Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – Heaven On Earth – தெனாலிராமன் – தெனாலி காட்டிய சொர்க்கம்

நம்ம இயற்கை வளம்தான் சொர்க்கம்னு புரிஞ்சிகிட்டீங்களா செடிகளை வளர்ப்போம் சொர்க்கத்தைப் பார்ப்போம்

தெனாலி காட்டிய சொர்க்கம்

காட்சி-01 மன்னர், தெனாலி, மந்திரிகள், voice over..

VOICE OVER: முன்னொரு காலத்தில், விஜயநகரம் என்ற பெரிய 

சாம்ராஜ்யம் இருந்தது… அதை கிருஷ்ணதேவராயர் என்ற மன்னன் ஆண்டு வந்தார்…

கிருஷ்ணதேவராயர் மிகவும் நல்ல மன்னர்… தன் நாட்டில் வாழும் மக்கள்… எந்தக் குறையும் இல்லாமல்… மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று நினைத்தவர்… 

கிருஷ்ணதேவராயர் அரச சபையில் தெனாலி ராமனும் ஒருவர்…  தன்னுடைய நகைச்சுவையான பேச்சினால்… அரசரையும், மற்றவர்களையும் மகிழ்வித்தவர்… எதையும் சிந்தித்து செயல்படும் தெனாலி ராமனை… அரசருக்கு மிகவும் பிடிக்கும்… ஆனால் மற்ற மந்திரிகள் தெனாலிராமனை பொறாமையோடு பார்ப்பார்கள்…  

அன்றும் வழக்கம் போல் அரச சபை கூடியது… இன்று மன்னர் என்ன கூறப்போகிறார் என்று… அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்… 

மன்னர்: மந்திரிப் பிரதானிகளே..  மற்றும் சபையோர்களே.. நான் 

Advertisement

சிறு வயதில் ஒரு விஷயத்தைக் கேள்விப் பட்டிருக்கிறேன்..  அதாவது  உலகிலேயே, அதிக அழகும், மகிழ்ச்சியும் அளிக்கக் கூடிய இடம்… அது என்ன என்று கேட்ட போது..  அது தான் சொர்க்கம் என்று பெரியோர் சொன்னார்… அந்த சொர்க்கம் இப்போது எங்கே இருக்கிறது என்று உங்களில் யாராவது கூற முடியுமா… 

மன்னர்: என்ன தெனாலி ராமரே… உங்களுக்கும் 

தெரியவில்லையா… 

தெனாலிராமர்: மன்னா எனக்கு அந்த சொர்க்கம் இருக்கும் இடம் தெரியும்… 

ஆனால் அதை தங்களுக்கு காட்ட… சிறிது கால அவகாசமும், 1000 பொற்காசுகளும் வேண்டும் மன்னா… 

சபையோர்: ஹ…ஹ… ஹா.

ஹ…ஹ… ஹா.

மன்னர்: நிறுத்துங்கள்… தெனாலி எதையும் யோசிக்காமல் 

Advertisement

கூறமாட்டார்… தெனாலி… நீங்கள் கேட்ட படியே… நான் உங்களுக்கு பொற்காசுகளும், இரண்டு மாதம் அவகாசமும் தருகிறேன்… அதற்குள் நீங்கள் சொர்க்கத்தைக் காட்ட வேண்டும்… இல்லை என்றால் அதற்குரிய தண்டனையைப் பெற வேண்டும்… என்ன சொல்கிறீர்…

தெனாலிராமர்: அப்படியே ஆகட்டும் மன்னா….

சபையோர்: ஹ…ஹ… ஹா.

ஹ…ஹ… ஹா.

தெனாலி காட்டிய சொர்க்கம்

காட்சி-02 மன்னர், தெனாலி, மந்திரி, voice over…

VOICE OVER: ரண்டு மாதங்கள் சென்றன… தெனாலி ராமன் 

சபைக்கு வரவே இல்லை…  தெனாலியைக் காணாமல் அரசருக்கு கோபம்… 

Advertisement

மன்னர்: என்ன.. இன்றும் தெனாலி சபைக்கு வரவில்லையா… 

தெனாலிராமர்: அ..  அ… வ்வந்துவிட்டேன் மன்னா…

மன்னர்: நீங்கள் வந்து என்ன பயன்… நான் கேட்ட சொர்க்கத்தை 

எங்கு என்று கண்டுபிடித்து விட்டீரா.. 

தெனாலிராமர்: கண்டுபிடித்துவிட்டேன் மன்னா… நாளை காலை அங்கு 

செல்கிறோம்… .புறப்பட தயாராக இருங்கள்… 

VOICE OVER: அரசரும் தெனாலியும், மற்றும் சில மந்திரிகள், வீரர்கள் 

புடை சூழ அரண்மனையை விட்டு புறப்பட்டனர்… …ஒரு 

Advertisement

அழகான காட்டிற்குள் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார் தெனாலிராமன்… 

தெனாலிராமர்: மன்னா… இங்கு தங்கி பிறகு நாம் சொர்க்கத்தைப் பார்க்கப் 

போகலாம்…

மன்னர்: அதுவும் நல்ல யோசனை தான்…

வீரர்களே… இங்கு கூடாரம் அமைத்து… தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.. 

மன்னர்: மந்திரியாரே… இந்த இடம் எனக்கு மிகவும் 

பிடித்திருக்கிறது… தெனாலியின் தயவினால் தான்  இங்கு வர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… இத்தனை நாட்களாக.. நம் ராஜ்ஜியத்தில் இப்படி ஒரு இடம் இருப்பதாக நீங்கள் கூறவே இல்லையே… ம்…

மந்திரி: அது .. மன்னா.. நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்து 

Advertisement

விட்டேன்…  ஆனால் மன்னா… தெனாலி ராமன் தங்களுக்கு சொர்க்கத்தை அல்லவா காட்டுவதாக அழைத்து வந்தார்… அதைக் காட்டவே இல்லையே மன்னா… 

மன்னர்: ஆமாம்… எங்கே அந்த தெனாலி ராமன்…

நேற்று முழுதும் காணவே இல்லையே…

மந்திரி: அவர் எங்கே இனிமேல் வரப்போகிறார் மன்னா… அது தான் 

கைநிறைய பொற்காசுகள் கொடுத்து விட்டீர்களே…

மன்னர்: ம்… ம்… வெட்டிப் பேச்சு வேண்டாம்..  அவரை தேடும் வழியைப் 

பாருங்கள்…

மந்திரி: மன்னா… அதோ… அங்கே பாருங்கள்,,

Advertisement

தெனாலிராமர்: மன்னா… முதலில் இந்த மாம்பழத்தைச் சாப்பிடுங்கள்…  

பிறகு ஒரு விஷயம் சொல்கிறேன்… 

மன்னர்: ஆ.. இதுவல்லவோ கனி… எவ்வளவு ருசியை இதற்கு 

ஆண்டவன் கொடுத்திருக்கிறான்… சொர்க்கம்… சொர்க்கம்… ஆமாம்… சொர்க்கத்தையே காட்டுகிறேன் என்று கூறினீர்களே… எங்கே… 

தெனாலிராமர்: இந்த இயற்கை… பசுமையான மரங்கள்…  சுத்தமான 

காற்று… பூத்துக் குலுங்கும் செடிகள்… பன்னீர் தெளிப்பதைப் போல மழைச் சாரல்… சுவையான கனிவகைகள்… இவைகளை விடவா சொர்க்கம் பெரியது… இறைவன் சொர்க்கத்தை விட மேலான இந்த பொருட்களை நமக்கு அளித்திருக்கும் போது.. நாம் ஏன் இல்லாத சொர்க்கத்தை தேட வேண்டும்…  யோசியுங்கள் மன்னா… 

மன்னர்: அது சரி தெனாலி… இந்த இடம் சொர்க்கத்தைப் போல 

எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. ஆனால் நான் கொடுத்த பொற்காசுகள் என்னவாயிற்று… 

Advertisement

தெனாலிராமர்: மன்னா இந்த இடம் மட்டும் சொர்க்கமாக இருந்தால் 

போதுமா… நம் விஜயநகர சாம்ராஜ்யமே சொர்க்கமாக மாறவேண்டும் என்று…   நல்ல விதைகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி, பயிர் செய்ய சொல்லிவிட்டேன்… இன்னும் சில வருடங்களில் நம் மக்கள் எல்லோரும் இப்படிப் பட்ட சொர்க்கத்தை… அனுபவிப்பார்கள் மன்னா… 

மன்னர்: தெனாலி ராமரே நல்ல காரியம் செய்தீர்…

உங்களால் சொர்க்கம் நம் கைகளில் தான் இருக்கிறது…  என்பதை புரிந்து கொண்டேன்…

VOICE OVER: என்ன குழந்தைகளே.. நம்ம இயற்கை வளம்தான் 

சொர்க்கம்னு  புரிஞ்சிகிட்டீங்களா… செடிகளை வளர்ப்போம்… சொர்க்கத்தைப் பார்ப்போம்… என்ன… 

************************************************************************************************************

 

Advertisement
Continue Reading
Advertisement