Connect with us

Moral Stories - Tamil

Akbar And Birbal – Birbal’s Kichidi – அக்பர் பீர்பால் கதைகள் – பீர்பாலும் கிச்சடியும்

கடமையைச் செய் பலன் உங்களை தேடி வரும் என்பதற்கு
நீங்கள் சாட்சி.… இனி உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி தான்

பீர்பாலும் கிச்சடியும்

காட்சி-01

அக்பர், பீர்பால், உழைப்பாளி

அக்பர்: ஆஹா… என்ன குளிர்… என்னகுளிர்… இந்த வருடம் குளிர் சற்று அதிகமாகவே உள்ளது பீர்பால்…

பீர்பால்: ஆம் மன்னா… சென்ற ஆண்டைக் காட்டிலும்.. இந்த ஆண்டு குளிர் சற்று அதிகம் தான் மன்னா…

அக்பர்: எத்தனை குளிராக இருக்கிறதே… நம் மக்கள் எல்லோரும்… வீட்டை விட்டே வரமாட்டார்கள் அல்லவா…

பீர்பால்: இல்லை மன்னா… ஒரு நல்ல உழைப்பாளி… வெயில் மழை,குளிர் என்று எதையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்வான் மன்னா…

அக்பர்: என்ன பீர்பால் உளறுகிறீர்கள்… இந்த குளிரில் யாரேனும் வேலை செய்வார்களா?

உழைப்பாளி: குளிரை எல்லாம் பார்த்தா வேலைக்கு ஆவுமா…. இன்னிக்கு பொழப்ப ஓட்டுனுமில்ல… ராத்திரி வீட்டுல உலை கொதிக்கணும்னா… இப்ப நான் உழைச்சு தான் ஆகணும்… வாழ்க்கையை ஓட்ட பணம் வேணுமில்ல…

அக்பர்: அது சரி… வாழ்க்கைக்கு பணம் தேவைதான்… அதற்காக இத்தனை குளிரில் வேலை செய்வதா…

Advertisement

உழைப்பாளி: காசில்லைன்னா நம்மளை தூசு கூட மதிக்காது… நல்ல வழியில பணம் சம்பாதிக்கணும்னா.. இப்படி எல்லாம் கஷ்டப் பட்டுதான் தீரணும்…

அக்பர்: இல்லை பீர்பால்… என்னால் இதை நம்பமுடியவில்லை…இப்படி உழைப்பவர்களும் இருக்கிறார்களா என்ன…

பீர்பால்: ஆம் மன்னா… நிச்சயமாக இருக்கிறார்கள்…

அக்பர்: எனக்கு நம்பிக்கையில்லை… உங்களால் அப்படி ஒரு உழைப்பாளியைக் காட்ட முடியுமா… நான் அவனுக்கு கைநிறைய பொற்காசுகள் தந்து கௌரவப் படுத்த தயாராக இருக்கிறேன்…

பீர்பால்: முடியும் மன்னா… கண்டிப்பாக… அப்படி ஒரு உழைப்பாளியை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்…

அக்பர்: வேண்டாம் பீர்பால் இந்த விஷப்பரிட்சை… நீங்கள் நிச்சயம் இதிலே தோற்று விடுவீர்கள்…

பீர்பால்: இல்லை மன்னா… எனக்கு நம்பிக்கை இருக்கிறது…

அக்பர்: ம்… ஹ.. ஹ…ஹ.. பார்க்கலாம் உங்கள் நம்பிக்கையை…

 

காட்சி-02

Advertisement

பீர்பால், மரம்வெட்டி…

பீர்பால்: ம்… இவன் தான் சரியான ஆள்…

 

காட்சி-03

பீர்பால், கோவிந்தன்…

பீர்பால்: மன்னா… இவன் தான் நான் சொன்ன அந்த உண்மையான உழைப்பாளி… நீங்கள் வேண்டுமானால் இவனை சோதித்துப் பாருங்கள்…

அக்பர்: ம்.. உனது பெயர்..

கோவிந்தன்: கோவிந்தன் மன்னா…

அக்பர்: கோவிந்தன்… இன்று இரவு முழுவதும்… நீங்கள் நம் யமுனை நதியின் குளிர்ந்த நீரில் நிற்க வேண்டும்… அப்படி நின்று விட்டீர்கள் என்றால்… உங்களுக்கு கை நிறைய பொற்காசுகள் தரப்படும்…

என்ன சொல்கிறீர்…

Advertisement

கோவிந்தன்: ம்… நிற்கிறேன்… நிற்கிறேன்… மன்னா…

அக்பர்: யாரங்கே…

வீரன்: அஸ்ஸலாமு அலைக்கும் மன்னா…

அக்பர்: இன்றிரவு முழுவதும்.. இவர் தண்ணீரில் நிற்கின்றாரா என்பதை கவனிப்பது உன் பொறுப்பு… வீரன்: உத்தரவு மன்னா..

 

காட்சி-04

அக்பர், வீரன்,கோவிந்தன், பீர்பால்

கோவிந்தன்: மன்னா தாங்கள் கூறியவாறு… நேற்று இரவு முழுவதும் நான் யமுனை நதியில் நின்று விட்டேன் மன்னா…

அக்பர்: காவலாளியே இவன் கூறுவது உண்மையா…

வீரன்: ஆம் மன்னா… உண்மைதான்… நேற்று இரவு முழுவதும் இவர் யமுனை நதியில் தான் நின்று கொண்டிருந்தார்…

Advertisement

அக்பர்: ஆஹா என்ன ஆச்சரியம்… நீரையே உறைய வைக்கும் இந்த குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்…

கோவிந்தன்: மன்னா… நான் நம் அரண்மனையில் உள்ள அழகான விளக்குகளை… பார்த்துக் கொண்டே நின்றுவிட்டேன்… எனக்கு பொழுது விடிந்ததே தெரியவில்லை மன்னா…

அக்பர்: ஓ.. அப்படியா… உனக்கு பரிசுகள் ஏதும் கிடையாது… நீர் புறப்படலாம்…

கோவிந்தன்: மன்னா… மன்னா… இது என்ன அநியாயம்….

அக்பர்: குளிர்ந்த யமுனை நீரில் நிற்பது தான், நான் உனக்கு இட்ட கட்டளை… ஆனால் நீ… அரண்மனை விளக்குகளில் இருந்து வெப்பத்தைப் பெற்றிருக்கிறாய்… ஆகவே உமக்கு ஏதும் பரிசுகள் கிடையாது…

பீர்பால்: என்ன கோவிந்தன்… சோகமாக வருகிறீர்கள்… மன்னர் பரிசு தரவில்லையா…

கோவிந்தன்: ஆம்… பீர்பால்… மன்னர் எனக்கு எந்த பரிசும் தரவில்லை பீர்பால்..

பீர்பால்: ஏன்… ஏன் தரவில்லை…

கோவிந்தன்: அரண்மனை விளக்கில் இருந்து வந்த வெப்பத்தினால் தான் என்னால் தண்ணீரில் நிற்க முடிந்ததாம்… ஆகையால் பரிசு ஏதும் தரமுடியாது என்று கூறிவிட்டார் மன்னர்…

பீர்பால்: இது என்ன அநியாயம்… அரண்மனைவிளக்கு எங்கே இருக்கிறது… நதி எங்கே இருக்கிறது… அங்கு இருக்கும் விளக்கின் வெப்பம் இங்கே எப்படி வரும்…

Advertisement

கோவிந்தன்: அது தான் எனக்கும் புரியவில்லை…

பீர்பால்: கவலைப் படாதே… இதற்கு நாளை ஒரு முடிவு கட்டுகிறேன்… உங்கள் பரிசு உங்கள் வீடு தேடி வரும்… வருத்தப் படாமல் செல்லுங்கள்…

கோவிந்தன்: நன்றி பீர்பால் அவர்களே… மிக்க நன்றி… நான் வருகிறேன்…

 

காட்சி-05

அக்பர், பீர்பால், மரம்வெட்டி…

அக்பர்: என்ன இது… சபை கூடி இத்தனை நேரம் ஆயிற்று… இன்னும் பீர்பாலைக் காண வில்லையே… ஏன் இன்னும் வரவில்லை… ம்… யாரங்கே…

வீரன்: அஸ்ஸலாமு அலைக்கும் மன்னா…

அக்பர்: நீ சென்று பீர்பாலை கையுடன் அழைத்து வா…

வீரன்: உத்தரவு மன்னா…

Advertisement

வீரன்: மன்னா, பீர்பால் அவர் வீட்டில் கிச்சடி சமைத்துக் கொண்டிருக்கிறார்… சமைத்து சாப்பிட்டு விட்டு வருவதாக கூறினார் மன்னா…

அக்பர்: சரி சரி அவர் வரட்டும்…

அக்பர்: இன்று பொழுதே போய் விட்டது… அப்படி என்ன சமைக்கிறார்…. ம்… நானே சென்று பார்க்கிறேன்…

அக்பர்: இன்று பொழுதே போய் விட்டது… அப்படி என்ன சமைக்கிறார்…. ம்… நானே சென்று பார்க்கிறேன்…

 

காட்சி-06

அக்பர், பீர்பால், மரம்வெட்டி…

அக்பர்: பீர்பால்… என்ன இது… என்ன செய்து கொண்டிருக்கின்றீர்…

பீர்பால்: மன்னா… நான் கிச்சடி சமைக்கிறேன் மன்னா…

அக்பர்: ம்… பானை அங்கு உள்ளது… நெருப்பு இங்கு உள்ளது… இது தான் நீங்கள் சமைக்கும் லட்சணமா… பானைக்கு எப்படி அந்த வெப்பம் கிடைக்கும்…

Advertisement

பீர்பால்: ஏன் மன்னா…. அரண்மனை விளக்கின் வெப்பம் அந்த கோவிந்தனுக்கு கிடைத்த போது… இந்த நெருப்பின் வெப்பம் இந்த பானைக்கு கிடைக்காதா மன்னா…

அக்பர்: புரிகிறது பீர்பால்… நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று… புரிகிறது… நான் செய்தது தவறுதான்… என்னை மன்னித்து விடுங்கள்… இப்போதே… கோவிந்தனுக்கு சேர வேண்டிய பொருளை நீங்களே கொண்டு போய் கொடுத்து விடுங்கள்…

பீர்பால்: நன்றி மன்னா… மிக்க நன்றி…

 

காட்சி-07

பீர்பால், கோவிந்தன்… பீர்பால்: கோவிந்தா… கோவிந்தா…

கோவிந்தன்: வாருங்கள் பீர்பால் அவர்களே..

பீர்பால்: கோவிந்தா… இந்தாருங்கள்… உங்கள் பரிசு…

கோவிந்தன்: நன்றி பீர்பால் அவர்களே… மிக்க நன்றி…

பீர்பால்: கடமையைச் செய்… பலன் உங்களை தேடி வரும் என்பதற்கு நீங்கள் சாட்சி.… இனி உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி தான்… நான் வருகிறேன்…

Advertisement

கோவிந்தன்: அதற்குள்ளாகவா…

பீர்பால்: கவலைப்படாதீர்கள்… நான் மீண்டும் வருவேன்…

Advertisement