ஒரு பொழுதும் நீங்கள் பொய்யான புகழுரைக்கு மயங்காதீர்கள்… அது அழிவுக்கு உங்களைக் கொண்டு செல்லும்
ஒரு வார்த்தை கொடுத்தீர்களானால்… கொடுத்த வாக்கைக் கட்டாயம் காப்பாற்ற வேண்டும்
வீரம் அவளுக்கு பல பரிசுகளைப் பெற்றுத் தந்தது… எனவே எவற்றைஎல்லாம் காதால் கேட்டீர்களோ… அவற்றை உண்மை என நம்பக் கூடாது… தீர ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்
ஒரு போதும் பேராசைக்கு அடிமையாக வேண்டாம்… இருப்பதைக் கொண்டு களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்
முட்டாள் தனமான நண்பனை பெறுவதை விட… அறிவுள்ள பகைவனே மேல்… எனவே கவனத்துடன் நண்பர்களை தேர்ந்தெடுங்கள்
விளைவை யோசிக்காமல் செய்த செயல் மரணத்தை ஏற்படுத்தி விட்டது எனவே எப்போதும் விளைவை யோசித்து நீங்கள் செயல் படுங்கள்
ஒரு நல்ல நண்பனை அடைவது தான் கடினம்… இழப்பது மிகவும் எளிது… அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழக்கக் கூடாது