Connect with us

Moral Stories - Tamil

குழந்தைகள் எல்லாவற்றிலும் மிக அழகான பூக்கள் – 2 நிமிட வாசிப்பு

பெரிய ராஜாவா இருந்தாலும் உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் நீங்க தான் இந்த நாட்டோட அழகிய மலர்கள் என்ன பெருமையா இருக்கா

அழகிய மலர்கள்

காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரிகள், voice over…

VOICE OVER: ஒரு சமயம் விஜயநகர பேரரசர் எதிலும் பிடிப்பில்லாமல், 

மனவருத்தத்துடன் காணப்பட்டார்… யாரிடமும் சரியாக பேசாமல் ஒதுங்கி சென்றார்…

அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அரச சபையில் உள்ளவர்கள் ஆலோசனை நடத்தினர்…

அரச சபை கூடியது…

ஒருவர்: மன்னா.. உங்கள் மகிழ்ச்சிக்கு… நம் நாட்டில் 

கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம்…

Advertisement

மற்றவர்: தியாகங்கள் செய்து பரிகாரங்கள் செய்யலாம் மன்னா…

மூன்றாமவர்: வேண்டாம்… என்னுடைய படைகளின் வீரசாகச 

விளையாட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன்… அரசே..

VOICE OVER: இவர்களெல்லாம் பேசும் போது… தெனாலிராமன் மட்டும் 

பேசாமல் உட்கார்ந்திருந்தார்…

மன்னர்: என்ன தெனாலிராமரே… உங்களுக்கு மட்டும் என்மேல் 

அக்கரை இல்லை போலும்…

தெனாலிராமர்: இருக்கிறது மன்னா… என்னுடன் வாருங்கள்… உலகிலேயே 

Advertisement

அழகிய மலர்களைக் காட்டுகிறேன்…பிறகு உங்கள் வருத்தமெல்லாம் பறந்து போகும்…

மன்னர்: அப்படியானால் நாளைக்கே புறப்படலாம்…

அழகிய மலர்கள்

காட்சி-02 மன்னர், தெனாலி, மந்திரிகள், voice over…

VOICE OVER: மறுநாள், தெனாலிராமருடன், மன்னர் மற்றும்  

பட்டாளங்கள் புறப்பட்டனர்… அவர்கள் சென்ற வழியில் ஒரு பெரிய மைதானம் வந்தது…  அதில் நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மன்னர் அந்த குழந்தைகளுடன் விளையாடத் துவங்கினார்… தாn ஒரு நாட்டு அரசர் என்பதையும் மறந்து… அந்த குழந்தைகளை உப்பு மூட்டை தூக்கினார்… யானையைப் போல் மண்டியிட்டு முதுகில் சுமந்தார் மந்திரிகளும் தெனாலி ராமனும் இதைப் பார்த்து மகிழ்ந்தார்கள்… 

மன்னர்: தெனாலி.. உண்மையிலேயே.. இந்த குழந்தைகளுடன் 

விளையாடுவது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது… 

Advertisement

எப்படிப் பட்ட மனக்கவலைகளும் குழந்தைகளுடன் விளையாடும் போது… தீர்ந்து விடும்போல் இருக்கிறதே…

தெனாலிராமர்: உண்மைதான் மன்னா… குழந்தையும் தெய்வமும் 

ஒன்றுதான்… அதனால் தான் தெய்வத்தின் சந்நதியில் நமக்கு மன அமைதி கிடைப்பதைப் போல… குழந்தைகளிடத்திலும் கிடைக்கின்றது… 

மன்னர்: சரி தெனாலி…  உலகிலேயே அழகான மலர்களைக் 

காட்டுகிறேன் என்று கூறினீர்களே… எங்கே… 

தெனாலிராமர்: இந்த குழந்தைகள் தான் மன்னா அந்த அழகிய மலர்கள்..  

இதை விட அழகு வேறு எதற்கு வரும்… 

மன்னர்: நீங்கள் சொல்லுவதும் சரிதான்… ஒரு மாத மன 

Advertisement

இறுக்கத்தை… இந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் போக்கி விட்டனவே… நான் மாதம் ஒருமுறை இங்கு வரத்தான் போகிறேன்… மந்திரியாரே… குழந்தைகள் விளையாட பொம்மைகள் ஏற்பாடு செய்யுங்கள்…

VOICE OVER: என்ன குழந்தைகளே… பெரிய ராஜாவா இருந்தாலும் 

உங்களை எல்லாருக்கும் பிடிக்கும்… நீங்க தான் இந்த நாட்டோட அழகிய மலர்கள்… என்ன பெருமையா இருக்கா… 

********************************************************************************************************

Continue Reading
Advertisement