Connect with us

Moral Stories - Tamil

Tenali Raman – River Water – தெனாலிராமன் – எதுவும் நிரந்தரமல்ல

போறதைப் பத்திக் கவலைப் படாம இனி வர்றதைப் பத்தி யோசிச்சா தான் நாம முன்னேறமுடியும்

எதுவும் நிரந்தரமல்ல….

காட்சி-01 மன்னர்,தெனாலி,தேவசேனர்,அமைச்சர்கள்,voiceover…

VOICE OVER: ஒருநாள், வழக்கம் போல் அரச சபை தொடங்கிய உடன்,

சபையில் இருந்த மூத்த அறிஞர் தேவப்பிரியன் எழுந்தார்…

தேவசேனர் அரசே வணக்கம்… எனக்கு மிகவும் வயதாகி விட்டது..

இனிமே என்னால், உங்கள் அரச சபைக்கு வர இயலாது.. நான் என் சொந்த கிராமத்துக்கு சென்று… ஓய்வெடுக்க எண்ணுகிறேன்… ஆகையால்

தயவுகூர்ந்து என்னை போக அனுமதிக்க வேண்டுகிறேன்…

அரசர்: தேவப்பிரியரே…வயதானால்என்ன..உங்கள்அறிவுதானேஇந்த

நாட்டிற்குத் தேவை… அறிவுக்கு வயதாகுமோ… தயவு செய்து நீங்கள் போகவேண்டாம்…

தேவப்பிரியர்: இல்லை… மன்னா… என்னால் நடக்க கூட முடியவில்லை…

Advertisement

அரச சபையில் உட்காரவும் முடியவில்லை… என்னை போக அனுமதியுங்கள்…

அரசர்: சரி உங்கள் இஷ்டம்… போய் வாருங்கள்…

அரண்மனை கணக்கரே… தேவப்பிரியருக்கு… நிறையப் பொற்காசுகள் கொடுத்து வழியனுப்பி வையுங்கள்…

VOICE OVER: அரண்மனைக்கு வந்த மன்னனுக்கு தேவப்பிரியர்

நினைவாகவே இருந்தது.. சிறுவயது முதல் பழகிய தேவப்பிரியரை… அவரால் பிரிந்திருக்க முடியவே இல்லை… அரசரின் முகம் களை இழந்தது…

VOICE OVER: இதை தெனாலி ராமன் கவனித்தான்… ஒரு முடிவுக்கு

வந்தான்…

காட்சி-02 மன்னர், தளபதிvoic, அமைச்சர்கள், voice over…

மன்னன்: தளபதியாரே… ஒரு மாதம் கழித்துக் கூடும் இந்த சபையில்

ஏன் தெனாலி வரவில்லை…

Advertisement

தளபதி: மன்னா, சபை கூடும் நேரத்தை அறிவிக்க… நான் அவர் வீடு

சென்றிருந்தேன்… ஆனால் வீடு பூட்டி உள்ளது… தெனாலி எங்கு சென்றார் என்று தெரியவில்லை… படைகளை அனுப்பி நாற்புறமும் தேட உத்தரவிட்டுள்ளேன் மன்னா…

மன்னன்: என்னது தெனாலிராமனும் இந்த ராஜ்ஜியத்தை விட்டுச்

சென்று விட்டாரா… நான் என்ன பாவம் செய்தேன்… என்னை இறைவன் இப்படி சோதிக்கிறார்… ஐயோ என் மனம் மிகவும் வேதனைப் படுகிறதே…

தளபதி: மன்னா… நீங்கள் கவலைப் படக்கூடாது…. தெனாலி ராமன்

விரைவில் திரும்பி வர இறைவனை நாம் பிரார்த்திப்போம்… அது வரை மனநிம்மதிக்காக நீங்கள் நகர் வலம் சென்று வாருங்கள் மன்னா…

மன்னன்: அதுவும் நல்ல யோசனைதான்… அதற்குண்டான

ஏற்பாடுகளை செய்யுங்கள்…

காட்சி-03 மன்னர், தெனாலி, voice over…

VOICE OVER: மந்திரியின் யோசனைப்படி மன்னர் நகர்வலம் வந்தார்…

Advertisement

கோவில் குளம் என்று எல்லா இடங்களுக்கும் சென்றார்…

கடைசியில் ஒரு ஆற்றங்கரைக்கு வந்தார்… அங்கு தெளிந்த நீர் ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது.. அங்குள்ள ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு இருந்தார்…

மன்னர்: ஆஹா… என்ன அருமை… என்ன அழகு… ஆற்றில் நீர்

தெளிவாக நீல நிறத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாக ஓடுகிறதே… பார்க்கப் பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகிறது..

VOICE OVER: சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு மன்னர் தன் குதிரையில்

ஏறிப் புறப்பட்டார்…

மறுநாள் சூரியன் உதித்தது… மன்னர் தன் குதிரையில்

அமர்ந்து அதே இடத்திற்கு வந்தார்…

முனிவர்: நேற்றுப் பார்த்த அதே தெளிவு…

மன்னர்: ஹ… ஹ… ஹ…. ஹ… ஹ… ஹ….

Advertisement

மன்னர் முனிவரே… எதற்காக இப்பொழுது சிரித்தீர்… நான் ஆற்றின்

அழகை வர்ணித்தது தவறா?

முனிவர்: தவறுதான் மன்னா….

மன்னர்: என்ன தவறு…

முனிவர்: நேற்றுப் பார்த்த தண்ணீர் என்கிறீர்களே… அதில் தான்

தவறு… மன்னா ஆற்று நீர் நின்று கொண்டு இருந்தால் அதில் அழகு இருக்காது… அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.. நேற்று நீங்கள் பார்த்த நீர் எங்கோ ஓடிப் போய்விட்டது.. இன்று நீங்கள் பார்ப்பது புதிய தண்ணீர்… அதைப் போல தான் மனித வாழ்க்கையும்… மனிதர்கள் வருவார்கள் போவார்கள்… அப்போது தான் இந்த உலகமே அழகாகத் தெரியும்… அது புரியாமல் சபையில் இருந்து சென்றவயதானவரைப் பற்றி கவலைப் படுகிறீர்களே… யாருக்காகவும் இந்த உலகம் சுழல்வது நின்றுவிடாது மன்னா…

மன்னர்: புரிகிறது முனிவரே… ஆனால் இளம்வயது… என்னுடைய

நண்பன் தெனாலிராமன்.. அவரும் அல்லவா என்னை விட்டு சென்றுவிட்டார்… உங்களின் ஞான திருஷ்டியால் அவர் இருக்கும் இடத்தைக் கூறமுடியாதா..

முனிவர்: ஹ. ஹ.. ஏன் முடியாது… நான் நினைத்தால் உங்கள்

தெனாலிராமனை இப்போதே உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவேன்… ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்…

Advertisement

மன்னர்: என்ன செய்ய வேண்டும்… பத்தாயிரம் பொற்காசுகள்

வேண்டுமா… எடுத்துக் கொள்ளுங்கள்… என் தெனாலிராமன் இருக்கும் இடத்தைக் கூறுங்கள்…

முனிவர்:

(தெனாலிராமன்) இந்த துறவிக்கு எதற்கு மன்னா பொற்காசுகள்…

யாருக்காகவும் வருத்தப்படாமல் நீங்கள் முன்னைப்போல மகிழ்ச்சியாக இந்த நாட்டை ஆள வேண்டும்… அது தான் என் வேண்டுகோள்…

மன்னர்: தெனாலிராமரே… வாழ்க்கையின் தத்துவத்தை எனக்கு

புரியவைத்த நீங்கள் தான் என்னுடைய உண்மையான தோழன்…

VOICE OVER: என்ன குழந்தைகளே… போறதைப் பத்திக் கவலைப் படாம..

இனி வர்றதைப் பத்தி யோசிச்சா தான்… நாம முன்னேறமுடியும்னு இந்த கதையில இருந்து புரிஞ்சிகிட்டீங்களா….

********************************************************************************************************

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement