Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – Lost History – தெனாலிராமன் – தெனாலியும் வரலாற்று புத்தகமும்மன்னர்

நாம எந்த நல்ல காரியத்தைச் செஞ்சாலும், அதுக்கு ஒரு பரிசு நிச்சயமா நமக்கு கிடைக்கும்

Tenali Raman – Lost History – தெனாலிராமன் – தெனாலியும் வரலாற்று புத்தகமும்மன்னர் PR038 09

தெனாலியும் வரலாற்று புத்தகமும்மன்னர், காட்சி-01 தெனாலி, மந்திரி,காவலாளி …

VOICE OVER: சில நாட்களாக தெனாலிராமன் அரச சபைக்கு வர 

வில்லை… தனது நல்ல நண்பரும் எடுத்துரைப்பாளருமான தெனாலியை சிலநாட்களாக பார்க்காததால் மன்னர் மிகவும் சோர்வடைந்தார்… 

ஒருவேளை தெனாலிக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கக் கூடும் என்று எண்ணி காவலாளி ஒருவனை அனுப்பி… தெனாலியைப் பற்றி கேட்டுவரச் சொன்னார்…

காவலாளி: மன்னா தெனாலிராமன் சிலநாட்களாகவே 

காலையில் சீக்கிரம் வெளியே சென்று விடுகிறாராம்… அவர் எங்கு செல்கிறார் என்று அவர் மனைவிக்கே தெரியவில்லையாம் மன்னா…

VOICE OVER: இந்த செய்தியைக் கேட்ட மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் 

இருந்தார்… 

Advertisement

மன்னர்: நாளை காலை தெனாலி அரச சபைக்கு வரவேண்டும்… 

இல்லையேல் தண்டிக்கப் படுவார் என்று கூறுங்கள்…

காவலாளி: அப்படியே செய்கிறேன் மன்னா…

VOICE OVER: மறுநாள் தெனாலிராமன் அரச சபைக்கு வந்தார்… 

மன்னர்: ஏன் இவ்வளவு நாட்களாக அரச சபைக்கு வரவில்லை… 

காவலாளியை அனுப்பிய பின் தான் வருவீரோ… 

மந்திரி: மன்னா பாருங்கள்… தெனாலி ராமன் அணிந்திருக்கும் 

உடைகளை… புதியதாக உள்ளதே… இவர் ஏதோ தவறான வழியில் பொற்காசுகளைப் பெற்றுள்ளார்… 

Advertisement

VOICE OVER: தெனாலி ராமன் அமைதியாக எழுந்து… பட்டுத்துணி 

போர்த்தி இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து மன்னரிடம் காண்பித்தார்…

மன்னர்: உங்கள் கையில் எப்படி இந்த புத்தகம் கிடைத்தது… 

தெனாலிராமன் : மன்னா… இந்தபுத்தகத்தை ஒரு அறிஞர் இங்கிருந்து 

கடத்திச் செல்ல முயன்றார்.. அவரிடம் நான் சகஜமாக பழகி அவருக்குத் தெரியாமலேயே… இந்த புத்தகத்தை மீட்டு வந்துள்ளேன்… அதனால் தான் அரச சபைக்கு சிறிது நாட்கள் வர இயல வில்லை மன்னா… 

மன்னர்: நன்றி தெனாலி… நன்றி… இந்த விஜயநகர வரலாற்று 

புத்தகத்தை மீட்டுத் தந்ததற்காக… உமக்கு ஆயிரம் பொற்காசுகள்… அன்பளிப்பாக தருகிறேன்..  

VOICE OVER: மந்திரியும், உதவியாளர்களும், தெனாலியை 

Advertisement

பொறாமையோடு பார்த்தார்கள்… 

என்ன குழந்தைகளே… நாம எந்த நல்ல காரியத்தைச் செஞ்சாலும், அதுக்கு ஒரு பரிசு நிச்சயமா நமக்கு கிடைக்கும்… என்ன… புரிஞ்சிகிட்டீங்களா… 

******************************************************************************************************

Continue Reading
Advertisement