நமக்கு தேவை தேடுதலைத் தூண்டுகிறது
சிலர் தனக்கு கிடைக்காதவற்றை… தவிர்க்க நினைத்தாலும் முடிவதில்லை… சிலருக்கு விரும்பியது… கிடைக்காத போது… மனம் மறுத்தாலும், கண்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றன
நேர்மை தான் அனைத்திலும் உயர்ந்தது
வேலை செய்யவேண்டிய நேரத்துல வேலை செய்யணும்… விளையாட வேண்டிய நேரத்துல விளையாடணும்
எந்த வேலையை செஞ்சாலும்… அதை நம்மளால செய்ய முடியுமா… இல்ல பாதுகாப்பானதான்னு யோசிச்சி தான் செய்யணும்
ஒரு நல்ல செயல் மற்றொரு நல்ல செயலுக்கு வழி வகுக்கிறது… நாம நல்லதையே நினைச்சி… நல்லதையே செய்வோம்
நூற்றுக்கணக்கான வழிகளை விட… ஒரே ஒரு வழிதான் சிறந்தது
ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி… ஒருமுறைக்கு பலமுறை நல்லா யோசிச்சி செய்யணும்
மென்மையான, வேற வழியில்லாதவங்கள நாம குறைச்சி மதிப்பிடக்கூடாது அவங்க நம்மளை விட.. அதிர்ஷ்ட சாலிகளா இருப்பாங்க
குழந்தைகளே ஒரு செயலை ஒற்றுமையா செஞ்சோம்னா அது சீக்கிரமா முடிஞ்சிடும்… ஒற்றுமையே பலம்
நல்ல செயல்களை தான் எப்பவும் செய்யணும் தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான்..
நம்மளோட உதவி பயனுள்ளதா இருக்கணும்… குழந்தைகளே இப்படி தேவை இல்லாதவங்களுக்குப் பண்ணா… இதான் நடக்கும்
ஆபத்தில் உதவுபனே உண்மையான நண்பன்… ஆபத்துக் காலத்துல உண்மையான நண்பன் யாருன்னு தெரிஞ்சிடும்
நம்மகிட்ட இருந்து மத்தவங்க எதிர்பார்க்கறதை நம்மாள… எப்பவும் செஞ்சிகிட்டு இருக்க முடியாது.. நாம எப்பவும் எல்லாரையும் சந்தோஷப் படுத்த முடியாது… ஏன்னா எப்பவும் யாராவது நம்மகிட்ட எதையாவது எதிர்பார்த்துகிட்டே இருப்பாங்க
நாம இருக்கற இடத்தை சந்தோஷமா ஏத்துகிட்டோம்னா நமக்கு வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வராது குழந்தைகளே.
பேராசை பெரும் அழிவைத் தரும்
எப்பவும் தந்திரமும், பசப்பும் நிறைஞ்ச வார்த்தைகளை நாம நம்பக் கூடாது… இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்
சுயலாபத்துக்காக யார் என்ன பேசுனாலும் அதை நம்பக் கூடாது
கர்வத்தை விட பணிவே உயர்ந்தது
கருணையும், மென்மையுமான நடத்தை தான்… வெற்றியை கொடுக்கும் ஆனால்… வேகமான பலாத்காரமான செயல்… தோல்வியே தரும்