Moral Stories - Tamil
Tenali Raman – Magic Chant – தெனாலிராமன் – திருடர்களைப் பிடித்த தெனாலி
தெனாலிராமன் நகைக்கடைக்காரரை பொய் சொல்ல வைச்சாலும் அது திருடங்களை பிடிக்கறதுக்காகத்தானே இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது ஒரு நல்லக் காரியம் நடக்கறதுக்காக ஒரு சின்னப் பொய் சொன்னா அது தப்பே இல்ல

திருடர்களைப் பிடித்த தெனாலி….
காட்சி-01 மன்னர், தெனாலி, அமைச்சர்கள்,voice over:
voice over: ஒரு காலத்தில் விஜயநகரத்தில் திருட்டும், கொள்ளையும் மிகவும்
அதிகமாக காணப்பட்டது… மக்கள் எல்லோரும் பயத்தில் நடுங்கினர்… இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை….
voice over: மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு இதைப் பற்றி மிகவும்
கவலையாக இருந்தது…தன்னுடைய காவலாளிகளைக் கொண்டு… இரவு பகலாக ரோந்து போடப் பட்டும்… திருட்டுபயம் குறைய வில்லை… தினமும் சபையில் மக்கள் இதைப் பற்றி குறைகள் சொன்ன வண்ணம் இருந்தனர்…
voice over: இதை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல்… மன்னர் மிகவும்
வேதனையில் இருந்தார்…. எந்த அமைச்சர்களுக்கும் இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பதென்றே தெரியவில்லை…
கடைசியில் மன்னர் தெனாலிராமனை அழைத்தார்…
அரசர்: தெனாலி ராமரே… நாட்டில் நடக்கும், திருட்டுக் கொள்ளைகளைப்
பற்றி தங்களுக்கு தெரியும்… இதை எப்படியாவது நிறுத்த வேண்டும்… அதற்கு வழி கூறுங்கள்… எத்தனை படைகள் வேண்டுமானாலும் தருகிறேன்…
தெனாலி: மன்னா.. படைகள் வேண்டாம்… நான் ஒருவனே போதும்….
இன்னும் ஒரு வாரத்தில் திருடர்களைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன்….
voice over: தெனாலி இவ்வாறு கூறி… அரச சபையை விட்டு சென்ற உடன்…
எல்லா அமைச்சர்களும் சிரித்தனர்…
****************************************************************************************************
காட்சி-02 ஊர்மக்கள்-2, voice over… மன்னர்,
தெனாலிராமன்,
VOICE OVER: மறுநாள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வினோதமான
பொழுதாக விடிந்தது…
ஒருவன்: என்னய்யா அதிசயமா இருக்கு… பக்கத்து தெருவுல
இருக்கானே… பெரிய நகைக்கடைக்காரன்…. அவன், ஒரு அதிசய மந்திரத்தை, கத்துகிட்டு வந்திருக்கானாம் ஐயா… அதை சொல்லிகிட்டுப் படுத்தா பணப்பெட்டியை திறந்து வச்சிட்டே தூங்கலாமாம் ஐயா…
மற்றொருவன்: அது உண்மையா இருந்தா நாமும் போய், மந்திரத்தை
கத்துக்க வேண்டியது தான்டா… இருக்கற ஓட்டை ஒடைசலையாவது காப்பாத்தலாமே டா..
VOICE OVER: அந்த நகைக்கடைக்காரர், படுக்கப் போகும் முன், கையைக்
கூப்பி ஒரு மந்திரத்தைச் சொன்னார்… பின் தன்னுடைய பெரிய பணப்பெட்டியை திறந்து வைத்து விட்டு தூங்கினார்…
VOICE OVER: அவர் குறட்டை விட்டுத் தூங்கும் போது… இரண்டு
திருடர்கள் பதுங்கி பதுங்கி அந்த இடத்திற்கு வந்தனர்…
VOICE OVER: கஜானாப் பெட்டியைத் திறந்து பணத்தை ஒரு
மூட்டையாக கட்டினார்கள்… பிறகு மெதுவாக பக்கத்து தெருவில் உள்ள முன்னால் மந்திரியின் வீட்டினுள் நுழைந்தார்கள்…
VOICE OVER: நகைக்கடைக்காரர் விழித்துக் கொண்டு
பார்த்தபோது… அவரின் கஜானா கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரிந்தது..
மன்னர்: என்ன முட்டாள்தனம்… எத்தனைக் கொள்ளைகள்
நாட்டில் நடப்பது தெரிந்தும், எதற்காக இந்த நகைக்கடைக்காரர், கஜானாவை திறந்து வைத்து விட்டே தூங்கினார்…
VOICE OVER: அப்போது தெனாலி ராமன் வீரர்களோடு, இரண்டு
திருடர்களையும், கையும் களவுமாக பிடித்தபடி, அரச சபைக்கு வந்தான்…
தெனாலி ராமன்: அரசே சொல்லியபடி திருடர்களை பிடித்து விட்டேன்…
சிறையில் அடைக்க உத்தரவிடுங்கள்….
மன்னர்: தெனாலி ராமரே… தனி ஒருவராய் எப்படி இவர்களை
உங்களால் பிடிக்கமுடிந்தது..
தெனாலி ராமன்: மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் மன்னா…
தெனாலி ராமன்: நகைக்கடைக்காரரிடம், நான் தான் மந்திரம் கற்றுக்
கொண்டு வந்ததைப் போல நடித்து, கஜானாவை இரவில் திறந்து வைத்து தூங்கச் சொன்னேன்.. அந்த செய்தியையும் நம் சாம்ராஜ்யம் முழுவதும் பரவச்செய்தேன்…..
தெனாலி ராமன்: நகைக்கடைக்காரர் வீட்டில், திருடர்கள் வரும்
பாதையில், கருப்பு நிற வர்ணத்தை, அவர்களுக்குத் தெரியாமல் தடவி வைத்தேன்… நான் நினைத்ததைப் போல அவர்கள் திருட வந்தவுடன், கால்களிலும், கைகளிலும் அது ஒட்டிக் கொண்டது..
தெனாலி ராமன்: திருடிய பணத்துடன் அவர்கள், நமது முன்னாள்
மந்திரி வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்… இத்தனை நாள் அந்த மந்திரியார் தான் திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்று கண்டுபிடித்தேன்…
தெனாலி ராமன்: கால்களில் உள்ள கருப்பு வர்ணத்தை வைத்து…
திருடர்களைப் பிடித்து இழுத்து வந்தேன்..
மன்னர்: அப்படியா… மிகவும் நல்லது தெனாலிராமரே…
உங்களைப் போல திறமைசாலிகள் ராஜ்யத்தில் இருந்தால் எப்படிப் பட்ட பிரச்சினைகளும் தீர்ந்து விடும்…
VOICE OVER: அடைக்கலம் தந்த மந்திரியும், திருடர்களும்,
சிறையில் தள்ளப் பட்டார்கள்…
என்ன குழந்தைகளே… தெனாலிராமன் நகைக்கடைக்காரரை பொய் சொல்ல வைச்சாலும்… அது திருடங்களை பிடிக்கறதுக்காகத்தானே… இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது… ஒரு நல்லக் காரியம் நடக்கறதுக்காக ஒரு சின்னப் பொய் சொன்னா… அது தப்பே இல்ல… சரிதானே…
********************************************************************************************************