன… ஆறு முழிச்சிகிட்டு கோபமா இருக்கும் போது நாம கடக்கக் கூடாது… தூங்கும் போது சுலபமா போயிடலாம்… முட்டாள்: ஓ.. அதை எப்படி தெரிஞ்சிக்கறது குருநாதா…

குருநாதர்: ராத்திரிக்கு அது தூங்கும் போது… ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து தண்ணிக்குள்ள விடணும்…

Advertisement

அனைவரும்: ஓஹோ…

குருநாதர்: அது… உஸ்…. ஸுன்னு சத்தம் போட்டா… முழிச்சிகிட்டு இருக்குன்னு அர்த்தம்… சத்தம் போடலைன்னா… தூங்கிகிட்டு இருக்குன்னு அர்த்தம்…

முட்டாள்: இருட்டுன பிறகு… நான் போய் பரிட்சை செஞ்சு பாக்கறேன் குருநாதா…

குருநாதர்: சரி… துஷ்டனைக் கண்டா தூர விலகுன்னு… தள்ளி நின்னு பரிசோதனை செய்…

முட்டாள்: சரி குருநாதா…

 

காட்சி – 16

மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,பேயன் வழிப்போக்கன், பரமார்த்தகுரு

Advertisement

முட்டாள்: குருநாதா… முட்டாள்: குருநாதா… குருநாதா… நீங்க சொன்ன மாதிரியே இஸ்… ஸுன்னு சத்தம் போடுது… ஆறு முழிச்சிகிட்டு இருக்கு…

குருநாதர்: டேய் முட்டாளே… மூன்றாம் ஜாம கோழி கூவிடுச்சி… ஆறு எங்கே இருந்து ஓடி வருதோ… களைப்புல தூங்கியிருக்கும்… இப்பப் போயி பாருடா… சரி குருநாதா…

முட்டாள்: குருநாதா… ஆறு தூங்கிடுச்சி… எல்லாம் சீக்கிரம் வாங்க… சீக்கிரம் வாங்க…

குருநாதர்: போக்கிரி ஆறு தூங்கிடுச்சி… போக்கிரி ஆறு தூங்கிடுச்சி…

சீடர்கள்: போக்கிரி ஆறு தூங்கிடுச்சி… போக்கிரி ஆறு தூங்கிடுச்சி…

குருநாதர்: போகப் போறோம் மறுகரைக்கு… போகப் போறோம் மறுகரைக்கு…

சீடர்கள்: போகப் போறோம் மறுகரைக்கு… போகப் போறோம் மறுகரைக்கு…

குருநாதர்: உப்பு தின்ன ஆறே நீ.. மப்பு தட்டி தூங்கு….

Advertisement

சீடர்கள்: குருநாதர்: உப்பு தின்ன ஆறே நீ.. மப்பு தட்டி தூங்கு….

சீடர்கள்: அட… உப்பு தின்ன ஆறே நீ.. மப்பு தட்டி தூங்கு….

மூடன்: அட… உப்பு தின்ன ஆறே நீ.. மப்பு தட்டி தூங்கு….

முட்டாள்: குருநாதா… உங்க தயவால எப்படியோ கரை சேர்ந்துட்டோம்…

குருநாதர்: சீடனை கரை சேர்த்து விடறவன் தான் குரு… ஆனா… நாம ரொம்ப சந்தோஷப் படக்கூடாது… ஏன்னா இந்த ஆறு ரொம்ப நாளா இங்க இருக்கு… ஏதாவது ஏமாத்து வேலை செஞ்சாலும் செஞ்சிருக்கும்… அதனால நாம எத்தனை பேரு இருக்கோம்னு எண்ணிப் பாத்திடுவோம்… வரிசையா நில்லுங்க…

குருநாதர்: ஒண்ணு…. குருநாதர் ரெண்டு… குருநாதர்: மூணு…. குருநாதர்: நாலு… குருநாதர் அஞ்சு…

முட்டாள்: ஐயையோ…. ஒரு குருநாதர் அஞ்சு சீடர்கள்ன்னா, எங்க வாத்தியார் சொல்லிக் குடுத்த கணக்குப் படி ஆறு பேர் வரணுமே… ஒண்ணு குறையுதே…

முட்டாள்: இருங்க குருநாதா…. நான் எண்ணறேன்… நீங்களும் வரிசையா நில்லுங்க… ம்….. முட்டாள்: ஒண்ணு…. முட்டாள்: ரெண்டு… முட்டாள்: மூணு…. முட்டாள்: நாலு… முட்டாள்: அஞ்சு…

Advertisement

குருநாதர்: ஐய்யய்யோ…. ஆமா குருநாதா…யாரோ ஒருத்தனைக் காணோம்… ஆறு முழுங்கிடுச்சி…

எதிரொலி: ஏ.. ஆறே.. உனக்கு ஏதாவது கோபம்னா என்னைத்தான பழிவாங்கணும்… ஒண்ணும் தெரியாத அப்பாவி சீடன் ஒருத்தனை எடுத்துகிட்டியே… என்ன நியாயம்… என்னப்போல அறிவாளி உனக்குப் பிடிக்கலயா…

குருநாதர்: பிடிக்கலயா…. பிடிக்கலயா…. பிடிக்கலயா….

பேயன்: ஆஹா… ஆறு முழிச்சிக்கிச்சி… அதான் நான் சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்லி பழிப்பு காட்டுது… வாங்கடா போகலாம்…

குருநாதர்: கு… குருநாதா… ஒ.. ஒ.. ரு ஒரு சீ…சீடன்…

சீடர்கள்: ராத்திரி நேரத்துல இங்க நின்னா ஆபத்து…. ஊருக்குள்ள போயிடுவோம்… காலையில வந்து தேடுவோம்…

குருநாதர்: போக்கிரி ஆறே… போக்கிரி ஆறே… பழிதான் வாங்கிக் கொண்டாயா… சீடர்கள்: போக்கிரி ஆறே… போக்கிரி ஆறே… பழிதான் வாங்கிக் கொண்டாயா…

வழிப்போக்கன்: இணைபிரியாத தோழனை பிரித்து… சதி தான் செய்து விட்டாயா…

Advertisement

குருநாதர்: இணைபிரியாத தோழனை பிரித்து… சதி தான் செய்து விட்டாயா…

வழிப்போக்கன்: நிறுத்துங்கய்யா… என்னய்யா பாட்டு இது…. உங்களுக்கு அப்படி என்ன சோகம்…

குருநாதர்: ஐயா… நாங்க ஆறு பேர் ஆத்தை தாண்டி வந்தோம்… இக்கரைக்கு வந்து எண்ணிப் பாத்தா… அஞ்சு தான் வருது… ஆறு ஒருத்தரை முழுங்கிடுச்சி ஐயா… முழுங்கிடுச்சி…

வழிப்போக்கன் ம்.. ஆறு பேர் இருக்காங்களே… எங்க மறுபடியும் எண்ணுங்க..

குருநாதர்: ஒண்ணு….

குருநாதர்: ரெண்டு…

குருநாதர்: மூணு….

குருநாதர்: நாலு…

Advertisement

குருநாதர்: அஞ்சு…

வழிப்போக்கன்: ம்.. ம்… ம்…,ம்…

வழிப்போக்கன்: சரியான மடப்பசங்களா இருப்பாங்க போல இருக்கே…ம்….ம்.. ம்.. ம்..

வழிப்போக்கன்: யோவ்.. யோவ்.. நிறுத்துங்கய்யா… நிறுத்துங்கய்யா… நிறுத்துங்கய்யா… ஏன்யா… எனக்கு ஆத்து மந்திரம் தெரியும்… அதைப் போட்டு செத்தவனை உயிரோட கொண்டு வர்றேன்… எனக்கு என்ன தருவீங்க…

முட்டாள்: ஐயா.. நீங்க தெய்வம்… அதை செஞ்சீங்கன்னா 10 பவுன் தர்றோம்…

வழிப்போக்கன்: கொஞ்சம் இருங்க…

முட்டாள்: குருநாதா… மந்திரக் கோல எடுத்துட்டு வர்றாரு…

வழிப்போக்கன்: வரிசையில நில்லுங்க.. இப்ப நான் இந்த மந்திரக் கோலால ஒவ்வொருத்தரையா ஒரு அடி குடுப்பேன்… அடி விழுந்த உடனே ஒண்ணுன்னு எண்ணணும்… நில்லுங்க… எல்லாரும் வரிசையில நில்லுங்க…

Advertisement

முட்டாள் ஏய் தடியா முன்னால நில்லு…

வழிப்போக்கன்: ஆங்…. ஒண்ணு…

மூடன்: ஐயோ ஒண்ணு…

மடையன் ம்…

மடையன் அம்மா… ரெண்டு…. வழிப்போக்கன் ம்.. பேயன்: ஐயோ… மூணு…

மட்டி: ஆத்தா… நாலு…

வழிப்போக்கன் ம்….

குருநாதர்: ஐயய்யோ…. அஞ்சு….

Advertisement

முட்டாள்: அம்மா… ஆ…. ஆ…ஆறு…

வழிப்போக்கன்: ஆங்… இப்ப எத்தனை இருக்கு….

குருநாதர்: ஆஹா… ஆஹா… ஆறு பேர் இருக்கோம்…

மூடன: செத்தவனைப் பிழைக்க வச்ச மகா ஞானியே… இந்தாங்க… 10 பவுனு…

சீடர்கள்: நீங்க நல்லா இருக்கணும்…

மூடன்: சரி… சரி… சீக்கிரமா இந்த ஊரை விட்டு கிளம்புங்க… சீடர்கள்: ஆத்துக்கு கோவம் வந்திடும்… இந்த திசையா போயிடுங்க…

பேயன்: அது தான் சரி… வாங்கடா போகலாம்…

வழிப்போக்கன்: பரமார்த்த குரு… வாழ்க… வாழ்க…

Advertisement

பரமார்த்த குரு…

வாழ்க… வாழ்க…

வா.. ழ்..க… பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுகிட்டு ராத்திரி நேரத்துல வெளிய வந்தேன்… பத்து பவுன் அதிர்ஷ்டம்… இதைத்தான் நல்லது எங்க இருந்தாலும் நடக்கும்னு சொல்லுவாங்களோ…

 

 

 

Continue Reading
Advertisement